ஸ்பெஷல்
Published:Updated:

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

“முதன் முதலில் தாய்க்கு சுரக்கும் சீம்பால், குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மிகவும் அவசியம். பிறந்த ஒரு மணி நேரத்தில், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். கண்டிப்பாகச் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கக் கூடாது” என்று சொல்கிறார் பச்சிளம் குழந்தை நிபுணர் தீபா ஹரிஹரன். 
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பற்றி கூறும் போது “ப்ரில்கள், பட்டன்கள், லேஸ், ஹூக் இருக்கும் ஆடைகளைத் தவிர்த்து, மிகவும் மிருதுவான, பருத்தி ஆடைகளையே அணிவிக்க வேண்டும்.

இப்போது ‘பச்சிளம் குழந்தைப் பரிசோதனை’ (New born screening) நடைமுறைக்கு வந்துவிட்டது. குழந்தை பிறந்த 3-வது நாள் சில சொட்டு ரத்தத்தை எடுத்து, ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தைராய்டு, அலர்ஜி போன்ற பிரச்னைகள் பின்னாளில் வருமா என பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். காது கேட்புத் திறன் மற்றும் தைராய்டு பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

குழந்தை தூங்காமல் அழுதல், தொடர் விக்கல், சிறு வாந்தி, மாலையில் வரும் `கோலிக்’ என்னும் வயிற்றுவலி, குறுக்கி அழுதல்  போன்றவற்றுக்கு டாக்டரிடம் சிகிச்சை பெறத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்துக்கு மேல் நிற்காமல் அழுகை, மூச்சு விடத் திணறுதல் போன்றவை இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும்.

வயிறு நிறைய தாய்ப்பால், குழந்தையின் கண்களை நேராகப் பார்த்து அன்பாகப் பேசுதல், சத்தமில்லாத சூழல், இதமான அரவணைப்பு இவை போதும், பாப்பா ‘ஜம்’ என சிரிக்கும்” என்கிறார் டாக்டர் தீபா ஹரிஹரன்.

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

 பச்சிளம் குழந்தையை எப்படிப் பராமரிப்பது?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

 குழந்தை ஓயாது அழுவது ஏன்?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

 பச்சிளம் குழந்தைக்கான பரிசோதனை எப்போது, ஏன், எப்படி செய்யப்படுகிறது?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

 இரவில் சிசு தூங்காமல் அழுதால் என்ன செய்யவேண்டும்?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

 எந்த மாதிரியான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும்?

அன்பு வாசகர்களே, ஜனவரி 01 முதல் 08-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், பச்சிளங் குழந்தை பராமரிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் பச்சிளம் குழந்தை நிபுணர் தீபா ஹரிஹரன்

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

“புறத்தோற்றத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் வயிற்றுக்கு கொடுப்பது இல்லை. உணவே மருந்தாக இருந்த நிலை மாறி, இன்றைக்கு வரும் புதிய நோய்களுக்கு உணவே காரணமாகி விட்டது. சிகரெட்டும் ஆல்கஹாலும் பல குடல் நோய்களுக்கு காரணமாகி விட்டன.” என்கிறார் ஜீரணமண்டல அறுவை சிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு. 

வயிறு தொடர்பான பிரச்னைகள் பற்றி சொல்லும் போது “நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல், அதிகக் கொழுப்பு அனைத்துப் பிரச்னைகளுக்கும் உணவுப் பழக்கம்தான் காரணம்.  இவற்றைத் தவிர்க்க சமச்சீர் உணவு, அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், கம்பு போன்ற ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்று வலி வந்தாலே அல்சராக இருக்கும் என்று நினைத்து, எந்தப் பரிசோதனையும் செய்யாமல் மருந்து மாத்திரைகள் உட்கொள்வது தவறு. அஜீரணம், பித்தப்பை கல், கணையத்தில் அழற்சி என பல காரணங்களால் வயிற்று வலி வரலாம்.

நம் உடலில் ஒன்பது சதவிகிதம் மட்டுமே கொழுப்புச் சத்து இருக்க வேண்டும். ஆனால், நம் இந்தியர்கள் பலருக்கு 20 -23 சதவிகிதம் வரை கொழுப்பு உள்ளது. பிஎம்ஐ(BMI) எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ்-ல் (BODY MASS INDEX) கணக்கிட வேண்டும். பிஎம்ஐஅளவு 25க்கு மேல் இருந்தால் அதிக எடை (Over Weight) 30-க்கு மேல் இருந்தால் உடற்பருமன்(Obesity) என்று அர்த்தம். சிலர் உடல் எடை அதிகமாக இருப்பதை பரம்பரை உடல்வாகு என்பார்கள். இது தவறு. உடல் பருமனைத் தவிர்க்க உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை அனைத்துத் தரப்பினரும், எல்லா வயதினரும் கடைப்பிடித்தால் அதுவே ஆரோக்கியம்.” என்கிறார் டாக்டர் பழனிவேலு.

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

   வயிற்று வலி வருவதற்கு என்ன காரணம்?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

  வயிற்றுப் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்ன?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

  உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

  சர்க்கரை நோய்க்குத் தீர்வு உண்டா?

ஹலோ விகடன்... நலம், நலம் அறிய ஆவல்

  குடல் புண் ஏன் ஏற்படுகிறது?

அன்பு வாசகர்களே, ஜனவரி 09 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் ஜீரணமண்டல அறுவை சிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு

- பிரேமா, எஸ். விஜய ஷாலினி,படம்:  மீ.நிவேதன்