Published:Updated:

எஸ் பேண்ட் ஒப்பந்தம்: மறு ஆய்வுக் குழு அமைப்பு

எஸ் பேண்ட் ஒப்பந்தம்: மறு ஆய்வுக் குழு அமைப்பு

புதுடெல்லி, பிப்.10,2011

தேவாஸ் நிறுவனம் எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்திக் கொள்ள இஸ்ரோ மேற்கொண்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கு உயர் மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு இன்று அமைத்தது.##~~##

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதில் இழப்பு ஏற்படவில்லை என்று இஸ்ரோவும், பிரதமர் அலுவலகமும் மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த ஒப்பந்ததை மறுஆய்வு செய்ய 2 நிபுணர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில், மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும், திட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவருமான பி.கே.சதுர்வேதி, விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் ரோத்தம் நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, தேவாஸ் மல்டி மீடியாவுடன் இஸ்ரோ செய்துகொண்ட ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப, வணிக, நிதி அம்சங்களை ஆராயும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், ஆன்டிரிக்ஸ் மேற்கொண்ட நடவடிக்கைள், ஒப்புதல் முறைகள் மற்றும் அதிலுள்ள குறைபாடுகளையும் இந்த மறு ஆய்வுக் குழு ஆராயும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை ஒரு மாதத்துக்குள் விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராகவுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கும்.
 

அடுத்த கட்டுரைக்கு