Published:Updated:

சாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்!

அசத்தும் புதுவை பி க்யூப்

##~##

''நாங்கள் எல்லாம் டான்ஸ் இன்ஜினீயர்ஸ்!'' - கால்களில் தாளம் போட்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறது புதுச்சேரி, 'பி க்யூப் டான்ஸ் க்ரூப்’.     புதுச்சேரி ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள குழுதான் இது.

 ''2007-ல் முதல் வருடப் படிப்பின்போது, 'பேக் பென்ச் பாய்ஸ்’னு ஒரு டான்ஸ் க்ரூப் ஆரம்பிச்சோம்.  படிப்பு முடிச்சப் பிறகு இப்பவும் இந்த நடன சினேகம் தொடருது. 'பேக் பென்ச் பாய்ஸ்’ என்கிற பெயரில் மூணு 'பி’ வர்றதால், சுருக்கமா 'பி க்யூப்’னு பேர் வெச்சோம். ஸ்மார்ட்டா இருக்குல்ல பேர்!

ஆரம்பத்தில் 13 பசங்களோட ஆரம்பிச்சோம். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா 'பெக்கோபேஸ்’. அதில் ஜெயிக்கணும்னு புதுவை இன்ஜினீயரிங் காலேஜ் பசங்க பைத்தியம் பிடிச்ச மாதிரி திரிவாங்க. திருவிழா கணக்கா   ஆட்டம், பாட்டம்னு அதிரும்.

சாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்!

  2008 பெக்கோபேஸில் வெஸ்டர்ன் பிரிவில் ஆடி முதல் பரிசு ஜெயிச்சோம். அதுதான் எங்க முதல் வெற்றி. இமயமலை ஐஸ் பாறைகளுக்கு நடுவில் சிறகு முளைச்சு பறக்கற மாதிரி இருந்தது. அப்புறம் லோக்கலில் ஒரு போட்டியை விடறது இல்லை. பாண்டிச்சேரி மேடையில் ஆரம்பிச்ச கால்கள் அப்படியே கடலூர், சேலம், வேலூர், சென்னை, பெங்களூருனு மாநிலங்கள் தாண்டியும் மேடை ஏறினோம்.

போட்டி தொடங்குவதற்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே பயிற்சி  ஆரம்பிச்சுடும். ஹிப் ஹாப் ஆல்பங்கள்தான் எங்க சாய்ஸ்.  கல்லூரி வகுப்புகளை முடிச்சுட்டு யார் வீட்டுக்காவது வந்து விடிய விடிய பிராக்டீஸ் பண்ணுவோம். விடிஞ்சதும் பீச்சுக்குப் போயி டைவ் பிராக்டீஸ் பண்ணுவோம்!'' என்கிறார் விபீக்.

சாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்!

''எங்க குரூப்ல இப்ப மொத்தமா நாலு டைவர்ஸ் இருக்காங்க அவங்க பேக் ஃபிளிப், சம்மர், பட்டர்ஃபிளை, டிவிஸ்டட் பட்டர்ஃபிளைனு எல்லா மூவ்மென்ட்ஸும் பண்ணுவாங்க. அது எல்லாம் ரொம்ப ரிஸ்க்கானது.    கொஞ்சம் மிஸ்ஸானாலும் உடம்பில் ஏதாவது ஒரு மூட்டு விலகிடும். இப்பவும் தலை, கை, கால்னு பல இடங்களில் வீர விழுப்புண்களைத் தாங்கித்தான் கலை வளர்க்கிறோம்!'' என்கிறார் ஆனந்த பாபு ஜாலியாக.

''எல்லாமே ஆர்வமா செய்யறதே தவிர காசுக்காகப் பண்றது இல்லை. நிகழ்ச்சி நடத்தறவங்களே காசு கொடுத்தாலும் வாங்குறது இல்லை. பல ஸ்கூல், காலேஜ்களுக்கு எங்களை டான்ஸ் கொரியோகிராஃப் பண்ணக் கூப்பிடுவாங்க. ஒத்தைப் பைசா வாங்காம உற்சாகமாக் கத்துத் தருவோம்!'' என்கிறார் ராகேஷ்.

சாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்!

''என்ன ஒண்ணு, வெளியூர்களில் ஆடப் போகும்போது அங்கே உள்ளூர் பாலிட்டிக்ஸ் அதிகமா இருக்கும். 'நாலு தெரு இருக்குற ஊரில் இருந்து வந்து அப்படி என்னதான் ஆடப் போறாங்க’னு எங்க காதுபடவே கமென்ட் அடிப்பாங்க. ஆனா, எங்க டான்ஸ் பார்த்த பிறகு, அவங்களே பிரமிச்சுப் பாராட்டிக் கைகுலுக்கி முதுகில் தட்டிக்கொடுப்பாங்க. நம்ம பெர்ஃபார்மன்ஸ்தான் சார் பேசணும். நாம பேசக் கூடாது. சரிதானே?'' என்கிறார் மைக்கேல்.

''வெளியூருக்குப் போகும்போது காரில் இருக்குற மியூஸிக் சிஸ்டத்தில் பாட்டுப் போட்டுட்டு ரோட்டு ஓரமா வண்டியை நிறுத்திட்டு பிராக்டீஸ் பண்ணுவோம். எங்க டீம்ல இப்பவும் எப்பவும் முக்கியமா கடைபிடிக்க வேண்டிய ரூல், ஒண்ணே ஒண்ணுதான். அது டீமில் பொண்ணுங்களுக்கு நோ என்ட்ரி.  பொண்ணுங்க உள்ளே நுழைஞ்சுட்டா, இந்த டான்ஸ் ஆட மாட்டாங்க. டூயட் பாடப் போயிடுவாங்க. என்ன நான் சொல்றது?'' என்கிறார் விபீக்.

நீங்க சொன்னா சரிதானுங்ணா!

- நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு