
''வறுமையில் இருந்து படித்தவன் நான். என்னைப் போன்ற பிற மாணவர்களுக்கும் கல்வி எனும் ஊன்றுகோல் கிடைக்க விரும்பினேன். அதனால்தான், தாசில்தாராக பதவி உயர்வு பெற்ற பின்னும், பள்ளி மாணவர்களை நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற வைப்பதும், மாநில ரேங்க் வாங்க வைப்பதுமான முயற்சிகளைத் தொடர்கிறேன்!’'


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மானாமதுரைப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி பேசப்பேச கூடுகிறது வியப்பு!
''பி.எஸ்ஸி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். ஏழை மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்தேன். கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களையும் தெளிவுறக் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, 16 டிகிரிகளை வாங்கினேன். இந்தி, சம்ஸ்கிருதம், ஃபிரெஞ்சு மொழிகளையும் கற்றேன். டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி பணியில் சேர்ந்து படிப்படியாக தாசில்தார் வரை வந்தபின்னும், கல்விச் சேவையை நிறுத்தவில்லை.
என் பணி நேரம் முடிந்ததும், பொதுத்தேர்வு எழுதும் ஆதரவற்றோர் பள்ளி மற்றும் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். ஐந்து பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை எட்டின. பாடங்களுக்கு சி.டி, கையேடு தயாரித்துக் கொடுப்பது என கற்பித்தலில் பல சுவாரஸ்யங்களைப் புகுத்தி, அதைச் சாத்தியமாக்கினேன்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த, 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தேர்வு நெருங்கும் நான்கு மாதங்கள் மட்டும், எங்கள் துறையின் சிறப்பு அனுமதி பெற்று என்னை அழைத்துக் கொண்டார். இந்த வருடங்களில் 20 மாநகராட்சிப் பள்ளிகளில் 100 சதவிகிதம் என தேர்ச்சியை உயர்த்தினேன்!'' என்று தன்னுடைய நன்முயற்சி பற்றி பேசும் பாலாஜி, இந்தத் தேர்வு சீஸனில், தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களுக்குமான ஆலோசனைகளை 'கலங்காதிரு மனமே’ வாயிலாக வழங்குகிறார்.
மார்ச் 17 முதல் 23 வரை தினமும் 3 நிமிடங்களை ஒதுக்குங்கள். 044 - 66802912* என்ற எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.
ந.ஆஷிகா