Published:Updated:

பாசக்காரப் பசங்க மதுரைக்காரங்க!

மல்லி ஊரில் கில்லி விஜய்

பாசக்காரப் பசங்க மதுரைக்காரங்க!

மல்லி ஊரில் கில்லி விஜய்

Published:Updated:
##~##

'பவர் ஸ்டாருக்கே ஃபிளெக்ஸ்வைத்த ஊர் அல்லவா மதுரை. இளைய தளபதி விஜய்க்குக் கேட்கவா வேண்டும்? மிரட்டிவிட்டார்கள் மண்ணின் மைந்தர்கள்! எம்.ஜி.ஆராகவும், முருகனாகவும், சிவபெருமானாகவும் விஜய்யைச் சித்திரித்து இருந்த விளம்பரங்களில், 'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே’, 'எங்கள் குலதெய்வமே’ என்றெல்லாம் பகீர் குபீர் குண்டுகள். 'இந்த பாண்டிய நாடே உன் பாட்டுக்கு அடிமை!’ என்றெல்லாம் ஓவர் ஃபீலிங்ஸ். மூன்றுமாவடி மைதானத்தில் நடந்த 'வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவுக்குத்தான் இவ்வளவு அலப்பறையும்!

பாடல் ஆல்பத்தை வெளியிடும் முன்னரே அதில் இடம்பெற்று இருந்த 'சில்லக்ஸ்’, 'ரத்தத்தின் ரத்தமே’, 'சொன்னா புரியாது’ ஆகிய பாடல்களை மேடையில் பாடத் தொடங்கினார் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி. ஆச்சர்யமாக ரசிகர்கள் வரி பிசகாமல் அப்படியே பாடினார்கள். இணையத்தில் முன்கூட்டியே வெளியான பாடல்களை அதற்குள் மனனம் செய்துவிட்டார்கள் ரசிக அடிப்பொடிகள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாசக்காரப் பசங்க மதுரைக்காரங்க!

படத்தின் ஹீரோயின் ஹன்சிகா மேடை ஏறியதும், 'யப்பா... என்னா கலரு?’ என்று மூக்கின் மீது விரல்வைத்துவிட்டார்கள் மதுரை மாப்ளைகள். ஹன்சிகாவும் ரசிகர்களை ஏமாற்றாமல் ரேம்ப் வாக் நடந்து ரத்த அழுத்தத்தை எகிறவைத்தார். ''மாப்ள எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகு அம்முதுடா!’ என்று சிலிர்த்துச் சிலாகித்துக்கொண்டே இருந்தது கூட்டம்.

என்ன நினைத்தாரோ, மேடை ஏறியதும் ஹன்சிகாவுக்குப் போட்டியாக விஜய்யும் ஒரு ரேம்ப் வாக் நடந்தார். 'வேலாயுதம்’ படப் பாடல்களை சிறுமி உமாமகேஸ்வரி, தஞ்சை மாணவன் தீபக் ஆகியோரைக்கொண்டு வெளியிட்டார்கள்.

பாசக்காரப் பசங்க மதுரைக்காரங்க!

மதுரை ரசிகர்களுக்குப் பயந்தா அல்லது உண்மையில் விமானத்துக்கு லேட் ஆகிவிட்டதா தெரிய வில்லை... ஹன்சிகாவை ஆரம்பத் தில் பேசவைத்து பத்திரமாக அனுப்பிவிட்டார்கள்.  ''வணக்கம் மதுரை. எப்படி போய்ட்டு இருக்கு மதுரை? நல்லா போய்ட்டு இருக்குதா? விஜய் சார், விஜய் ஆண்டனி சார், ராஜா சார் எல்லாருக்கும் நன்றி. ஓ.கே தேங்க்யூ ஸோ மச். லவ் யு ஆல்!'' என்று கொஞ்சிவிட்டு ரசிகர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டது அந்தக் கிளி.

இயக்குநர் 'ஜெயம்’ ராஜா குரலில் ஏகத் தழுதழுப்பு. காரணத்தை அவரே சொல்கிறார்... கேளுங்கள். 'நானும் மதுரைக்காரன்தான். அப்பாவோட சொந்த ஊர் திருமங்கலம். இதுவரை என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடந்ததே இல்லை. முதல் விழாவே என் சொந்த ஊரில், பிரமாண்டமாக அமைஞ்ச சந்தோஷத்தை  வார்த்தைகளால் வர்ணிக்க முடியலை. 'முள்ளும் மலரும்’, 'முரட்டுக்காளை’... ரெண்டு படத்தையும் சேர்த்து எடுத்தா எப்படி இருக்கும்... அப்படி இருக்கும் 'வேலாயுதம்’! 'இந்தப் படத்தை, உங்களை மனசில் வெச்சுத்தான் பண்ணினேன்’னு நான் விஜய் சார்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன். உண்மையில் நான் விஜய் ரசிகர்களை மனசில் வெச்சுத்தான் இந்தப் படத்தைப் பண்ணி இருக்கேன்!'' என்றபோது ரசிகர்கள் மத்தியில் ஆரவார உற்சாகம்.

இறுதியாக முகம் முழுக்கப் புன்னகையுடன் மைக்கைப் பிடித்தார் விஜய். ''அடுத்தவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா ஓடிப்போய் உதவுறவங்க மதுரைக்காரங்க. பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா இருப்பீங்க. பெரிய பெரிய மீசை, திருப்பாச்சி அருவாள் எல்லாம் வெச்சுகிட்டு சுத்திக்கிட்டு இருப்பீங்க. ஆனா, பழகிப் பார்த்தாத்தான் தெரியும், நீங்க குழந்தையைவிட மென்மையானவங்கனு. உங்களுக்கு யாரையாவது பிடிச்சுப் போச்சுன்னா தலையில் தூக்கிவெச்சு கொண்டாடுவீங்க. என் படத்தோட டைட்டில் எல்லாம் 'மதுர’, 'திருப்பாச்சி’, 'சிவகாசி’னு மதுரையைச் சுத்தியே அமைஞ்சுது என்

பாசக்காரப் பசங்க மதுரைக்காரங்க!

அதிர்ஷ்டம். .

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையிலோ வெளிநாட்டிலோ கூட வெச்சு இருக்கலாம். ஜாக்கி சான், அர்னால்டு போன்ற பெரிய நடிகர்களை வெச்சுகூட  பாடல்களை வெளியிட்டு இருக்க லாம். ஆனா, பட பூஜையை சென்னையில் ரசிகர்களுக்கு மத்தியில் நடத்தியது போலவே கேசட் வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் மத்தியில்தான் நடத்தணும்னு ஆசைப்பட்டேன். நடத்திட்டேன். உங்க அன்புக்கு நன்றி!''  என்று  'தொலைநோக்குப் பார்வை’யுடன் பன்ச் வைத்து  முடித்தார்.

ஹ்ம்ம்... 2016-க்கு சார் வெயிட்டிங்டோய்!

- கே.கே.மகேஷ், சி.பிரதாப், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி