நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

- செ.கார்த்திகேயன், செ.கிஸோர் பிரசாத் கிரண்.

வேலைகளை ஸ்மார்ட்டாக்கும் ஸ்மார்ட்போன்!

நம் வேலைகளை ஸ்மார்ட்டாக செய்துமுடிக்க அவசியம் தேவை ஸ்மார்ட்போன். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலாவ, இ-மெயில்களைப் பார்க்க, இ-ஷாப்பிங் செய்ய, ஆன்லைன் டிக்கெட்களை வாங்க உதவுவதுடன், நினைவூட்டல்கள், அலாரம், கேமரா என ஒரு ஸ்மார்ட்போன் மூலம் பல வேலைகளைச் சிறப்பாக செய்து முடித்துவிட முடியும்.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

அடக்கமாகவும், எளிமையாகவும் குறைந்த விலையில் நிறைந்த சேவைத் தரக்கூடிய ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்பினால், மோட்டோ இ மற்றும் ஜி, ஆண்ட்ராய்டு ஒன், விண்டோஸ் நோக்கியா லூமியா ரக போன்களை பரிசீலிக்கலாம்.

லேப்டாப்: சின்ன கணினி!

இன்றைக்கு உலகத்தையே நம் கையில் கொண்டுவந்துவிட்டன கேட்ஜெட்டுகள். அலுவலக வேலைகளை டேப்லெட்களைவிட இன்னும் வேகமாக செய்து முடிக்க, பிரசன்டேஷன் தயாரிக்க, பிரவுஸிங் போன்ற பல வேலைகளுக்கு லேப்டாப் சிறந்த கேட்ஜெட்டாக அமையும்.
லேப்டாப்களில் பல வகைகள் உள்ளன. அதில் ‘அல்ட்ரா-புக்’ வகைகள் தற்போது பல இளைஞர் களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறைவான எடை மற்றும் நீடித்து உழைக்கும் பேட்டரி இந்த அல்ட்ரா-புக் லேப்டாப்களின் சிறப்பம்சம்.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

நெடுந்தூரப் பயணங்களின்போது லேப்டாப்  இருந்தால், அலுவலகப் பணிகளை எளிதாக முடித்துவிட முடியும். பரிசீலனைக்கு: Asus X551CA-SX075D, HP 15rOO5TX.

டேப்லெட்: அலுவலக வேலைகளுக்கு ஆபத்பாந்தவன்!

இன்றைய இயந்திர யுகத்தில், பயணிக்கும் நேரம், படுக்கும் நேரம், சாப்பிடும் நேரம் என எல்லா சமயத்திலும் அலுவலக வேலைகள் நம்மை துரத்திக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்கு ஈடுகொடுக்கும்விதமாக, அந்த வேலைகளை விரைந்து செய்துமுடிக்க உதவுகிற வகையில் இளைஞர்களுக்கு கிடைத்திருப்பதுதான்  டேப்லெட். 

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

இதன்மூலம் அலுவலக ஃபைல்களை எளிமையாக கையாள முடியும். இன்றைய நிலையில் பெரும்பாலான டேப்லெட்கள் கீபோர்டு வசதியுடன் வெளிவருவதால், டைப் செய்வதில் சிரமம்  இருக்காது. குறைந்த விலையில் நிறைந்த சேவையைத் தரக்கூடிய டேப்லெட்களை இளைஞர்கள் விரும்பினால், அசஸ் ஃபோன்பேட் 7 (Asus Fonepad 7),  லெனோவோ ஐடியா-பேடு A1000 (Lenovo Ideapad A1000) ஆகிய டேப்லெட்டை பரிசீலிக்கலாம்.

 டாங்கில்: இணையத்தின் நுழைவாயில்!

ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் எதுவாக இருந்தாலும் அதன் பயன்பாட்டுக்கு சுவாரஸ்யம் சேர்ப்பது இன்டர்நெட்தான். முன்பெல்லாம் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமானால் மோடம் என்கிற கருவியைக் கையாளவேண்டி இருந்தது. வொயர்கள் மூலம் இந்த மோடம் எப்போது செயல் படும் அல்லது செயல்படாது என்பதைச் சொல்லவே முடியாது.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

இதற்கொரு தீர்வு கிடைக்காதா என எல்லோரும் தவித்தபோது அறிமுகமானதே இந்த டாங்கில். இது மோடம்களின் சுருக்கமாகவும், அதேசமயம் வொயர் லெஸ் தொழில்நுட்பத்துடனும் செயல்படக் கூடியது. இதனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. மோடத்தைவிட வேகமாக இயங்கும் இந்த டாங்கில்கள், செயல்படாது என்கிற பேச்சே இல்லை. பின்வரும் டாங்கில்கள் பரிசீலனைக்கு: D-Link DWP, மைக்ரோமேக்ஸ் MMX 210G, Huawei E303F.

