Published:Updated:

சர்வதேச அளவில் கடத்தப்படும் விலங்குகளும் சில வில்லங்க ஐடியாக்களும்..! #AnimalTrafficking

சர்வதேச அளவில் கடத்தப்படும் விலங்குகளும் சில வில்லங்க ஐடியாக்களும்..! #AnimalTrafficking
சர்வதேச அளவில் கடத்தப்படும் விலங்குகளும் சில வில்லங்க ஐடியாக்களும்..! #AnimalTrafficking

சர்வதேச அளவில் கடத்தப்படும் விலங்குகளும் சில வில்லங்க ஐடியாக்களும்..! #AnimalTrafficking

அபின், கொக்கைன், கஞ்சா போதைமருந்து என ஒவ்வொரு கடத்தலுக்கு பின்னாலும் இருக்கிறவர்கள் செயல்படுகிற விதங்களை அவ்வளவு எளிதில் கண்டுப்பிடித்து விட முடியாது. ஸ்கார்ட்லாந்து போலீசிலில் இருந்து அமெரிக்காவின் FBI வரை கடத்தல்களைத்  தடுக்க முடியாமல் இப்போது வரை போலீசார் வெறும் பிரஸ் மீட் மட்டுமே  நடத்திக் கொண்டிருக்கிறார்கள். யாரும்   கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு அப்டேட் ஆகியிருக்கிறார்கள் கடத்தல்காரர்கள். கொரியரில் ஆரம்பித்து சூட்கேஸ் வரை பல யுத்திகளை கையாளுகிறார்கள். உலகெங்கிலும் விலங்குகளை கடத்துவதில் பல குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உயிருடன் விலங்குகளை கடத்துவதுதான் அவர்களின்  அஜெண்டா. கையும் களவுமாக சிக்கி கொள்ளும் போது மட்டுமே உண்மை உலகத்திற்கு தெரிய வருகிறது. வாட்டர் பாட்டிலில் வைத்து புறாக்களை கடத்துவது, கால்களுக்கு இடையில் குருவிகளை கடத்துவது, சூட்கேசில் வைத்து புலிக்குட்டியை கடத்துவது, குடுவைகளில் வைத்து பாம்புகளை கடத்துவது, கூரியரில் வைத்து புலித்தோல் கடத்துவது, வாட்டர் பாக்கெட்டில் மீன்களை கடத்துவது என கடத்தல் குறித்த செய்திகள் எல்லாம் ரூம் போட்டு யோசித்த ஐடியாக்களே.
 

வாலன்சினா என்கிற 19 வயதுடைய வாலிபர் மெக்சிகன் எல்லையில் அறிமுகமாகிற ஒருவரிடமிருந்து 300 டாலர்களுக்கு ஒரு வயதுடைய ஆண் புலிக்குட்டியை வாங்குகிறார். வாங்கிய புலிக்குட்டியை கார் பின் இருக்கையில் சமர்த்தாக படுக்க வைத்து கடத்தியிருக்கிறார்.  கார்  சான் டியாகோவின் எல்லையை கடக்கும்போது சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணில் மாட்டுகிறது. தீவிர சோதனையில் இருக்கைக்கு அடியில் இருந்த புலிக்குட்டி மீட்கப்படுகிறது. விசாரணையில் வளர்ப்பதற்காக வாங்கியதாக சொன்ன வாலன்சினாவை கைது செய்து புலிக்குட்டியை கைப்பற்றியது காவல்துறை. சம்பவத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் மீட்கப்பட்ட புலி குட்டி இந்தியக் காடுகளை பூர்வீகமாக கொண்ட வங்கப்புலி. புலிக்குட்டியின் சர்வதேச மதிப்பு 1500 டாலர்கள்.  எங்கிருந்து புலிக்குட்டியை கடத்தினார்கள் என்கிற விசாரணை நடந்துக்ககொண்டிருக்கிறது.


 
 லாஸ் ஏஞ்சல்ஸில்  வசிக்கிற  ஜெரெம் ஜேம்ஸ் என்கிறவர் தேனிவிற்காக ஃபிஜி தீவுக்கு  செல்கிறார். அங்கு, அழிந்து வரும் உயிரினமான உடும்பை ஒரு காப்பகத்தில் பார்க்கிறார். ஆண்மைக் குறைவுக்கு சிறந்த மருந்து என யாரோ  கிளப்பி விட்டது  நினைவிற்கு வர, உடும்பைக் கடத்துவது என்ற முடி செய்கிறார் ஜேம்ஸ். தான் கற்ற மொத்த வித்தையையும் கடத்தலுக்கு பயன்படுத்துகிறார். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துகிற செயற்கை கால்களுக்குள் வைத்து மூன்று உடும்புகளை லாஸ் ஏஞ்சல்ஸிக்கு கடத்தி வருகிறார். கடத்தி வந்தவர் இரண்டு உடும்புகளை  32000 டாலர்களுக்கு விற்றுவிடுகிறார். கடைசியாய் இருக்கிற உடும்பு கடத்தி வந்ததில் காயமாகி கால் துண்டிக்கப்படுகிறது. பல முயற்சிக்கு பிறகு அமெரிக்க மீன் மற்றும் விலங்குகள் நல அதிகாரியிடம் பேரம் பேசும் போது  பொறி வைத்து பிடித்து விடுகிறது போலீஸ். விசாரணையில் அனைத்தையும் ஒப்புக்கொண்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஜேம்ஸ். உடும்பு மீட்கப்பட்டு ஒரு சரணாலயத்தில் வளர்கிறது. சாதாரண உடும்பின்  சர்வதேச மதிப்பு 32000 டாலர்கள். ஒரு நிமிடம்... இந்திய மதிப்பில் 200000 லட்சம்!

நம் காடுகளில் திரிகிற சாதாரண எறும்புத் தின்னி பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். நம்மைப் பொறுத்தவரை அது சாதாரண எறும்புத் தின்னி. சர்வதேச சட்டவிரோதச் சந்தையில் இன்றைய தேதியில் அதுதான் பணம் தின்னி. எறும்புத் தின்னியின் செதில்களில் அந்த சக்தி இருக்கிறது இந்த சக்தி இருக்கிறது என சீனாகாரன் அடித்து விட்டதை நம்பி எறும்புத் தின்னியை குறி வைத்திருக்கிறது இந்தியாவில் இருக்கிற  ஒரு கும்பல். கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் உள்ளது அச்சன்கோவில் வணசரகம். நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் இருக்கிற பகுதி அது. ஆரியன்காவு பகுதி வன அலுவலர் ஜமாலுதின் அவரது குழுவுடன்  வனப்பகுதியில் ரோந்து வருகிறார். அந்த நேரம் ஐந்து பேர் கொண்ட குழு ஒரு சாக்கு பையில் எதையோ நிரப்பி மூட்டையாக கட்டித் தூக்கி கொண்டுபோகிறார்கள். சந்தேகம் அடைந்த அலுவலர் ஐந்து போரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தததில் மூட்டைக்குள் இருந்தது எறும்பு தின்னி. உஷாரான வனத்துறை கேட்கிற விதத்தில் கேட்டதில் ஐந்து பெரும் ஒரு சேர உண்மையை கக்குகிறார்கள்.

 
“எறும்புத் தின்னியை பிடித்துக் கொடுத்தால் பணம் தருகிறோம்” என சொல்லிய கும்பல் ஒன்றை திருவனந்தபுரத்தில்  சந்திக்கிறார்கள். ஏன் எதற்கு என்ற எந்த கேள்வியும் இல்லாமல் எறும்புத் தின்னியை பிடிக்க ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்டுக்குள் வந்து வனத்துறையிடம் சிக்கி இருக்கிறது. தீவிர விசாரணையில் திருவனந்தபுரத்தில் இருந்த மர்ம கும்பல் சர்வதேச கடத்தல் கும்பல் என தெரிய வருகிறது. சாதுவான எறும்பு திண்ணியில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? எல்லாமே இருக்கிறது என்கிறது சீன கள்ளச் சந்தை. செதில்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆண்மைக் குறைவு, புற்று நோய் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதாக சீனாவில் தொன்று தொட்டு நம்பப்படுகிறது. சீனா மட்டுமலாது மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் எறும்புத் தின்னியின் செதில்களுக்கு மவுசு இப்போதும் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகளின்படி எறும்புத் தின்னியின் செதில்களில் எந்த நன்மையையும் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

செதில்களை கடத்துவதில் கடத்தல் கும்பல் இப்போது தனியார்  கூரியர்  நிறுவனங்களை  பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். அதி விரைவு போக்குவரத்து, எளிதில் கண்டுபிடிக்க முடியாது போன்ற வசதிகளால் கொள்ளையர்கள் கூரியரை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஏற்காமலும் இருக்க முடிவதில்லை. தவறான முகவரியை பார்சல்களில் கொடுத்துவிட்டு  சரியான இடங்களுக்கு சென்று  பார்சல்களை பெற்றுக்கொள்கிறார்கள். எல்லா செயல்களுக்கும் அந்தச் சரியான இடத்தில இருக்கிற ஒருவர் உதவிக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் உண்மை. கடத்தல்கள் ஒருவரால் மட்டுமே இங்கே நடப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும். செதில் கடத்தல் பற்றி எழுதிக் கொண்டிருக்கிற இதே நாளில் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில்  உயிருள்ள 100 எறும்பு தின்னிகளையும் 450 கிலோ எறும்பு தின்னி செதில்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். 

சர்வதேச அளவில் உயிருள்ள ஒரு விலங்கை கண்டம் விட்டு கண்டம் கடத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கடத்தலுக்கு பின் சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். மருந்துக்காக, உணவிற்காக, தோலுக்காக, ஒருவித சாகசதிற்க்காக என பல காரணங்களுக்காக  விலங்குகள் கடத்தபடுகின்றன. பாம்பில் தொடங்கி ஆமை வரை சர்வதேச சந்தையில் எல்லா விலங்குகளுக்கும் ஒரு மார்கெட் இருக்கிறது. நீங்க நினைப்பது போல காய்கறிகள் நிரம்பிய கோயம்பேடு மார்கெட் அல்ல. அது பல ஆயிரம் டாலர்களில் நிரம்பிய கொலைகளின் மார்க்கெட்.

அடுத்த கட்டுரைக்கு