Published:Updated:

சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்!

சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்!

##~##

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு முன்னே உள்ள திருப்பத்தில் நுழைந்தால் வருவது புல்லாபுரம். நடுத்தர மக்கள் வசிக்கும் இப் பகுதியில் கண்ணில் படும் சுவரொட்டிகள், கடைகளின் பெயர்ப் பலகைகள், கோயில், தேவாலயத்தின் பெயர்ப் பலகை, இவ்வளவு ஏன், தி.மு.க. கட்சி அலுவலகப் பெயர்ப் பலகை என எங்கு திரும்பினாலும் திகட்டத் திகட்ட தெலுங்கு எழுத்துக்கள்.  தெருவில் விளையாடும் சிறுவர்கள், காய்கறி வாங்கும் பெண்கள் பேசுவதும் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெறும் வழிபாடு அனைத் தும் தெலுங்கில்தான். நமக்கோ ஆந்திர மாநில கிராமம் ஒன்றில் நுழைந்துவிட்ட உணர்வு.

 அந்தப் பகுதியில் வசிக்கும் நாராயண ராவிடம் பேசினால் தெலுங்கு கலந்த தமிழிலேயே பேசினார். ''பிரிட்டிஷ் காலத்தில் இப்ப இருக் குற ஆந்திராவில் பாதி மெட்ராஸ் பிரெசிடென்சி யில் இருந்தது. அப்ப எங்க முன்னோர்கள் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் இருந்து மெட்ராஸ் முனிசிபாலிடிக்கு துப்புரவு வேலை பாக்க வந்தவங்க. எல்லாருமே மதிகா இன மக்கள். இப்ப எங்களை ஆதி ஆந்திரானு சொல்றாங்க.

சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்!

துப்புரவுத் தொழிலாளிங்கிறதால் அப்ப எங்க முன்னோர்களுக்கு சென்னையில் யாரும் வீடு தரவில்லையாம். அத னால் கிடைக்குற இடத்தில் குடிசை போட்டுத் தங்கினாங்க. ஆனா, அங்கே யும் பெரிய பெரிய முதலாளிகள் அவங்களை விரட்டி விட்டுட்டாங்களாம். அப்ப மெட்ராஸ் மேயரா இருந்த புல்லா ரெட்டிகிட்ட கேட்டப்ப, அவர்தான் இந்த இடத்தில் 37 குடும்பங்களுக்குக் குடிசை போட்டுக்கச் சொல்லி இடம் கொடுத்தாராம். அப்ப இந்த இடம் ஒரு பெரிய குளமா இருந்தது. அப்ப இந்த இடத்தோட பேரே ஓசான் குளம். அந்தக் குளத்தை மூடிட்டுத்தான் வீடு கட்டி இருக்காங்க. பிறகுதான் இடம் தந்த புல்லாரெட்டி நினைவா 'புல்லாரெட்டிபுரம்’னு பேர் வெச்சு இப்ப அது 'புல்லாபுரம்’னு மாறிடுச்சு!'' என வரலாற்றுக் கதை சொல்கிறார் நாராயண ராவ்.

சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்!
சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்!

''சில வருஷங்களுக்கு முன்பு எங்க குழந்தைகள் தெலுங்கு வழியிலேயே படித்தனர். அவர்களில் சிலர் எங்க பரம் பரைத் தொழிலை விட்டுட்டு, நல்ல வேலைகளில் இருக் காங்க. ஆனா, இன்னிக்குத் தாய்மொழியிலேயே பேசினாலும் அவங்களுக்குத் தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியறது இல்லை. ஏன்னா, பெரும்பாலும் தமிழில்தான் படிக்கிறாங்க. தமிழ் கத்துக்கிறது நல்ல விஷயமா இருந்தாலும், அடுத்து வர்ற தலைமுறைக்கு எங்களோட மொழி தெரியாமப் போயிடுமோனு வருத்தமா இருக்கு!'' என்று ஆதங்கப்படு கிறார்கள் அப்பகுதிவாசிகள்!

நியாயமான வருத்தம்தான்!

தா.லின் மேன்சன், படங்கள்: க.கோ.ஆனந்த்

அடுத்த கட்டுரைக்கு