Published:Updated:

நாங்க போலீஸ் இல்லை!

இது ஒசூர் உஷார்!

##~##

கரங்களின் முக்கியமான பிரச்னைகளில் முதல்இடத்தில் இருப்பது போக்குவரத்து நெரிசல்! முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்தைச் சீர் செய்ய போலீஸார் நின்றாலும்கூட, பீக் ஹவர்களில் வாகனங்கள் மோதிக்கொள்வதும் உரிமையாளர்கள் சண்டை போடுவதும் வாடிக்கை. பெருநகரங்களை ஆட்டிப்படைக்கும் இந்த நெரிசல் தொழில் நகரமான ஓசூரையும் விட்டுவைக்க வில்லை. ஆனாலும், அதை எளிதாகச் சமாளிக் கிறார்கள் ஓசூர்வாசிகள். காரணம், போக்கு வரத்து வார்டன்கள்!

 அது என்ன போக்குவரத்து வார்டன்கள்? ஓசூரில் காவல் துறையின் ஆள் பற்றாக்குறை காரணமாகப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்கள் தொடர்கதையாக இருந்தன. இதைக் கட்டுப்படுத்த 2009-ம் ஆண்டில் ஓசூர் டி.எஸ்.பி-யாக இருந்த சக்திவேல், ஓசூரின் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆர்வம் உள்ள பணியாளர்களை ஒருங்கிணைத்து ஓர் அணியை உருவாக்கினார். இவர் களே இன்று ஓசூர் முழுவதும் களம் இறங்கி போக்குவரத்தைச் சீர் செய்கிறார்கள். இத்தனைக்கும் இந்த சேவைக்காக இவர்கள் சம்பளம் எதுவும் பெறுவது இல்லை.  

நாங்க போலீஸ் இல்லை!

போக்குவரத்து வார்டன்களுக்கான பொறுப்பாளராக இருக்கிறார் ஓசூர் போக்குவரத்து எஸ்.ஐ. யுவராஜ். ''பெங்களூரு மாதிரியான பெரு நகரங் களில் இருக்கும் இந்த முறையை ஓசூருக்கும் அமல்படுத்திய பெருமை சக்திவேல் சாருக்குத்தான்.

நாங்க போலீஸ் இல்லை!

16 நிறுவனங்களில் இருந்து முன்வந்த 300 பேரில் இருந்து உடல் தகுதி உட்பட பல்வேறு தகுதித் தேர்வை நடத்தி 120 பேரைத் தேர்வு செஞ்சோம். அவர்களுக்குத் தேவையான எல்லாப் பயிற்சிகளையும் எங்க எஸ்.ஐ-க்கள் முர்ஷித் பாஷா, காமராஜ் கொடுத்தாங்க. போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்வது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, திருவிழா, பேரணி, பொதுக் கூட்டம் என மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் தள்ளுமுள்ளு ஏற்படாமல் ஒழுங்குபடுத்துவது, பொது மக்களிடம் நட்பாகப் பழகுவது என அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார்கள் இவர்கள். நிறுவனங்களில் அவங்களோட வேலை யின் ஷிஃப்ட் நேரத்தைப் பொறுத்து, ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை இவங்க போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துறாங்க. இவங்களுக்குக் குறைந்தபட்ச சன்மானம் கொடுக்கலாம்னு  நாங்க பேசுனப்பகூட, 'இதைச் சேவையா நினைச்சு செய்ய றோம். எதுவும் வேண்டாம்’னு சொல்லிட்டாங்க!'' என்கிறார் பெருமையுடன்!

நாங்க போலீஸ் இல்லை!

''நாங்க பொறுப்பேற்ற பிறகு 40 சதவிகித விபத்துக்கள் ஓசூரில் குறைஞ்சு இருக்கு. மொபைல் போனில் பேசிட்டு வண்டி ஓட்டுறவங்க, குடி போதையில் ஓட்டுறவங் களையும் கட்டுப்படுத்தி இருக்கோம். ஏ.எஸ்.பி. ரம்யா பாரதி மேடமும் எங்களுக்கு நிறைய ஊக்கம் கொடுக்கிறார்!'' என்றார் போக்கு வரத்து வார்டன் பாஸ்கர்.  

இந்தப் போக்குவரத்துக் காவலர்கள் ஓசூர் வாசிகளின் 'நண்பேன்டா’தான்!

- எஸ்.ராஜாசெல்லம், கு.சக்திவேல்

அடுத்த கட்டுரைக்கு