Published:Updated:

க... க... கல்லூரிச் சாலை!

க... க... கல்லூரிச் சாலை!

க... க... கல்லூரிச் சாலை!

க... க... கல்லூரிச் சாலை!

Published:Updated:
##~##

லோ எஃப்.எம். மற்றும் ஐடியா நிறுவனத்தினர் இணைந்து கல்லூரிகளைக் குறிவைத்து 'கல்லூரிச் சாலை’ என்ற நிகழ்ச்சியை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கல்லூரிகளில் நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரியில் நடந்த கல்லூரி சாலை நிகழ்ச்சி அப்படியே இங்கே...

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு நெல்லை ஹலோ ஆர்.ஜே-க்கள், 'சில்லுக்கருப்பட்டி’ செல்வா, 'ஹலோ ஜூட் பாக்ஸ்’ அருண்பாரதி ஆகியோரிடம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கல்லூரின்னா சீனியர்- ஜூனியர் பாகுபாடு இருக்கும். அதுக்குக் காரணம் ராக்கிங். இப்போ அது இல்லை. இருந்தாலும், சீனியர்-ஜூனியர் இடைவெளி இருக்கத்தான் செய்யுது. அதை குறைக்கும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. இங்கே நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் ஒரு சீனியரும்-ஜூனியரும் கண்டிப்பாக் கலந்துக்கணும்!'' என்று நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார்  செல்வா.

க... க... கல்லூரிச் சாலை!

முதல் போட்டி 'லெட்ஸ் வார்ம்-அப்’. ஜோடிகளில் ஒருவர் சினிமாவின் பெயரை சைகையில் சொல்ல, அதை மற்றவர் சரியாகச் சொல்லவேண்டும். மேத்ஸ் கமலாவும், கெமிஸ்ட்ரி லட்சுமியும் மேடை ஏறினர். ஸீட்டில் இருந்த பெயர், 'பூவே உனக்காக’. கமலா தலையில் இருந்து பூவை எடுத்து லட்சுமியிடம் கொடுப்பது போல நடிக்க, லட்சுமியோ 'பூ’, 'என்னிடம் பூ’, 'உன்னிடம் பூ’ என்று சொதப்ப... டைம் அவுட்!  பி.காம்., வாணியும் கம்ப்யூட்டர் சயின்ஸ் சீதாவும் அடுத்த ஜோடி. ஸீட்டில் இருந்த பெயர் 'பசங்க’. வாணி மேடை முன்னால் இருந்த பசங்களை கைகாட்ட, 'பாய்ஸ்’, '4 ஸ்டூடன்ட்ஸ்’, 'மாணவர்கள்’ என்று கடைசி இரண்டு செகண்டில் சரியான விடையைச்  சொன்னார்.

க... க... கல்லூரிச் சாலை!
க... க... கல்லூரிச் சாலை!

அடுத்த போட்டி 'ஐடியா இன்வென்டரி’. அதாவது, 'இந்த உலகத்துக்காகப் புதுசா எதைக் கண்டுபிடிப்பீர்கள்’ என்ற கேள்விக்கு சுவாரஸ்யமாகப் பதில் அளிக்கவேண்டும். ஜெயராம லெட்சுமி, 'தண்ணீரில் ஓடும் கார்’ என்றார். இளவரசியோ தடாலடியாக, 'கறுப்புப் பணம் கண்டுபிடிக்கிற மெஷின்’ என்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ் ஷமீன் பேகம், 'விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் ரோபோ’ என்றார். 'நாம சொடக்குப் போட்டதும் வீட்ல உள்ள ஃபேன், லைட் ஆஃப் ஆகிற மாதிரி ஒரு கருவி கண்டுபிடிப்பேன்’ என்றார் பி.காம்., அனிதா. இயற்பியல் மதுமிதா, 'ஞாபக மறதி உள்ளவங்களுக்குப் பயன்படுற மாதிரி கண்ணில் மாட்டக்கூடிய ஒரு கேமரா கண்டுபிடிப்பேன். முக்கியமான விஷயம் மறந்துட்டா, அந்த கேமராவை ரீ-வைண்ட் பண்ணி பார்த்துக்கலாம். இது எக்ஸாமில் பிட் அடிக்கவும் உதவும்!’ என்று கலகலக்கவைத்து பரிசைத் தட்டிச் சென்றார்.

அடுத்த போட்டி... 'ஜஸ்ட் எ மினிட்’. ஒரு நிமிடத்தில் பாட்டு, கவிதை, டான்ஸ் என்று ஏதேனும் ஒரு பெர்ஃபார்மன்ஸ் காட்டவேண்டும். கலா டான்ஸ் ஆட, ஃபரித்தா கவிதை வாசிக்க, சலோமி மலையாளப் பாடலைப் பாட... தடதடத்தது மேடை. அடுத்து வந்த

க... க... கல்லூரிச் சாலை!

கம்ப்யூட்டர் சயின்ஸ் சீதா, 'காசி’ விக்ரம்போல நடித்து அசத்தினார். இறுதியில் 'திருநெல்வேலி கலா மாஸ்டர்’ என்ற பட்டத்தோடு பரிசு பெற்றார், கலா.

விழா இறுதியில் சீனியர் மற்றும் ஜூனியர்கள் இருவரும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, ஃப்ளெக்ஸ் போர்டில் கையெழுத்துப் போட்டு நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்கள்!

- ஆ.கோமதி நாயகம், படங்கள்: எல்.ராஜேந்திரன்