Published:Updated:

ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!

ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!

ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!

ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!

Published:Updated:
##~##

கேரளத்தில் பருவ மழை துவங்கியதுமே கோவையிலும் ஜில்லெனச் சாரல் சிலுசிலுக்கும். மாநில எல்லையில் இருப்பதால் இப்படி ஒரு கொடுப்பினை! அதே போல அங்கே ஓணம் கோலாகலம் துவங்கிவிட்டால், கோவையிலும் கலர்ஃபுல் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

படிப்பு, தொழில் என்று பல விஷயங்களுக்காக கோவையில் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள் கேரளவாசிகள். பூகோள அமைப்பிலும், தட்பவெப்பத்திலும்கோவை நகரம், கேரளாவைப்போலவே இருப்பதால் இந்த ஊரைத் தங்களது சொந்த ஊராகவே கருதுகிறார்கள் மலையாளிகள். இதன் விளைவுதான் கோவையிலும் ஓணம் பண்டிகை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் இப்படித்தான் கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிகள் ஓணம் கொண்டாட்டத்தைத் துவக்கி இருந்தார்கள். 'ஏட்டா, அவசியம் வரணும்!’ என்று நமக்கும் அழைப்பு. சேச்சிகளின் அழைப்பை மறுப்பது மகாபாவம் என்பதால், அங்கே நாம் சின்ஸியர் ஆஜர்!

ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!

விருந்தினர்களை வரவேற்க அத்தப்பூ கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் கேரள மாணவிகள். தந்த நிற சேலையில் அடர் ஜரிகை வைத்த பாரம்பரியப் புடவையில் அவர்களைப் பார்த்தபோது ஏதோ திருச்சூர், திருவனந்தபுரத்தில் இருப்பதுபோன்ற உணர்வு. 'ஆங், அவிடெ வை, ஓ மதி மதி!’ என்று ரொம்பவும் பொறுப்பாகப் பரபரத்துக்கொண்டு இருந்தார்கள். நிமிடங்கள் நகர நகர... அந்தக் கோலத்தின் பரப்பளவு பல வண்ணப் பூக்களால் அதிகரித்துக்கொண்டே இருந்தது!  

''எதுக்காக ஓணம் கொண்டாடுறீங்க? எப்படிக் கொண்டாடுவீங்க?'' என்று கேட்டோம். (ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் சேச்சிகள் சொல்லக் கேட்டால் தேன்தானே!) கதை சொல்லத் தொடங்கினார்கள் அர்ச்சனா, சரண்யா, ரிஷிதா, ரெஸ்மிதா. ''மாவேலி மன்னனை வீட்டுக்கு வரவேற்பதுதான் ஓணம் பண்டிகையின் நோக்கம். அதாவது, அந்த மன்னன் ஆண்ட காலத்துல கேரளம் சொர்க்க பூமியா இருந்துச் சாம். அகிலம் முழுக்க இந்த மன்னனுக்குப் பெருமை பெருகி இந்திரன் அளவுக்கு உயர்ந்தாராம். இதனால கோபப்பட்ட இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகா விஷ்ணுகிட்ட முறையிட்டாங்க. வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு, அந்த மன்னனை நைஸா ஒரு பாதாள உலகத்துல தள்ளிட்டார்.

ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!

ஆனாலும், அந்த மன்னனோட நல்ல குணங்களுக்காக விஷ்ணு ஒரு வரம் கொடுத் தார். அதன்படி வருஷத்துக்கு ஒருநாள் பாதாள உலகத்துல இருந்து கேரளத்துக்கு அந்த மன்னன் வருகை தரலாம்.  இப்படி வருகிற மாவேலி மன்னனை வரவேற்கத் தான் ஓணம் கொண்டாடுறோம்.

ஆக்சுவலா ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடக்கும். முதல் நாளான 'அத்தம்’ நாளில் ஆரம்பிச்சு சித்திர, பூராடம்னு நாட்களைக் கடந்து கடைசியா திருவோணத்தில் முடியும். இதுதான் ஓணம் கொண்டாட்டம். பண்டிகையோட ஸ்பெஷாலிட்டியே, வெரைட்டியான கோலங்கள்தான். முதல் நாள் ஒரே வகையான பூவைவெச்சு கோலம் போடுவோம். ரெண்டாவது நாள் ரெண்டு வகை பூ வெச்சு பண்ணுவோம். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசம் செய்து, பத்தாவது நாளில் 10 வகைப் பூக்களைவெச்சு கலர்ஃபுல்லா கோலம் போடுவோம்.  

இதுபோக பாயசம், நேந்திரம் சிப்ஸ், அடை பிரதமன்னு செஞ்சு ஒரு கட்டு கட்டுவோம். இந்த 10 நாட்களும் கேரளம் முழுக்கவே கொண்டாட்டமாதான் இருக்கும். திருச்சூர்ல புலி வேஷம் போட்டு ஆடுற 'புலி களி’ நடக்கும். பாம்புப் படகு போட்டி நடக்கும். மொத்தத்துல ஓணம்னா ஓஹோ கொண்டாட்டம்தான்!'' என்கிறார்கள் உற்சாகமாக!

   - எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்