கல்கண்டார்கோட்டை

பஞ்சாயத்து அலுவலகம் அருகேநண்பர்கள் இருவர்...

''மாப்ளே... ஆதார் கார்டுன்னா என்னா? அது இல்லைன்னா சிலிண்டர் கொடுக்க மாட்டாங்களா?'

''அவனவன் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஐ.டி கார்டு, பான் கார்டு, சிம் கார்டு, ஸ்மார்ட் கார்டு, மெமரி கார்டு, நெட் கார்டு, ப்ரீ பெய்டு கார்டு, ரேஷன் கார்டு இதெல்லாம் பத்தாதுன்னு ஆலாய்ப் பறந்து, ஆதார் கார்டு வேற எடுத்து வெச்சிருக்காங்க. நீ என்னடான்னா... பத்து வருஷமா கோமாவுல படுத்திருந்தவன் மாதிரி பேசற..!''

''இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்புடி பயமுறுத்தறே..!''

''சிலிண்டர் இல்லை மச்சான்... இனி கல்யாணம் பண்ணணும்னாலும் அதுக்கு ஆதார் கார்டு வேணும்!'

(நண்பர் பதறுகிறார்!)

- சார்லி, பொன்மலை.

செம்பட்டி

கோழி கடை முன்பு இருவர்...

''இந்த பிராய்லர் கோழிக்கு ஊசி போட்டுத்தான் வளர்க்குறாங்க. அதை சாப்பிட வேண்டாம்னு ஊர் ஊரா சொல்லிட்டு இருந்தாலும் கூட்டம் மட்டும் குறையலையே...'

''கெட்டதுன்னு தெரிஞ்சும் நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?''

''என் மகள் இதுதான் வேணும்னு கேக்குறா... என்னத்த சொல்றது?''

(இடைமறித்த கடைக்காரர்...)

''டாஸ்மாக் பாட்டில்ல குடிக்காதீங்கன்னு போட்டிருக்கு. அங்கே மட்டும் என்ன ஈ ஓட்டிக்கிட்டா இருக்காங்க..? நீங்க வாங்கித்தான் குடிக்காம இருக்கீங்களா... வந்தோமோ கறியை வாங்கினோமா... குழம்பு வெச்சோமா... குஷியா இருந்தோமான்னு இருங்க... இங்கே வந்து தேவை இல்லாம பேசிட்டு இருக்காதீங்க!'

(எல்லோரும் கப் சிப்!)

- வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

கறம்பக்குடி

புதுகை செல்லும் பேருந்தில், புத்தகம் விற்பவரும் பயணியும்...

''சனிப்பெயர்ச்சி பலன்கள் புத்தகம் எல்லா ராசிக்கும் இருக்கு... உங்களோடது என்ன ராசின்னு சொல்லுங்க சார்...'

''எந்த ராசியா இருந்தாலும் எனக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சனி பெயராது. நீங்க அடுத்த சீட்டைப் பாருங்க!''

(பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவி முறைத்தபடி...) 'வீட்டுக்கு வாங்க... சனிப்பெயர்ச்சி எப்படி வேலை செய்யுதுன்னு காட்டுறேன்!'

(மனைவியை சமாதானப்படுத்துகிறார் கணவர்!)

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.