Published:Updated:

’அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் மூலம் அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் மூலம் அறிமுகமாகிறார் விக்ரமின் மகன்  துருவ்
’அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் மூலம் அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ்

’அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் மூலம் அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலுங்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் விக்ரமின் மகன் துருவ்

’அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் மூலம் அறிமுகமாகிறார் விக்ரமின் மகன்  துருவ்

தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில், கடந்த மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டி இருந்து. இந்நிலையில் கேரள நிறுவனமான இ4 எண்டர்டைண்மெண்ட் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையை வாங்கி உள்ளது. 

இதனை அடுத்து தமிழில் இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஒப்பந்தமாகி உள்ளதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். படத்தின்  இயக்குநர் மற்றும் படக்குழுவினர் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபடுள்ளது. இதனை விக்ரம் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். தமிழ் ரீமேக் உரிமை விற்பனை ஆனதால் தமிழகத்தில் அந்த படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

துருவ், ஷங்கர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு