Published:Updated:

வாவ்.... 'அருவி' படத்தை மிஸ் பண்ணவே கூடாது... 6 காரணங்கள்!

வாவ்.... 'அருவி' படத்தை மிஸ் பண்ணவே கூடாது... 6 காரணங்கள்!

வாவ்.... 'அருவி' படத்தை மிஸ் பண்ணவே கூடாது... 6 காரணங்கள்!

வாவ்.... 'அருவி' படத்தை மிஸ் பண்ணவே கூடாது... 6 காரணங்கள்!

வாவ்.... 'அருவி' படத்தை மிஸ் பண்ணவே கூடாது... 6 காரணங்கள்!

Published:Updated:
வாவ்.... 'அருவி' படத்தை மிஸ் பண்ணவே கூடாது... 6 காரணங்கள்!

திரைக்கு வரும் முன்னரே, அதிர்வுகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா... அருவி! 

படத்தின் விரிவான விமர்சனம் அதிகாரபூர்வ வெளியீட்டுக்குப் பின் வரும். அதற்கு முன் படத்தில் என்ன விசேஷம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

1. மிக போல்டான அதேசமயத்தில் இயல்பான நாயகியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் 'அருவி' கேரக்டர் நிச்சயம் நம்மை ஈர்க்கும். இதுவரை தமிழ் சினிமா காட்டியிராத புதுமையான, அதிர்ச்சியளிக்கக் கூடிய பாத்திரம் இது. இந்த `அருவி' எழுப்பும் சில கேள்விகள் மூலம் நம் மனங்களில் சலசலப்பாள். அருவி கேரக்டரை அனாயசமாக செய்து அசத்தி இருக்கும் அதிதி பாலன் ஒரு புதுமுகம் என்று நிச்சயம் நம்பவே முடியாது. ஒரு நீண்ட ஷாட் கொண்ட காட்சியில் அவரின் டயலாக் டெலிவரி மற்றும் நடிப்புக்கு விருதுகள் காத்திருக்கிறது. கிட்டத்தட்ட 8 மாதத் தேடலுக்குப் பின் 500 பேர் வரை ஆடிஷன் செய்து கடைசியாக தேர்வாகி நடித்த அதிதி, ஒரு பிஸியான அட்வகேட்.

2. என்ன ஜானர் படம் இது என படம் முடிந்து வரும்போது சட்டென உங்களால் சொல்ல முடியாது. ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக, ஒரு பெண்ணின் பயோகிராபியாக, மீடியாவை பகடி செய்யும் ஒரு காமெடிப் படமாக, மெல்லோ டிராமாவாக அருவியைத் தனித்து தரம் பிரிக்கவே முடியாது. எல்லாம் கலந்த ஒரு காக்டெய்ல் சினிமாவாக இருப்பதே படத்தின் பலம். மாற்று சினிமாவாகவும் 'பரபர' த்ரில்லர் படமாகவும் வந்திருப்பதால்  நிச்சயம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக 'அருவி' கொண்டாடப்படும். சோஷியல் மீடியாக்களின் பேசும்பொருளாக சில நாள்களாவது நிச்சயம் 'அருவி' இருக்கும். 

3. படத்தில் மீடியா பெர்ஷனாலிட்டியாக வரும் கன்னட நடிகை லக்‌ஷ்மி கோபால்ஸ்வாமிக்கும், டைரக்டராக வரும் சின்னத்திரை இயக்குநர் கவிதா பாரதிக்கும் மட்டும்தான் இதற்கு முன் கேமராவைப் பார்த்த அனுபவம் இருக்கிறது. மீதி கேரக்டர்கள் அனைத்துமே சினிமாவுக்கே புதுசு. அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வாங்கி இருப்பதில் தெரிகிறது டைரக்டரின் உழைப்பு! 

4. மிக மிக லோ பட்ஜெட் படம். நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் போதும் திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். திரையிடப்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் திரை விழாக்களிலும், உள்ளூர் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கிலும் எழுந்து நின்று கை தட்ட வைக்கும் அளவுக்கு நேர்த்தியாக எழுதி இயக்கி இருக்கிறார் அருண் பிரபு புருஷோத்தமன். இடைவேளைக்கு முன்னாலும் பின்னாலும் வரும் டிவி நிலைய காட்சியில் நாயகி பேசி இருக்கும் வசனங்களில் லோக்கல் அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை அனல் பறக்கிறது. உதாரணமாக, 'நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாதுன்னு இல்லை. கண்டுபிடிக்காம நோய் அப்படியே இருந்தாதான் இங்கே பல கம்பெனிகள் சம்பாதிக்க முடியும்!' போன்ற வசனங்கள் ஷார்ப்!

5. சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ஒரே புள்ளியில் இணைத்திருந்தவிதம் அருமை. குறிப்பாக நாயகியின் ஃப்ரெண்டாக நடித்திருக்கும் திருநங்கை அஞ்சலி வரதனின் நடிப்பு மிக யதார்த்தம். திருநங்கைகளைக் கொச்சைப் படுத்தாமல் அவர்களின் வலியையும், அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிப் பக்கங்களையும் பகிர்ந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. 

6.  பிந்து மாலினி-வேதாந்த் பரத்வாஜ் என்ற இரட்டை இசையமைப்பாளர்களின் புதுமையான இசைமொழியும் படத்தின் மைய நீரோட்டத்துக்கு அழகு சேர்க்கிறது. அடிப்படையில் உலகம் முழுக்க பயணம் செய்து தெருப்பாடகர்களாக இருக்கும் இவர்களின் இசை எளிமையாக இருக்கிறது. மான்டேஜாக சிறுசிறு பாடல்கள் மூலமே கதை சொல்ல ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட்டும், எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ரஸ்ட்டாவும் செமையாக உழைத்திருக்கிறார்கள். 'அன்பின் கொடி' என்ற குட்டி ரேவதியின் பாடலை அழகாக படமாக்கி இருக்கிறது இந்த டீம். 

புதுமையான ஒரு திரை அனுபவத்துக்காக இந்த 'அருவி'யை ஆசை ஆசையாக ரசிக்கலாம்!