Published:Updated:

என் ஊர்!

அந்த மணியின் ஒசை மட்டும் மாறவில்லை!

என் ஊர்!

அந்த மணியின் ஒசை மட்டும் மாறவில்லை!

Published:Updated:
##~##

ழுத்தாளர், வசனகர்த்தா, கதாசிரியர் என்று பல பரிமாணங் களில் இயங்கும் பாஸ்கர்சக்தி, தன்னை வளர்த்து வார்த்து எடுத்த வடபுதுப்பட்டிப்பற்றி இங்கே பேசுகிறார்...

 ''நான் எட்டாவது வரைக்கும் முத்தாலம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் படிச்சேன். அப்போ அது ஒரு பழைய கட்டடத்தில் இருந்தது. இப்போ புதுக் கட்டடத்துக்கு மாறிடுச்சு. பழைய பள்ளிக் கட்டடம்,  இப்போ ஒரு வீடா இருக்கு. அதோட ஞாபகமா மணி அடிக்கிற பழைய தண்டவாளத் துண்டு மட்டும் புதுக் கட்டடத்தில் தொங்கிட்டு இருக்கு. காலம் காலமா மாறாத மணி ஓசையை நாங்க இன்னும் கேட்டுகிட்டே இருக்கோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

ஊருக்குள்ள இளந்தாரிக ஒரு குரூப்பா சுத்திட்டே இருப்போம். அந்தோணிராஜ் அண்ணே, செல்லப்பாண்டியன், பெருமாள், குமரேசன், தாமோதரன், ராமையா, சுந்தர் எல்லாரும் சேர்ந்து சுடுகாட்டுப் பாலம், துர்க்கை அம்மன் கோயில், குரளிக் குன்று, பிள்ளையார்க் கோயில், டீக்கடை, டெய்லர் கடைனு ஒரு இடம் பாக்கியில்லாம டாப் அடிப்போம். எங்க ஊரில் எல்லா டீக்கடையிலும் எங்களுக்கு அக்கவுன்ட் இருக்கும். அதில் எங்க சின்னராஜ் மாமா டீக்கடையில் மட்டும் கடன் லிமிட் ஜாஸ்தி.எப்போ போனாலும் டீ தருவார். 9 மணிக்குப் பேச உட்கார்ந்தால், பேசி முடிக்கும்போது அதிகாலை 3 மணியைத் தாண்டி இருக்கும். அரசியல், சினிமா, உள்ளூர் புரணினு பல சுவாரஸ்யமான விஷயங்கள் அதில் கிடைக்கும். எங்க ஊர் நூலகம்தான், எனக்குப் போதி மரம். நான் எழுதுற கதைகளுக்கு எங்க ஊரைச் சேர்ந்த பொன்.சந்திரமோகனும் நடராஜனும்தான் இன்ஸ்பிரேஷன். எனக்கு முன்னாலேயே விகடனில் கதை, கவிதையை அவங்க எழுதி இருக்காங்க.

அப்போ எல்லாம் ஊருக்கு ஒரு பஞ்சாயத்து போர்டு டி.வி. இருக்கும். உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி நடக்குறப்போ  பஞ்சாயத்து ரூமே கதியாக்கிடப்போம். வாசிப்பு அனுபவம் எனக்குள்ள கதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. என் கிராமத்து அனுபவங்களை கதையா எழுத ஆரம்பிச்சேன். என் எழுத்து விகடனில் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது.

என் ஊர்!

தேனி, தனி மாவட்டமா பிரிவதற்கு முன்னாடி எங்க ஊர் ரொம்ப அமைதியா இருக்கும். ஆனால், இப்போ ஊரே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போச்சு. எங்கே பார்த்தாலும் கட்டடமா இருக்கு. முதன்முதலா எங்க ஊருக்கு பஸ் வசதி கேட்டு மனு போட்டதே நாங்கதான். ஆனா, இப்போது ஊருக்குள்ள எப்போ பார்த்தாலும் 'சர்ர்ரு புர்ர்ரு’னு பஸ் சத்தம்தான். அது போக ஏகப் பட்ட ஷேர் ஆட்டோ, ஸ்கூல் பஸ் வந்துடுச்சு. வடபுதுப்பட்டி கிராம அடையாளத்தைத் தொலைச்சுடுச்சு.

என் ஊர்!

என் ஊர் தேனி புறநகரமாக மாறியதால், பொருளாதார லாபங்கள் இருக்கலாம். ஆனால், பழைய அமைதியும் நிம்மதியும் குறைஞ்சுட்ட மாதிரி தோணுது. ஆனாலும் ஊர் மக்கள், அதே கிராமத்து வெள்ளந்தி மனசோடதான் இருக்காங்க. இன்னிக்கும் என் கதை, கதாபாத்திரங்களில் என் ஊர் மக்கள், என் நண்பர்கள் பற்றிய நிறைய விஷயங்களை சொல்லி இருக்கேன். அது அவங்களுக்கே தெரியாது. சுருக்கமாச் சொன்னா என்னுள்தான் என் ஊர். என் ஊருக்குள்தான் நான்!''

- தி.முத்துராஜ்