Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு,   படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு,   படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

Published:Updated:
ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

கேட்கக் கேட்க இனிக்கும் ஆன்மிகக் கதைகள்!

கல்லூரிப் பேராசிரியை, பட்டி மன்றப் பேச்சாளர், ஆன்மிக சொற் பொழிவாளர், இல்லத்தரசி என்று பல பரிமாணங்களில் நம்பிக்கை நடை போட்டுவருபவர், காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறைப் பேராசிரியை சங்கீதா.

‘‘சிறுவயதில் இருந்தே தமிழ் ஆர்வமும், ஆன்மிகமும் எனக்குள் கலந்திருந்தது. அதனால்தான் பேச்சுத் துறையில் கடந்த 15 வருடங்களாக வெற்றிநடை போட முடிகிறது. என் காதல் கணவர் பழனியும், என் போலவே தமிழ் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், என் பயணத்துக்கு அவர் பலமாக இருக்கிறார். எங்களுக்கு  5 வயதில் யாழினி என்ற சுட்டிப் பெண் இருக்கிறாள். என் வேலை, குடும்பத்துக்கான நேரத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொள்வதால், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு இவற்றுக்கான நேரத்தை கண்டடைய முடிகிறது. அவற்றை மிகுந்த ரசனையுடன் செய்ய முடிகிறது’’ எனும் சங்கீதா, கம்பன் கழகம், சேக்கிழார் விழா போன்றவற்றில் கடந்த 15 ஆண்டுகளாகப் பேசி வருகிறார். இங்கே அவள் விகடன் ‘குரல் ஒலி’யில்,

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

• வாழ்க்கையில் ‘நடுவுல கொஞ்சம் நிம்மதியைக் காணோம்’ என்று புலம்புகிறவரா நீங்கள்? 

• மாரியைக் கும்பிடுபவர்களுக்கும், மேரியைக் கும்பிடுபவர் களுக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது..?

•  ‘மனம் ஒரு குரங்கு’ என்பார்கள். உண்மையில் மனதுக்கும் குரங்குக்கும் என்ன சம்பந்தம்?

•  எந்த மந்திர சக்தியாலும் ஓட்ட முடியாத பேய் எது தெரியுமா?

•  எந்த சர்க்கஸிலும் நரியைப் பார்க்க முடியாது. ஏன்..?

- இப்படி இன்னும் பல சுவாரஸ்யங்களை கதை களாகச் சொல்லவிருக்கிறார் சங்கீதா.

டிசம்பர் 16 முதல் 22 வரை தினமும்  மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு  ஒரு போன் போடுங்கள்.

படித்து என்னவாக வேண்டும்..?!

விஜய் டி.வி ‘நீயா நானா’ நிகழ்ச்சி மூலமாக பல தமிழ் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர், கோபிநாத்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

‘‘சமீபத்தில் ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கு, யு.கே.ஜி படிக்கும் தன் குட்டிப் பையனை அழைத்து வந்திருந்தார் ஒரு பெண். இடைவேளையில் அவனோடு பேசிக்கொண்டிருந்தேன்.

‘நல்லா படிப்பியா?’

‘ம்... சூப்பரா படிப்பேன்!’

‘படிச்சு என்ன ஆகப்போற?’

‘குட் பாய் ஆகப்போறேன்!’

அந்தப் பையன் சொன்ன பதில் எனக்கு சந்தோஷமாகவும், ஆச்சர்ய மாகவும் இருந்தது. ‘படிச்சு  குட் பாய் ஆகணும்னு யார் சொன்னாங்க?’ என்று அவனிடம் கேட்டேன். ‘அம்மா!’ என்றான்.
படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும், வேலை கிடைத்தால்தான் நிறைய சம்பாதிக்க லாம் என்று, படிப்பை பணத்தோடு தொடர்புபடுத்தி பழகிவிட்ட நம் சமூகத்தில், நன்கு படித்தால் நீ நல்ல வனாவாய் என்று சொல்லி வளர்க்கும் அந்த அம்மாவை நினைத்துப் பெருமையாக இருந்தது.

ஆனால், ஏன் பெற்றோர்கள் அனை வரும் அப்படிச் சொல்வதில்லை. அல்லது, சொல்ல முடிவதில்லை? எப்போதும் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டம் நிதானமானதுதானா? நாம் நினைப்பது உடனடியாக நடந்து விட வேண்டுமென்று அனைவரும் பதறுகிறோம். இந்த அவசரம் அவசியமானதுதானா?'' என்று தன் மனதின் கேள்விகளை நம் சிந்தனைக்கு விட்ட கோபிநாத், அவள் விகடன் வாசகிகளுக்காக ‘குரல் ஒலி’யில் காத்திருக்கிறார்.

•  அவசரம் அழிவைத் தரும் என்பார்கள். ஆனால்..?

•  ஒவ்வொருவரும் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில்..?

•  இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

•  தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கது. ஆனால்..?

•  இளைய தலைமுறையினருக்கு கற்றுத்தருவோம். எதை..?

- பாசத்தோடும் நேசத்தோடும் இதுபோல பல விஷயங் களைப் பகிர்கிறார் கோபிநாத். 

டிசம்பர் 23 முதல் 29 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு  ஒரு போன் போடுங்கள்.