Published:Updated:

''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி

''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி
''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி

''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி

'நீ கோரினால் வானம் ஆகாதா... தினம் தீராமலே மேகம் தூராதா...' - இந்தப் பாடலில், ஃபிளவர் வாஷில் தொடங்கி புக் ஸ்டாண்ட் வரை தன் காதலியின் பிறந்தநாளுக்கான பரிசை ஒளித்துவைத்திருப்பார் நாயகன் சித்தார்த். காதலிக்கு சர்ப்ரைஸாக எப்படி பரிசு அளிப்பது என்பது பற்றிய டிப்ஸ்களை அந்தப் பாடலே நமக்கு அள்ளித்தரும். 

நமக்குப் பிடித்தவர்களிடம் நம் அன்பை வெளிப்படுத்தவும் இம்ப்ரஸ் செய்யவும் சர்ப்ரைஸாக பரிசு அளிப்பதில் இருக்கும் த்ரில், வார்த்தைகளால் சிறைபிடிக்க முடியாதது. ஆனாலும், பல நாள்கள் திட்டம் போட்டு அன்புக்குரியவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயலும்போது, அது சொதப்பிடுச்சேன்னு சிலர் புலம்புவதைப் பார்க்கலாம். அதற்குத் தீர்வு சொல்கிறார், சென்னையின் வளசரவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல். புதுப்புது ஐடியாக்களில் விதவிதமான கான்செப்ட்டுகளில் பக்காவாக சர்ப்ரைஸ் கிஃப்ட் செய்து வாடிக்கையாளர்களை அசத்துகிறார். 

“நான் கோயமுத்தூரில் மெக்கானிக்கல் இஞ்சினீயரா வேலைப் பார்த்துட்டிருந்தேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு க்ரியேட்டிவ் மைண்ட் ஜாஸ்தி. தினமும் புதுசு புதுசா யோசிச்சுட்டே இருப்பேன். காலேஜ் படிக்கிறப்போதான் புவனாவை சந்திச்சேன். ரெண்டு பேரும் காதலிச்சு திருமணம் செஞ்சுகிட்டோம். ஒருமுறை புவனாவின் பிறந்தநாள் சமயத்தில், அவங்க வீட்டில் இருக்கிற எல்லாரையும் போய் பார்த்தேன். புவனா சின்னக் குழந்தையா இருக்கும்போது பண்ணின சேட்டைகளைப் பத்தி கேட்டு ரெக்கார்டு பண்ணினேன். அதை நைட் 12 மணிக்கு புவனாவுக்குப் போட்டுக் காட்டினேன். ரொம்ப ஃபீல் ஆகிட்டாங்க. அது ஒரு உணர்வுபூர்வமான மொமண்ட். 

கல்யாணத்துக்குப் பிறகும் என் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் ரிலேஷன்ஸுக்கு பார்ட் டைமாக, சர்ப்ரைஸ் கிஃப்ட் பண்ணிக் கொடுப்பேன். கோவையிலிருந்து சென்னைக்கு வந்தோம். ஒரு கட்டத்தில் எனக்கு இஞ்சினீயரிங் வேலை போர் அடிச்சுப்போச்சு. வேலைய விட்டுடலாம்னு முடிவுப் பண்ணி, புவனாகிட்டே சொன்னேன். அவங்க ரொம்ப கூலா, 'சரி இன்னிக்கு ஒருநாள் நல்லா யோசிங்க. நாளைக்கும் இதே முடிவில் இருந்தா வேலையை விட்டுடுங்க'னு சொன்னாங்க. மறுநாளும் அதே முடிவைச் சொன்னேன். அதுக்கப்பறம் பார்ட் டைமா பண்ணிட்டிருந்த வேலையை 'The 6.in' என்ற பெயரில் சர்ப்ரைஸ் ப்ளானரா அறிமுகப்படுத்தி, ஃபுல் டைமா பண்ண ஆரம்பிச்சேன்'' என்ற சக்திவேல் புன்னகையுடன் நிறுத்த, புவனா தொடர்கிறார். 

“இஞ்சினீயரிங் வேலையில் ரெண்டுப் பேரும் கை நிறைய சம்பளத்தோடு பசங்களின் படிப்பு, மாமனார் மாமியாரைப் பார்த்துக்கும் பொறுப்புன்னு எல்லாத்தையும் கஷ்டமில்லாமல் செஞ்சுட்டிருந்தோம். அப்போ இவரு வேலைய விடப்போறேன்னு சொன்னதும் ரொம்பவே ஷாக் ஆகிடுச்சு. பொதுவாவே அவருக்கு இன்னோவேட்டிவ் திங்கிங் அதிகம். உள்ளுக்குள்ள ஒரு விருப்பத்தை வைச்சுகிட்டு குடும்பத்துக்காக எதுக்கு கஷ்டப்படணும்னு முடிவுப் பண்ணிதான், அவரோட விருப்பத்துக்கு ஓகே சொன்னேன். அதோட, அவர் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினதும், கோயம்புத்தூர்ல ரோட்டுல நின்னு சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ்களை விற்க ஆரம்பிச்சோம். பிறந்து வளர்ந்த ஊருல இப்படி ரோட்டுல நின்னு மார்க்கெட்டிங் பண்றதெல்லாம் தேவையான்னு தோணுச்சு. அப்படி தோணின எண்ணத்தையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு அவர் பக்கம் ஆதரவா நின்னு மோட்டிவேட் பண்ணினேன்.  

இன்னைக்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் செஞ்சுக் கொடுத்து அசத்திட்டிருக்கார். திருப்பூரைச் சேர்ந்த பதிமூணு வயசு பையன் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அடையாறு கேன்சர் ஆஸ்பத்திரியில் ட்ரீட்மென்ட் எடுத்துட்டிருந்தான். அந்தப் பையனை மாலுக்கு கூட்டிட்டுபோய், திடீர் திடீர்னு அவன் முன்னாடி டான்ஸர்ஸை ஆடவைச்சு ஒருநாள் முழுக்க உற்சாகப்படுத்தினார். ஆபரேஷனுக்குப் பிறகு அந்தப் பையன் எந்திரிச்சு நடக்கவே மாட்டேன்னு சொன்னப்போ, அவனைத் தூக்கிட்டுப்போய் நடிகர் விஜய் சேதுபதியை மீட் பண்ண வெச்சார். அவரைப் பார்த்துட்டு திரும்ப வரும்போது, 'அண்ணா கேன்சர்லாம் வெத்துண்ணா. நான்தான் கெத்து?'னு சொல்லிட்டே வந்தான். அந்தப் பையன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இறந்துட்டான். இறந்து போறதுக்கு முதல்நாள் அவன் அம்மாக்கிட்டே விஜய் சேதுபதியை மீட் பண்ணினதைப் பத்திதான் பேசிட்டு இருந்தானாம். அந்தப் பையனின் ஆசை, இவர் மூலமா நிறைவேறுச்சுங்கிறதை நினைச்சு நெகிழ்ந்து போனேன்.

இந்த மாதிரி நிறையப் பேருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கார். இதை பிசினஸாக மட்டுமில்லாமல், ஏழைகளைச் சந்தோஷப்படுத்தற மாதிரியும் செய்துட்டிருக்கார். முதல்முதலில் அவருக்காக ரோட்டில் நின்னப்பவும் வருத்தப்படலை. இப்பவும் அவரோடு ஃபீல்டுக்குப் போறேன். என்னோட பங்குக்கு நிறைய பேரை சர்ப்ரைஸ் பண்றேன். கவலைகளை மறந்து சந்தோஷப்படற மனுஷங்களைப் பார்க்கிறப்போ நானும் ஹேப்பியாகிடுறேன்'' என உற்சாகமாகச் சொல்கிறார் புவனா. 

“புவனா மாதிரி ஒரு மனைவி கிடைச்சதால்தான் என் மனசுக்குப் புடிச்ச வேலையைச் செய்ய முடியுது. அன்னிக்கு 'நீ வேலைய விட்டுட்டா குடும்ப நிலைமை என்ன ஆகும்'னு அவங்க சண்டைப் போட்டிருந்தால், இன்னிக்கு இந்த அளவுக்கு நான் ஃபேமஸ் ஆகியிருக்க முடியாது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்வாங்க. எனக்குக் கிடைச்ச நல்ல காதலி, அற்புதமான மனைவியாகவும் தொடர்ந்தது என்னோட லக்கி'' எனச் சொல்லி புவனாவின் கரங்களைப் பெருமையுடன் கோத்துகொள்கிறார் சக்திவேல்.

அடுத்த கட்டுரைக்கு