Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

நூற்றுக்கு நூறு வாங்க வேண்டுமா..?எஸ்.விஜயஷாலினி, படம்: ப.சரவணகுமார்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

நூற்றுக்கு நூறு வாங்க வேண்டுமா..?எஸ்.விஜயஷாலினி, படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ரே நேரத்தில் பல விஷயங்களைக் கவனித்து, அவை எல்லாவற்றிலும் ஈடுபடுவதற்குப் பெயர்... கவனகக் கலை. அதாவது, மூளையை வெகுவாக கூர்தீட்டும் நினைவுக்கலை என்றும் சொல்லலாம். 'நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்' என்று நம் குழந்தைகளின் மீது நாம் வைக்கும் எதிர்பார்ப்புக்கு, நூற்றுக்கு நூறு உதவக்கூடிய அற்புதக் கலை இது.

இந்த அரிய கலையை சிறப்பாகப் பயிற்றுவிக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்... 'சோதசாவதானி' (16 கவனகர்) என்றழைக்கப்படும் 'திருக்குறள்' ராம.கனகசுப்புரத்தினம். இவர், தசாவதானி என்றழைக்கப்பட்ட 'திருக்குறள்' பி.ராமையாவின் புதல்வர். இந்த ராமையா, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசவைக் கலைஞராக இருந்தவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கவனகர்’ என்றே அனைவராலும் அழைக்கப்படும் கனகசுப்புரத்தினத்தின் சொந்த ஊர் மதுரை, சாலச்சந்தை கிராமம். ''பள்ளிப்படிப்பு, டீச்சர் டிரெயினிங், பட்டப்படிப்பு முடித்து வேலைக்காகக் காத்திருந்து கிடைக்காததால்... 4 வருடங்கள் ஐஸ் வியாபாரம் செய்தேன். பிறகு, ஆசிரியர் வேலை கிடைத்து, 12 வருடங்கள் சிவகாசியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பின்னர் தந்தையின் கவனகக் கலையைக் கற்று 1987ல் திருக்கழுக்குன்றத்தில் என்னுடைய முதல் நிகழ்ச்சி நடந்தது. ஆரம்பத்தில் 10 கலைகளைச் செய்யும், 'தசாவதானி’யாக இருந்தேன். பிறகு... குறள், எண், எழுத்து, பெயர், வண்ணம், கூட்டல், பெருக்கல், மாயக்கட்டம், படைப்பாற்றல், தொடு உணர்வு, ஒலி, கை வேலை, இசை, வினாவிடை விரிவுரை, கிழமைக்காணுதல், ஆங்கிலத் திருக்குறள் என 16 கவனகம் செய்யும் 'சோதசவதானி’ ஆனேன்!'' எனும் கனகசுப்புரத்தினம், 'கவனகர் முழக்கம்’ என்ற மாத இதழையும் நடத்திவருகிறார்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

கவனகக் கலையை வளர்க்கும் நோக்கில் மாதந்தோறும் பல பயிற்சி வகுப்புகளை உலகம் முழுக்க நடத்திவரும் சுப்புரத்தினம், மாணவர்களுக்கு 'நினைவாற்றல் வளர’ என்ற பயிலரங்கத்தையும், பெற்றோர்களுக்கு 'வெற்றியின் திறவுகோல்’ என்ற பயிலரங்கத்தையும் நடத்துகிறார். 'நினைவாற்றல் வளர’, 'மனம் ஒரு கணினி’, 'வானமே நம் எல்லை’ போன்றவை இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை.

"மனம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சம். உலகின் கொடிய விலங்குகளைக்கூட சாதாரண உடல் பலம் கொண்ட மனிதன் அடக்குவதற்குக் காரணம், அவன் மனபலம்தான். அவ்வளவு சக்தி வாய்ந்த மனதில் கலக்கம் இருக்கக்கூடாது. காரணம், தெளிந்த மனம்தான் வெற்றிகளை அடைய வைக்கும். மனம் குழம்பினால் தோல்வியே தழுவும். மனம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த ஸ்பெஷல் இன்ஸ்ட்ரூமென்ட் (கருவி). அது ஒரு சூப்பர் இன்டர்நெட். இதை அடைய மனம் தெளிவுபெற வேண்டும். அந்தத் தெளிவுக்குப் பெயர்தான் அறிவு. இதைக்கொண்டு ஆரோக்கியம், கல்வி, செல்வம், குடும்ப உறவு, சமுதாய உறவு மற்றும் விடுதலை, ஆன்மிக வெற்றி என 6 பயன்களை அடைய முடியும். அதற்கு மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அவசியம்.

எந்த விலங்கும் எதையும் கற்றுக் கொள்வதில்லை. இயற்கையாகவே நடக்கிறது, பறக்கிறது, நீந்துகிறது. மனிதனுக்கு அனைத்தையுமே கற்றுக் கொடுத்தால்தான் செய்ய முடியும். அதேசமயம், அவனால் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். அதனால் மனிதன் எதையும் 'தெரியாது’ என்று சொல்லக்கூடாது; கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் மனதை செதுக்கி, கல்வியில் செலுத்தும்போது, தெளிந்த மனமும் சிறப்பான கல்வியும் நமக்கு ஈட்டித் தரும் வெற்றிக்கு இணையில்லை!'' என்று சொல்லும் கனகசுப்புரத்தினம், தான் கற்ற வித்தைகளை அவள் விகடன் 'குரல் ஒலி’ மூலமாக உங்களுக்குள்ளும் புகுத்த காத்திருக்கிறார்.

• மனம் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறேன். ஏன்?

• ஆறாவது அறிவு என்கிறார்களே. அது?

• மனதை எப்போதும் அடக்கியாள வேண்டும். எப்படி?

• தகுந்த நினைவாற்றல் வேண்டும். இல்லையென்றால்..?

• யாரும் அறியாத, ஆனால் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ரகசியம். அது?

இன்னும் பல உளவியல் விஷயங்களைப் பகிர ஆவலோடு காத்திருக்கிறார். கேட்டுப் பயன்பெற நேரம் ஒதுக்குங்கள். உங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் கலை கை வரும்!

ஜனவரி 27 முதல் பிப்ரவரி 9 வரை

தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

04466802932* இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism