பிரீமியம் ஸ்டோரி

ராணிப்பேட்டை

 ராஜேஸ்வரி தியேட்டர் அருகே டீக்கடையில் இருவர்...

''என்ன மாப்ளே... வெளிநாட்டுலேர்ந்து வந்துகூட கேப்டன் சட்டசபைக்குப் போகலையாமே!'

''உன் சின்னப் பையனுக்குக் காய்ச்சல் சரியாகி ஸ்கூலுக்குப் போனானா?''

''தெரியலடா...''

''உன் சம்சாரம் ஆதார் கார்டு வாங்க போறாங்கன்னு சொன்னியே என்னாச்சு?'

''தெரியலடா... இனிதான் கேட்கணும்!'

''இதெல்லாம் உனக்குத் தெரியாது. ஆனா, எங்க கேப்டன் சட்டசபைக்குப் போகலைன்னு உனக்கு கவலை. போய் பொழப்பைப் பாருடா!'

''அதுவும் சரிதான் மாப்ளே... ஒரு டீ சொல்லு!'

(நண்பர் கடுப்பாகி முறைக்க... பார்ட்டி சைலன்ட்)

- முத்து ஆனந்த், வேலூர்.

டயலாக்

வடபழனி

கமலா தியேட்டரில் 'லிங்கா’ படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் இருவர்...

''படத்துல வில்லனா வர்ர எம்.பி எந்தக் கட்சிக்காரருடா... அதை காட்டவே இல்லை!'

''தமிழ்நாட்டுல இருக்கிற எம்.பியில ஒருத்தராதான் இருக்கணும்!'

''அது தெரியுது... அதுல யாரா இருக்கும்?'

''அரசியலைப் பத்திப் பேச்சு எடுத்தாலே தலைவரு படத்துல அடக்கித்தான் வாசிக்கிறாரு... இதுல எந்தத் தொகுதி... எந்தக் கட்சி... அவரு ஜாதகம் எல்லாமா சொல்லுவாங்க! படத்தைப் பார்த்தோமா விசில் அடிச்சோமான்னு கிளம்புடா!'

- எஸ்.வெங்கடேசன், கோடம்பாக்கம்.

திருச்சி

தில்லை நகர் டாஸ்மாக் பார் ஒன்றில்...

''கரென்ட் பில் 15 சதவிகிதம் உயர்த்திட்டாங்களாம்... ஆனா 500 யூனிட்டுக்குக் கீழே இருக்கிறவங்களுக்கு மானியமாகக் கொடுத்திடுவாங்களாம்... புரியலையே மச்சான்!''

(சற்று யோசித்து) ''உனக்கு இப்படிச் சொன்னா எப்படிப் புரியும். அதாவது, உங்க அப்பா பாக்கெட்ல இருந்து காசை அடிச்சிட்டு, உங்கம்மா... சிகரெட் செலவுக்கு உனக்குப் பாதி தந்திடறாங்க பாரு... அது மாதிரிதான்!''

(கேட்டவர் தலையை சொறிகிறார்!)

- தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு