Published:Updated:

28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம்

28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம்

##~##

'அடுத்த மாசம் 24-ம் தேதி என்ன கிழமை?’ என்று யாராவது கேட்டாலே நமக்கு மண்டை காயும். ஆனால் செய்யார், சுந்தரமூர்த்தியோ ஒரு கோடி ஆண்டுக்கான காலண்டரைத் தயாரித்து, நாள், கிழமைகளோடு புழங்குகிறார்.

 பொதுப் பணித் துறையில் தாற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் சுந்தரமூர்த்தி... சிறுவயது முதலே தலைவர்களின் அரிய புகைப்படங்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகளைச் சேகரித்துக்கொண்டு இருப்பவர். அவருக்குத் திடீர் என இந்த காலண்டர் யோசனை உதிக்க, கடுமையாக உழைத்து ஒரு கோடி வருட காலண்டரைத் தயாரித்துவிட்டார்.

28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம்

இந்த காலண்டரில் எப்படி கிழமை பார்ப்பது? முதலில் எந்த வருடம் பார்க்க வேண்டுமோ, அந்த ஆண்டின் கடைசி இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒன்றாவது வரிசையில் அதற்கு நேராக உள்ள ஆங்கில எழுத்து என்ன என்பதைப் பாருங்கள். அந்த ஆங்கில எழுத்து இரண்டாவது வரிசையில் மாதத்துக்கு நேராக எங்கே இருக்கிறது என்று பாருங்கள். அந்த எழுத்துக்கு நேர் கீழே இருக்கும் வரிசையில் கிழமை களின் முதல் இரண்டு எழுத்துக்கள் இருக்கும். இடது பக்கத்தில் பட்டியல் இடப்பட்டு இருக்கும் தேதியில் உங்களுக்குத் தேவையான தேதிக்கு நேராக இருக்கும் கிழமைதான், நீங்கள் தேடும் கிழமை.

உதாரணத்துக்கு 24.08.2030-ம் தேதி எந்தக் கிழமையில் வருகிறது என்று பார்க் கலாம். வருடத்தில் கடைசி இரண்டு இலக்கமான 30-க்கு நேராக உள்ள ஆங்கில எழுத்து 'ஙி’. ஆகஸ்ட் மாதத்துக்கு நேராக 'ஙி’ எங்கு வருகிறது என்று பார்க் கவும். அதன் நேர்க் கீழே இருக்கும் கிழமை வரிசையில் 24-ந் தேதிக்கு நேராக உள்ள கிழமை... சனிக் கிழமை!

லீப் வருடங்களுக்குக் கிழமைகளைப் பார்க்க வேண்டும் என்றால், அதற்கு என  இருக்கும் நட்சத்திரக் குறியீடு உள்ள மாதங்களை மட்டுமே பார்க்க வேண்டும். வெவ்வேறு நூற்றாண்டுத் தொகுப்புக்கு வெவ்வேறு அட்டவணைகள் உண்டு.

28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம்

''இந்த காலண்டருக்கான டேபுளர் காலம் போடவே எனக்கு எட்டு மாதங்கள் ஆயின. தற்போது 1901-ம் வருடம் முதல் ஒரு கோடிக்கு மேலான ஆண்டின் கிழமைகளை இந்த காலண்டரில் பார்க்க முடியும். ஒரு டேபுளர் காலம் மூலம் சுமார் 100 வருடங்கள் வரை பார்க்கலாம். இதேபோல் 700 வருடங்கள் முடிந்த தும் திரும்பவும் எட்டாவது டேபுளர் காலம் போட்டுப் பார்த்தபோது, முதலில் போட்ட டேபுளரும் எட்டாவது டேபுளரும் ஒன்றாக இருந்தன. ஆக, இன்றைய தேதியும் கிழமையும் 700 வருடங்கள் முடிந்ததும் திரும்பவும் வருவது என்று உணர்ந்தேன். அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்துத்தான் இந்த காலண்டரைத் தயாரித்து உள்ளேன். இதுவரை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் வரைதான் காலண்டர் கண்டு பிடித்து இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த ஒரு கோடி ஆண்டு காலண்டரை கின்னஸுக்கு அனுப்ப எண்ணி இருக்கிறேன்!'' என்கிறார் சுந்தரமூர்த்தி.

28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம்

தலைவர்களின் புகைப்படங்களைச் சேகரிக்கும் பழக்கமும் இவருக்கு உண்டு. காந்தி, பெரியார், நேதாஜி, பாரதி, அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகைப் படங்களையும் சேகரித்துவைத்துள்ளார். 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஸ்டாம்புகளும் இந்திய ஸ்டாம்புகளும் இவர் வசம் உண்டு. ராஜராஜ சோழன் காலத்து நாணயம், கிழக்கிந்திய கம்பெனி நாணயம், விக்டோரியா உருவம் பொறித்த நாணயம், எட்வர்டு ஏழாம் மன்னர் உருவம் பொறித்தது, ஜார்ஜ் ஐந்தாம் மன்னர் உருவம் பொறித்தது எனப் பழமையான நாணயங்களையும் பாதுகாத்துவைத்து இருக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டிய இளைஞர்தான்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு