Published:Updated:

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

Published:Updated:

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமுல்லைவாயில் தெருக்களில் பாய்ந்து ஓடும் அந்தச் சின்னஞ்சிறு வண்டி, பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது. மாட்டு வண்டியின் மினியேச்சர் வடிவத்தில் இருக்கும் அது, ஒரு பொமரேனியன் நாயின் முதுகில் கச்சிதமாகப் பூட்டப்பட்டு இருக்கிறது. தனது முன்னங்கால்களால் வண்டியை இழுத்தபடி ஓடித் திரிகிறது அந்த நாய். 'ஷாம்... போதும் வீட்டுக்குப் போகலாம் வா...'' எனக் குரல் கொடுத்தபடி பின்னாலேயே ஓடுகிறார் நாயின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன்.

''10 வருஷமா 'ஷாம்’ எங்க வீட்லதான் வளர்றான். ரெண்டு வருஷத்துக்கு முன்ன, போலியோ பாதிப்பால் இவனோட இடுப்புக்குக் கீழ்ப்பகுதி செயல் இழந்துடுச்சு. என்னென்னவோ சிகிச்சை செய்தும் சரி ஆகலை. நடக்க முடியாம வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டான்.

பிராணிகள் நல மருத்துவர் மகாலிங்கம்  இந்த வண்டியைத் தயார் செய்துகொடுத்தார். ஆரம்பத்தில் ஷாம் வண்டியைக் கண்டாலே மிரள்வான். ஏற மாட்டான். ஆனா, இப்போ உற்சாகமா வண்டி ஓட்டிட்டுப் போறான்!''- ஷாமை செல்லமாகத் தடவியபடியே பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

ஷாமுக்காகப் பால் சோறு எடுத்து வந்த ராதாகிருஷ்ணனின் மனைவி உமா, ''ஷாமை எங்க புள்ளையாத்தான் வளர்க்கிறோம். அவனால் இயற்கையா சிறுநீர்கூடக் கழிக்க முடியாது. நாலு மணி நேரத்துக்கு ஒருமுறை வயித்தை அமுக்கித்தான் சிறுநீரை வெளியேத்தணும். நாள் முழுக்கப் பக்கத்தில் இருந்து கவனிச்சுக்கணும்னு எந்த விசேஷத்துக்கும் போறது இல்லை. 'ஒரு நாய்க்காக இவ்வளவு கஷ்டப்படணுமா?’னு கேட்குறாங்க. இதுவும் நம்மள மாதிரி ஒரு உயிர்தானே சார்?''- உமாவின் கேள்வியில் தொக்கி நிற்கிறது காருண்யம்!

முத்து... லஞ்சம்னு வந்தா குத்து!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

ம்பத்தூரை அடுத்து உள்ள புதூரில் லுங்கி, பனியனோடு முட்டை போண்டா போட்டுக் கொண்டு இருக்கும் முத்து, ஏரியாவில் ஏக பரிச்சயம். இவரின் பெயரைக் கேட்டாலே தெறித்து ஓடுகிறார்கள் லஞ்சப் பேர்வழிகள். அரசு அலுவலகங்களில் கல்லா கட்டும் லஞ்சப் பேர்வழிகளைப் பிடித்துக்கொடுக் கும் 'லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்பு உணர்வு சங்க’த் தலைவர். ''லஞ்சம் வாங்குறவனைவிடவும் கொடுக்குறவனைத்தான் சார் தண்டிக்கணும். ஒரு விபத்து வழக்கில் 3 ஆயிரம் ரூபா லஞ்சம் கேட்ட பூந்த மல்லி போக்குவரத்துப் புலனாய்வு அலுவலக எஸ்.ஐ. இரண்டு பேர், தூத்துக்குடி பக்கம் பட்டா பெயர் மாற் றத்துக்கு 10 ஆயிரம் ரூபா கேட்ட ஒரு வி.ஏ.ஓ-னு பலரைக் கையும் களவுமா பிடிச்சுக் கொடுத்து இருக்கேன்.

'புள்ள குட்டிக் காரன். யாராவது ஆள்வெச்சு தீத்துடப் போறாங் கப்பா’னு அதிகாரிகளே அனுதாபமாப் பேசுற மாதிரி மிரட்டுவாங்க. இதுக்கு எல்லாம் பயந்தா நல்லது பண்ண முடியுமா சார்?'' என்றபடியே சமோசாவுக்குச் சட்னி ஊற்றிக் கொடுக்கிறார் முத்து!

அன்னைக்கு ஆலயம்!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

குஷ்புவுக்கும் நமீதாவுக் கும் கோயில் கட்டியவர்களுக்கு மத்தியில், 'தமிழ் அன்னை’க்குக் கோயில் கட்டி திருவிழாவும் நடத்தி திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள் செங்குன்றம் காந்திநகர் வாசிகள்.

தமிழ் அன்னை கோயில் ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான கவிஞர் மாயவன், ''ஒவ்வொரு வருஷமும் பொங்கல் பண்டிகைக்கு திருக் குறள் ஒப்புவித்தல், விளையாட் டுப் போட்டிகள் நடத்தி குழந் தைகளுக்குப் பரிசு கொடுப் போம். இப்படிச் சில நல்ல விஷயங்கள் பண்ணிட்டு இருக் கும்போது, 'நம்மை வளர்த்து எடுக்கும் தமிழ்த் தாய்க்கு சிலை வடித்தால் என்ன? என்று எழுந்த எண்ணத்தைச் செயல்படுத்தினோம்.

பொதுமக்களிடம் சிறிதும் பெரிதுமாகத் தொகை வசூலித்து, இந்தக் கோயிலைக் கட்டி முடித்தோம். தினமும் இங்கு மக்கள் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். வெள்ளி, செவ்வாய்களில் குழந்தை களைக் கூட்டி தமிழ்ப் பாடல்களைப் பாடவைத்து அவர்களுக்கு இனிப்புகள் வழங் குகிறோம். நாம் எல்லோரும் தமிழ்த் தாயின் புதல்வர்கள் தானே!'' என்று உருகு கிறார்!

வாசிப்பும் நேசிப்பும்!

ஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்!

திருமுல்லைவாயிலில் மரியதெரசாவின் வீட்டு வரவேற்பறையை பட்டங்களும் பதக்கங்களுமாக அலங்கரிக்கின்றன. புத்தகக் கட்டுகளுக்கு மத்தியில் அமர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார் மரியதெரசா.  ஆவடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் இந்தி டீச்சர். கவியருவி, சிறுகதைச் செம்மல், கவிப் புயல், இலக்கியச் செல்வி, கவிதை ஞானி, செயல் மறவர், மக்கள் கவிஞர் என 53 பட்டங்களை வாங்கிக் குவித்து இருக்கும் மரியதெரசா, 32 புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

''அம்மா, அண்ணன் இருவருமே கவிஞர்கள். அதனால், சிறு வயதில் இருந்தே தமிழ் ஆர்வம். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததுமே எழுதத் தொடங்கிவிடுவேன். 26 வருஷமா எழுதியதில் கடைசி 10 வருஷங்களில் எழுதியதை மட்டும்தான் புத்தகங்களாக வெளியிட்டு இருக்கேன். சமீபத்தில் 10 புத்தகங் களை ஒரே நேரத்தில் வெளியிட்டேன். 13 புத்தகங்களை வெளியிடும் முயற்சிகளில் இருக் கிறேன்!'' என்கிற மரியதெரசாவிடம் குடும்பம் பற்றிக் கேட்டால், ''பேப்பரும் பேனாவும்தான் என் குடும்பம். இந்தப் புத்தக வாசனைதான் என் உயிர் மூச்சு!'' என்று சிரிக்கிறார்!

தொகுப்பு: த.கதிரவன்