ஹெட்செட்: பயன்பாடுகள் பலவிதம்!

ஹெட்செட்ஸ் பயன்படுத்தாத இளைஞர்களை இன்றைய உலகத்தில் பார்க்க முடியாது. ஹெட்செட்களின் முக்கியமான பயன்பாடு பாடல்  கேட்பதுதான். பெரும்பாலான ஹெட்செட்களில் இன்பில்ட் மைக் பொருத்தப்பட்டுள்ளதால், பயணத்தின்போது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் போனில் பேச முடியும். 

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

சாதாரண ஹெட்செட்கள்் வொயர் (wire) மூலம் இயங்குபவை. இந்த ஹெட்செட்களைப் பயன்படுத்த கண்டிப்பாக போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ப்ளூ-டூத் ஹெட்செட்டை வொயர் இணைப்பு இல்லாமலே பயன்படுத்தலாம்.  இந்த ப்ளூ-டூத் ஹெட்செட்கள் நடந்துசெல்லும் போது  பேசிக்கொண்டே செல்ல வசதியாக இருக்கும். பின்வரும் ஹெட்செட்கள் பரிசீலனைக்கு: Sennheiser CX25, சாம்சங் BHM1100NBEGINU In-the-ear, Zebronics ZEB-BH498.

பவர்பேங்க்: சக்தி தரும் சார்ஜர்!

பேட்டரிகள் இல்லாவிட்டால், கேட்ஜெட்கள் இயங்காது. இந்த பேட்டரிகளுக்கு சார்ஜ் (பவர்) என்பது மிகவும் முக்கியம். ஆனால், இன்றைய இளைஞர்களின் இணைய பயன்பாட்டுக்கு ஈடு தருகிற மாதிரி  பேட்டரிகள் இல்லை. இதற்கொரு தீர்வு தரும் விதமாக உருவாக்கப்பட்டதே பவர்பேங்க் சார்ஜர்.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

பல வகைகளில், பல அளவுகளில்  கிடைக்கும் பவர்பேங்க் சார்ஜர்கள் தொலைதூரப் பயணங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேட்ஜெட்டில் பேட்டரி போதிய அளவு இல்லாத நேரத்தில் இந்த பவர்பேங்க் போர்ட்டபிள் சார்ஜர்களை (இந்த சார்ஜர்களை ஏற்கெனவே சார்ஜ் செய்திருக்க வேண்டும்) பயன்படுத்தி, நம் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். சோனி, சாம்சங் உள்பட பல நிறுவனங்கள் பவர்பேங்க் சார்ஜர்களை வெளியிட்டுள்ளன.

இ-புக் ரீடர்: புத்தகத்தின் மறுவடிவம்!


இன்றைய இளைஞர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தாலும், புத்தகத்தின் வழியாக வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பது சந்தேகமே. இதற்கு ஒரே காரணம், இன்றைய இளைஞர்களின்  கைகளில் தவழும் இ-புக் ரீடர்தான். கதைப் புத்தகங்கள்தான் என்றில்லை; படிப்பு தொடர்பான புத்தகங் களைக்கூட  உடன் வைத்திருந்து படிக்க இந்த இ-புக் ரீடர் பெரும் துணையாக இருக்கிறது. புத்தகங்களை சுமப்பது, அதைப் பாதுகாப்பாக எடுத்துவைத்து பராமரிப்பது என எந்தத் தொல்லை யும் இ-புக் ரீடரில் இல்லை.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

புத்தகங்கள் தவிர, செய்திதாள்கள், பத்திரிகைகளைப் படிக்கவும் இது மிகவும் உதவும்.  நீங்கள் படிக்க நினைப்பதை இன்டர்நெட் மூலம் டவுன்லோடு செய்தும், வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்தி யும் படிக்கலாம். பல வாரங்கள் நீடித்து உழைக்கும் பேட்டரியும், நீண்ட நேரம் படித்தாலும் கண்ணுக்கு எந்தவித பாதிப்பும் தராத இங்க் டிஸ்ப்ளேயும்தான் இதன் லேட்டஸ்ட் சிறப்பம்சம்.

பென்டிரைவ்: இளைஞர்களின் ஆறாவது விரல்!

படிக்கிற, வேலை பார்க்கிற இளைஞர்கள் அனைவருக்கும் பென்டிரைவ் கட்டாயம் தேவை. இதன் அதிகபட்ச பயன்பாடு தகவல்களைச் சேமித்துவைப்பதே. முன்பு தகவல்களை எடுத்துச் செல்ல ஃப்ளாப்பி, சிடி டிஸ்குகளை பயன்படுத்தி னோம். இதிலிருந்த சில குறைபாடுகள் காரணமாக, அவை மறைந்து, அட்வான்ஸ்டு தொழில்நுட்பமாக இந்த பென்டிரைவ் வந்திருக்கிறது.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

வேலை தொடர்பான டாக்குமென்ட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இதில் சேமிக்கலாம். இதில் பென்டிரைவ், ஓடிஜி பென்டிரைவ் என்று இரண்டுவகை உண்டு. பென்டிரைவை உங்களது டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில்  உள்ள USB போர்ட்டில் மட்டுமே இணைக்க முடியும். ஆனால், OTG பென்டிரைவை  லேப்டாப், ஸ்மார்ட் போன் என அனைத்திலும்  இணைக்கலாம். டிரான்சன்டு, சேன்டிஸ்க் நிறுவனங் களின் பென்டிரைவ்கள் இன்றைய நிலையில் பிரபலமானதாக இருக்கின்றன.

எக்ஸ்டெர்னல் ஹார்டுடிஸ்க்: எக்ஸ்ட்ரா சேமிப்பு!

அனைத்து கேட்ஜெட்களிலும் தகவல்களைச் சேமிப்பதற்காக தனிப்பட்ட தொழில்நுட்ப வசதி உண்டு. ஆனால், இன்றைய செயல்பாடுகளுக்கு இந்த சேமிப்புத் தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லை. சேமிப்பு முழுமை அடைந்துவிட்டால், முக்கியமான ஃபைல்களை நீக்க வேண்டும். எந்த  ஃபைலையும் நீக்க முடியாது என்கிற நிலையில் கைகொடுக்கும் கேட்ஜெட்தான் இவை.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

பார்ப்பதற்கு சிறியதாகவும், அடக்கமாகவும் இருக்கும் இவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இவை பல்வேறு வடிவங் களில், பல சேமிப்பு அளவுகளில் கிடைப்பது தகவல்களைச் சேமித்துவைக்கும் பிரச்னைக்கு  நல்ல தீர்வாக இருக்கிறது. எக்ஸ்டெர்னல் மெமரி கார்டுகள் டிரான்சன்டு, சேன்டிஸ்க் போன்ற மெமரி கார்டுகளும், Seagate Expansion 2 TB, Adata HV620 1TB போன்ற ஹார்டுடிஸ்குகளையும் பரிசீலிக்கலாம்.

கேமரா: நிகழ்வை நிலைநிறுத்தும்!

இன்று ஸ்மார்ட் போன்களில் அதிகபட்ச பிக்ஸல்களுடன் கேமராக்கள் வெளிவந்தாலும், புகைப்படம் எடுப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேமராக்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். ஸ்மார்ட் போன்களை வைத்து செல்ஃபி மற்றும் இன்னும் பிற புகைப்படங்களை எடுத்துக்கொண்டாலும், கேமராக்கள் வழியாக எடுக்கும் புகைப்படங்களின் தரமே தனியானதாக இருக்கின்றது.

இளைஞர்களுக்கு பயன்படும் அவசியமான 10 கேட்ஜெட்கள்!

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர் களும் இதையே விரும்புகிறார்கள். தொழில்ரீதியாக, தனிப்பட்ட பயன்பாடுகள் என ஸ்மார்ட் போன் இருப்பவர்கள் உள்பட எல்லோரிடமும் ஏதேனும் ஒரு கேமரா இருக்கத்தான் செய்கிறது. இந்தவகை கேமராக்களில் டிஜிட்டல் மற்றும் டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் குறைந்த விலையில் நிறைந்த சேவையை வழங்கக்கூடியதாக விளங்குகின்றன.