Published:Updated:

''ஹலோ... ரெண்டுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும்!” ஆண்-பெண் நட்பு குறித்த சர்வே முடிவுகள் #VikatanSurveyResult

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''ஹலோ... ரெண்டுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும்!” ஆண்-பெண் நட்பு குறித்த சர்வே முடிவுகள் #VikatanSurveyResult
''ஹலோ... ரெண்டுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும்!” ஆண்-பெண் நட்பு குறித்த சர்வே முடிவுகள் #VikatanSurveyResult

''ஹலோ... ரெண்டுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும்!” ஆண்-பெண் நட்பு குறித்த சர்வே முடிவுகள் #VikatanSurveyResult

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சில நாள்களுக்கு முன்பு, ஆண்-பெண் நட்பு குறித்து தமிழ்க் குடும்பங்கள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி ஒரு சர்வே நடத்தியிருந்தோம். அந்த சர்வேயில் கிடைத்த முடிவுகள், ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் நட்பு வட்டம் குறித்து இயல்பாக எடுத்துக்கொண்டாலும், உறவினர்கள் தங்கள் பிள்ளைகளைத் தவறாகப் பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு இணையாக இன்றைய இளைஞர்களும், நட்புக்கும் காதலுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை நன்கு அறிந்துள்ளார்கள் என்பதை இந்த சர்வே முடிவுகள் உணர்த்துகிறது. அந்த முடிவுகளிலிருந்து... 

நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவருவதைப் பற்றி கேட்டதற்கு, 59.1% பேர், எப்போதாவது அழைத்துவருவதாகத் தெரிவித்துள்ளனர். 24.7% பேர், தங்கள் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவரவே மாட்டார்கள் என்று கூறியுள்ளனர். 

எதிர்ப்பாலின நண்பர்களை தங்கள் பெற்றோர்களிடம் 68.6% பேர் அறிமுகப்படுத்திவிடுவார்களாம். இது, பெற்றோர்களிடம் இன்றைய இளைஞர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணம். 

தங்கள் பிள்ளைகளின் நட்பு குறித்துப் பெற்றோர்கள் கருத்து தெரிவிப்பதில் சரிசமமான மனநிலையே நிலவுகிறது. 46.5% பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறியிருக்கின்றனர். ஆனால், 41.3% பேர், தங்களின் பிள்ளைகள், அவர்களின் நட்பு பற்றி எதுவும் கூறமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது 56% பேர், பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்வதாக கூறுகிறது இந்த சர்வே. அதாவது, பெற்றோர்களின் கண்காணிப்பில்தான் இன்றைய இளைஞர்களின் நட்பு இருக்கிறது. 

எதிர்ப்பாலின நண்பர்களுடன் பழகுவதை 50.9% பெற்றோர்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை என்கிறது சர்வே முடிவு. ஆனாலும், சரிபாதி பேர் அதை மறைமுகமாக மறுக்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. 

இந்தக் கேள்வி, பெற்றோர்களின் ஆழ்மனதிலிருக்கும் பயத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. 58.1 % பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், தங்கள் பிள்ளையைப் பற்றி தவறாகப் பேசிவிடுவர்களோ என்ற அஞ்சுகின்றனர். 

இந்தக் கால இளைஞர்கள் தங்கள் சகோதரிகளின்  நட்புகுறித்து நம்பிக்கையான பார்வையே வைத்திருப்பதாக இந்தக் கேள்விக்கான விதம் தெரிவிக்கின்றது. ஆண்களின் 63.7%  பேர் சகோதரிகளின் ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் இயல்பாக எடுத்துக்கொள்வோம் என்று  கூறியிருப்பது மகிழ்ச்சி! 36.3% பேர் மட்டுமே, இதை இயல்பாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல தங்கள் சகோதரன், அவரின் தோழிகளை வீட்டுக்கு அழைத்துவந்தால், இளம்பெண்களும் ‘நோ ப்ராம்ளம்” என்று ‘ஹை-பை’ கொடுக்கிறார்கள். கிட்டதட்ட 72%  பெண்கள், அவர்களின் நட்பை இயல்பாக எடுத்துக்கொள்வேன் என்று கூறியிருக்கின்றனர்.

நட்பு விஷயத்தில், பெற்றோர்களின் தலையீடு தேவையா என்பதற்கு, இளைஞர்கள் ’பாசிஸிட்டிவ்' கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 60% பேர், நட்பு விவகாரத்தில் பெற்றோர் தலையிடுவது நியாயமானதே என்று ‘சியர்ஸ்’ சொல்லியிருக்கிறார்கள். 

 'நட்புக்கும் காதலுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும்' என்று அழுத்தமாகக் கூறுவதுபோல இருந்தது இந்தக் கேள்விக்கான பதில். 70% பேர், நட்பு என்ற பெயரில், நாங்கள் காதல் செய்யவில்லை என்கிறார்கள். சமீபத்தில், கல்லூரிப் படிக்கும் ஒரு தோழி, அவளுடைய நட்பு குறித்துப் பேசியிருந்தார். “என் அம்மா, அப்பா இரண்டு பேரும் கல்லூரிப் பேராசிரியர்கள். எனக்கு ஸ்கூல் வரை நண்பர்கள் பெரிதாக கிடையாது. ஆனால், காலேஜ் படிக்கும்போது, நிறைய பசங்க நண்பர்களாக கிடைச்சாங்க. ஆண்களுடன் பழகும்போது நமக்கே சில ‘லிமிட்ஸ்’ தெரியும். அதனால், நட்பு தனி டிராக், காதல் தனி டிராக்!” என்று கூறினாள். முக்கால்வாசி இளைஞர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு