ஸ்பெஷல் -1
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• 'ஒருநாள்... ஒருநாள் நீங்க ஹீரோயினா இருந்து பாருங்க. அப்போ தெரியும் அது எவ்வளவு கஷ்டம்’னு எனப் புலம்பியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. 'மேக்கப் செக், ஹேர் செக், காஸ்ட்யூம் செக் என எப்பவும் அலர்ட்டாக இருந்து மூளையே மரத்துவிட்டது. செட்ல இருந்து எப்படா எஸ்கேப் ஆவோம்னு ஏங்கிட்டு இருக்கேன். பேசாமா ஸோம்பி ஆகிடலாம்னு இருக்கு. மேக்கப், பேக்கப்னு எந்தக் கவலையும் இல்லாம இருக்கலாமே!’ என மெலிதாக கடுப்ஸ் காண்பித்திருக்கிறார் பிரியங்கா. என்னமா... நீங்க இப்படிச் சொல்லலாமா?

இன்பாக்ஸ்

•  'சர்ச்சை கான்’ சல்மான் கான் இத்தனை பாசமானவரா என சந்தோஷ ஷாக் அடித்துக்கிடக்கிறது பாலிவுட். தன் தங்கை அர்பிதா கானின் திருமணத்தில் சல்மான் பொழிந்த பாச மழை அப்படி. திருமண வேலைகளை முன்னின்று பார்த்துக்கொண்டதுடன், அமீர் கான், கேத்ரீனா கைஃப், பிரியங்கா சோப்ரா, ராம் சரண், சானியா மிர்சா... ஆகியோரை பெர்சனலாக வரவழைத்து, வரவேற்று நிகழ்வை மிக விமரிசையாகக் கொண்டாடிவிட்டார் சல்மான் பாய். சல்மானின் பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர் அர்பிதா    கான் என்பது இங்கு சுவாரஸ்யப் பின்னணி. உங்க நிக்காஹ் பிரியாணி எப்போ சல்மான்?

• மீண்டும் 'கல்யாணம், கச்சேரி’ லைம்லைட்டில் த்ரிஷா. அவருக்கும் சினிமா தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது என செய்தி பரபரத்தபோதே... 'அப்போ ராணாவோட வாழ்க்கை?’ என்ற சந்தேகமும் கிளம்பியது. 'அது... கன்னட சினிமா ஹீரோயின் ராகினியோடு ராணா நெருங்கியதால்தான் த்ரிஷா கோபத்தில் வருண் மணியனுடன் கமிட் ஆகிவிட்டார்’ என ஒரு பட்டாசைக் கொளுத்திப்போட்டார்கள். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் உடனடியாக மறுக்க, ஆண்கள் இருவரும் சைலன்ட். அட... சினிமால இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

•  சீன ஓப்பன் பேட்மின்டனில் இந்த முறை உலகத்துக்கே ஆச்சர்யம்தான். பேட்மின்டன் போட்டியில் வீழ்த்தவே முடியாத வீரராக வலம்வந்த சீனாவின் லின் டானைப் புரட்டியெடுத்து பட்டம் வென்றிருக்கிறார் இந்தியாவின் ஸ்ரீகாந்த். ஐந்து முறை உலக சாம்பியன், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் என மெகா கிராஃப் வைத்திருக்கும் டான் லின்னை அவரது சொந்த மண்ணில் வீழ்த்துவது அத்தனை சுலபம் அல்ல. ''நான் வெற்றியைப் பற்றி எண்ணிப்பார்க்கவே இல்லை. ஆட்டத்தை ரசித்து ஆடுவதிலேயே இருந்தேன். லின் எந்த நேரமும் வீறுகொண்டு வரக்கூடியவர். எனவே, எனது கடைசி பாயின்ட்டைப் பெற்றபோதுதான்,  'நாம சாம்பியன் ஆகிட்டோம்!’ என்பதே ஞாபகத்துக்கு வந்தது!'' என்று சிரிக்கிறார் ஸ்ரீகாந்த். இந்தத் தொடரில் மகளிர் பிரிவு சாம்பியன் நமது சாய்னா நெய்வால். கலக்குங்க பாஸ்!

•  'இன்டர்ஸ்டெல்லர்’ படம் புரியாமல் பிராண்டிக்கொண்டிருப்பவர்களுக்கு, உதவ முன் வந்திருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். 'புதிதாக என் படம் பார்ப்பவர்களுக்கு, கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். இன்னும் சிலர் திடீர் ஆர்வத்தோடு விண்வெளி விஷயங்களைத் தேடலாம். அவர்களுக்காக இன்டர்ஸ்டெல்லர் படம் குறித்து விரிவான அறிவியல் காமிக்ஸ் வெளியிடும் திட்டம் இருக்கிறது!’ என்கிறார். நாங்க அப்பவே 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை ரிலீஸ் பண்ணிட்டு, அப்புறம் பிரஸ் மீட்ல விளக்கம் சொன்னவங்க பாஸ¨!

•  டெல்லியில் தேர்தல் ஜுரம் ஆரம்பம்! கடந்த தேர்தலில் ஆச்சர்யமாக ஆட்சியைக் கைப்பற்றினாலும், அசட்டு வியூகத்தால் அதைக் கோட்டைவிட்ட கெஜ்ரிவால், இந்த முறை ஆரம்பம் முதலே அதிரடிகாட்ட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். 'ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுக் கட்சிக்காரர்கள் வாக்காளர்களுக்கு மது, பணம், பொருட்களைக் கொடுத்தால் உடனே எங்களுக்குத் தகவல் கொடுங்கள். அதைப் பதிவுசெய்து குற்றத்தை பொதுவில் அம்பலப்படுத்துவோம்!’ என ஆம் ஆத்மி அறிக்கை வெளியிட, 'இவங்களுக்கு வேற வேலையே இல்லை’ எனக் கடுப்பில் இருக்கிறார்கள் மற்ற கட்சிக்காரர்கள். அடுத்த அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்களா?!

இன்பாக்ஸ்

•  அட... 20 வருடங்கள் போயே போச்! 1994-ம் ஆண்டு நவம்பரில் உலக அழகிப் பட்டம் பெற்றார் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு நடந்தது 'அழகிய லைலா’ வரலாறு. அப்போதைய ஐஸ்வர்யா போட்டோவுக்கும் இப்போது 41 வயதில் அவரது முகப் பொலிவுக்கும் ப்ப்பா... என்னா வித்தியாசம். 'அன்னை தெரசாவைச் சந்திக்க வேண்டும்’ என்பதை அப்போது வாழ்க்கை லட்சியமாகக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, இப்போது தன் மகள் ஆராத்யாதான் தன் வாழ்க்கையின் வரம் என உருகியிருக்கிறார். எவர் கிரீன் அழகி!

இன்பாக்ஸ்

•  18 வயதாகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நேஹா குப்தா 'உலகக் குழந்தைகள் அமைதிப் பரிசு’ வென்றுள்ளார். வருடம்தோறும் குழந்தைகளின் உரிமைகளுக்காக, சேவைகளுக்காகப் பாடுபடுபவர்களுக்கு நெதர்லாந்து நாடு இந்த விருதை வழங்கிக் கௌரவித்துவருகிறது. கடந்த முறை இந்தப் பரிசை வென்றவர், இந்த வருடம் நோபல் தொட்ட மலாலா. பல வருடங்களாகவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதிலும், அவர்களுக்கு சேவை செய்வதிலும் செயல்பட்டுவந்த நேஹாவுக்கு இந்த வருடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ''உலகில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருவது வருத்தமான விஷயம். அவர்களுக்குப் போதுமான உதவிகள் கிடைப்பது இல்லை. அவர்களின் பாதிப்பு திரும்பவும் சமூகத்தைப் பாதிப்பதாகவே அமையும். அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதில் இன்னும் நான் பல மைல் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது!'' என்று கூறியிருக்கிறார் நேஹா. ஆஹா!

•  அமெரிக்கத் தடகள வீராங்கனை மேகி வேஸ்ஸி கொஞ்சம் வித்தியாசமானவர். ஓட்டப் பந்தயத் திறமைகளைத் தவிர்த்து, அவரிடம் இருக்கும் எக்ஸ்ட்ரா திறமை ஃபேஷன் டிசைனிங். பார்ட்டிகளுக்கும் போட்டிகளுக்கும் தானே தனக்கென வடிவமைத்த ஆடைகளை அணிந்துதான் செல்வார். இதனால் மைதானத்தில் ஒவ்வொரு முறையும் மேகியின் வித்தியாச ஆடை அழகைக் காண்பதற்கே பெரும் கும்பல் திரண்டது.  'என்னைப் பார்க்க வர்றவங்க, நான் விளையாடுறதையும் பார்ப்பாங்கள்ல!’ என்கிறார் மேகி. அழகி வார்த்தைக்கு அப்பீல் ஏது?

இன்பாக்ஸ்

•  'உலகத்தின் கவர்ச்சியான ஆண்’ என ஆஸ்திரேலிய நடிகர் கிரிஷ் ஹேம்ஸ்வொர்த்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது அமெரிக்காவின் பிரபல வார இதழ் 'பீப்பிள்’. 'தோர்’, 'அவெஞ்சர்ஸ்’ படங்கள் மூலம் பிரபலமான கிரிஷ் செம நக்கல் பேர்வழி. 'இனி நான் வீட்டுப் பாத்திரம் கழுவத் தேவை இல்லை. என் குழந்தைக்கு டயப்பர் மாற்றத் தேவை இல்லை. ஏன்னா, 'இந்த வருடம் கவர்ச்சியான ஆண் பட்டம் எனக்குத்தான் கிடைக்கும்’னு என் மனைவிகிட்ட பெட் கட்டியிருந்தேன். அதில் இப்போ ஜெயிச்சுட்டேன். ஹை ஜாலி!’ என சந்தோஷப்பட்டிருக்கிறார். வெளியேதான் சூப்பர் ஹீரோ... வீட்ல எல்லாம் கட்டில், பீரோதான்!