Published:Updated:

‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்!’

பரிமுகனே போற்றி!வி.ராம்ஜி

‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்!’

பரிமுகனே போற்றி!வி.ராம்ஜி

Published:Updated:

சென்னையின் இதயப் பகுதியான கோடம் பாக்கத்தில் உள்ளது மீனாட்சி கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோயில் மண்டபத்தில்,  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறவும், மிகப்பெரிய அளவில் ஹயக்ரீவ ஹோமத்தை நடத்தியது உங்கள் சக்தி விகடன். 

இந்த முறை, ஹயக்ரீவ ஹோம பூஜையில், சக்தி விகடனுடன் சிஎஸ்பி (தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்க்கிங் மற்றும் மேனேஜ்மென்ட்)  நிறுவனமும் இணைந்துகொண்டது.

கடந்த 22.2.15 (ஞாயிறு) அன்று காலையில் ஹோமம் என அறிவித்திருந்தோம். ஆகவே, விடிந்த துமே வந்துவிட்டனர் மாணவர்கள். அதையடுத்து மகன், மகளுடன் பெற்றோர்களும், மாணவர் களை அழைத்துக் கொண்டு ஆசிரியப் பெரு மக்களும் வந்துவிட... அரங்கமே சுறுசுறுப்பானது. சென்னை நங்கநல்லூரில் உள்ள  ஸ்ரீஹயக்ரீவர் ஆலயத்தின் சேஷாத்ரி பட்டாச்சார்யர் தன் குழுவினருடன் வந்திருந்து ஹோம பூஜைகளை விமரிசையாக நடத்தித் தந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னதாக ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீசக்கரத்தாழ்வார்,ஸ்ரீதன்வந்திரி பகவான் மற்றும் ஸ்ரீ கருடாழ்வார் ஆகியோரைப் பிரார்த்தித்தபடி ஜபத்தில் மூழ்கினார்கள், பட்டாச்சார்யர்கள். கிட்டத்தட்ட முக்கால் மணி நேர ஜபத்துக்குப் பிறகு, ஹோமம் நடைபெறத் துவங்கியது.

‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்!’

''இங்கே வந்திருக்கிற மாணவர்கள், டீச்சர்கள், பெற்றோர்கள் யாராக இருந்தாலும் அவங்க எல்லாரும் ஹயக்ரீவப் பெருமாளை மனசார தியானிச்சு, பிரார்த்தனை பண்ணிக்கோங்க. எந்த வியாபார நோக்கமும் இல்லாம,மாணவர்கள் நல்ல மார்க் எடுக்கணும்னு சேவை மனப்பான்மை யோடு இந்த ஹோமத்தை நடத்தற சக்தி விகடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்'' என்றார் சேஷாத்ரி பட்டாச்சார்யர்.

பிறகு புருஷ சூக்தம், ஸ்ரீசூக்தம், பூ சூக்தம் (பூமாதேவி) ஆகியவை செய்யப்பட்டு, ஸ்ரீஹயக்ரீவர் ஹோமம் சிறப்புற ஆரம்பமானது.

இந்த பூஜையில் கலந்துகொள்ள முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள், தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சங்கல்பத்துக்கான விண்ணப்பக் கூப்பனை நிரப்பி அனுப்பியிருந்தார்கள்.அவர்களின் பெயர், நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி, ஹோமத்தில் சங்கல்பம் செய்யப்பட்டது. தவிர, அங்கேயே அப்போதே தங்கள் பிள்ளைகளின் பெயர், கோத்திரம் சொல்லி, சங்கல்பம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்ட பெற்றோர்களின் விருப்பமும் நிறைவேற்றப்பட்டது.

‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்!’

''இந்த பூஜைல கலந்துக்கறதுக்காக, திருவண்ணாமலை மாவட்டத்துலேருந்து வந்திருக்கேன். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் பெற்றோர்களுக்கு நிம்மதியையும் கொடுக்கற இந்த மாதிரியான பூஜைகள், எல்லா ஊர்லயும் நடக்கணும்'' என்று உற்சாகத்துடன் சொன்னார் வாசகி மங்கையர்க்கரசி.

''என்னுடைய மாணவர்களுக்காக மட்டும் இல்லாம, இந்த முறை டென்த், பிளஸ் டூ பரீட்சை எழுதற எல்லா மாணவர்களுக்காகவும் வேண்டிக்கறதுக்காகத்தான் இந்த ஹோமத்துல கலந்துக்கிட்டேன். டீச்சரான எங்களுக்கே இந்த ஹோமம் ஒரு எனர்ஜியைத் தருதுன்னா, பசங்களுக்கு சொல்லவா வேணும்?'' என்று நெகிழ்ந்து சொன்னார் ஆசிரியை வைதேகி. நந்தினி எனும் ஆசிரியை, முப்பதுக்கும் மேற்பட்ட தன் மாணவர்களுடன் வந்து ஹயக்ரீவ ஹோம பூஜையில் கலந்துகொண்டார் என்பது கூடுதல் சிறப்பு.

''மாணவர்களாகிய இளைய சமுதாயத்துக்குக் கல்வியும் தேவை; பக்தியும் அவசியம். இந்த ரெண்டையும் சேர்த்துச் செய்யும் சக்தி விகடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!'' என்று மகிழ்ச்சியும் பூரிப்புமாகச் சொன்னார் நந்தினி டீச்சர். இதே கருத்தை வலியுறுத்தி, ஆசிரியர்கள் ரங்கராஜன், ராஜலட்சுமி, உஷாராணி முதலானோர் தெரிவித்தார்கள். நிறைவாக, ஹயக்ரீவர் திருவடியில் வைத்து பூஜிக்கப் பட்ட பேனாவும் மஞ்சள் ரட்சையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், சர்க்கரைப் பொங்கல் பிரசாதமும் வழங்கப்பட்டது.

‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்!’

பூஜை முடிந்து, எல்லோரும் கிளம்பிச் செல்லும் வேளையில், ஒரு மாணவி ஓடோடி வந்து, மூச்சிரைக்கச் சொன்னார்... ''இதுவரை இவ்ளோ நேரம் ஒரு இடத்துல அமைதியா நான் உட்கார்ந்ததே இல்லை. எனக்கே இது ஆச்சரியமா இருக்கு. சக்தி விகடன் நடத்தின ஹோமம், மனசுக்குள்ளே எனர்ஜியையும் நம்பிக்கையையும் தந்திருக்கு. அதோட பொறுமையையும் நிதானத்தையும் கொடுத்திருக்கு. ரொம்ப தேங்க்ஸ்!'' என்றார் புன்னகைத்தபடி. ஆம்... பொறுமையும் நிதானமும் இருந்தால், எதையும் வெல்லலாம்; எப்போதும் வெல்லலாம்!

படங்கள்: கே.சதானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism