Published:Updated:

உலகம் முழுக்க பெண் மனம் சொல்லும் #Metoo ஹேஷ்டேக்! என்ன சொல்கிறார்கள் பெண்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலகம் முழுக்க பெண் மனம் சொல்லும் #Metoo ஹேஷ்டேக்! என்ன சொல்கிறார்கள் பெண்கள்?
உலகம் முழுக்க பெண் மனம் சொல்லும் #Metoo ஹேஷ்டேக்! என்ன சொல்கிறார்கள் பெண்கள்?

உலகம் முழுக்க பெண் மனம் சொல்லும் #Metoo ஹேஷ்டேக்! என்ன சொல்கிறார்கள் பெண்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹாலிவுட்டில் கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் மீதான பாலியல் குற்றஞ்சாட்டு! அதைத் தொடர்ந்து, அந்தத் தயாரிப்பாளரின் திரைப்படங்களில் நடித்த கேட் வின்செல்ட், ஏஞ்சலினா ஜோலி போன்ற பிரபல நடிகைகள், அவரின் திரைப்படங்களில் நடித்தபோது பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகினோம் என வெளிப்படையாகக் கூறினர். 

இதற்கடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அலிஷா மிலனோ  என்ற ஹாலிவுட்  நடிகை, #Metoo ஹேஷ்டேக்கை உருவாக்கி,பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டலைத் தடுக்கும் பிரசாரத்தில் இறங்கினார். அவர் தன்னுடைய பக்கத்தில், “பெண்கள் எல்லோரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்துப் பேச  #Metoo ஹேஷ்டேக் என்று தங்களின் ஸ்டேடஸில் பதியுங்கள். அப்போதுதான் இந்தப் பிரச்னையின் ஆழத்தை அறிந்துகொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தார். இவர் இப்படிப் பதிவிட்டத்திலிருந்து, பல பெண்கள் இந்த ஹெஷ்டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லையைப் பகிர்ந்துக்கொள்ள தொடங்கினர்.

தமிழ்நாட்டிலும் இந்த ஹேஷ்டேக் ட்ரண்டானது. பல சமூக ஆர்வலர்கள், தங்களில் நிலைபதிவில்  ‘மீ டு’

என்று  பதிவிட்டனர். இதுகுறித்து, 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கூறுகையில், “சமூகவலைதளத்தில் இரண்டு நாள்ல இந்த ஹேஷ்டேக் ட்ரண்டு ஆயிட்டிருந்தது. பெண்கள் தங்களுக்கு நடத்த பாலியல் தொல்லை பத்தி இங்க வெளிப்படையா பேசவே தயங்குறாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடிகூட, விஷ்ணுப்பிரியானு ஒரு பொண்ணு இதே காரணத்தால தற்கொலை செஞ்சிட்டு இறந்தாங்க. சில மாதங்கள்முன், நான் எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, என்னையும் போன் கால்ல, சமூகவலைதளத்துல மோசமாப் பேசினாங்க. என்மேல் பொய் வழக்குகள் போட்டாங்க. இதைப் பத்தி பேசுறதுக்கு ஒரு தளம் உருவாக்கியிருக்கிறது ஆரோக்கியமான விஷயம். ஆனா, பெண்களுக்கு அரசியல் தெளிவு ஏற்படுத்தினால்தான், இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணமுடியும். இரண்டு நாள் முன்னாடிகூட, ‘நோ பிரா டே’னு கொண்டாடினாங்க. அதைப்பத்தி நான் ஒரு  ஸ்டேடஸ் போட்டிருந்தேன். அதுக்கு “உன் சைஸ் என்ன?”, “நீ  போடுவியா?”னு சிலர்  கமென்ட் பண்றாங்க. இந்த வக்கிர மனநிலையைத்தான் நாம வெளிப்படுத்தணுமே தவிர, நாம் வெட்கப்படவோ, அவமானப்படவோ அவசியம் இல்லை”, என்று தீர்க்கமாகக் கூறுகிறார். 
மேலும்,  சமூக  ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் கூறுகையில், ”நான் ஒரு திருநங்கை என்பதால் தற்போது

மட்டுமல்ல சிறுவயதிலிருந்தே பள்ளி, கல்லூரி என பாலியல் சீண்டல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகி இருக்கிறேன். ஏனென்றால், சிறு வயதில் இருந்தே நான் பெண் தன்மையுடன் இருந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய சக மாணவர்களுக்கு நான் திருநங்கை என்பது தெரியும். நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாவிட்டாலும், நான் அவர்களிடம் திருநங்கை என்பதைச் சொல்லியிருந்தேன். வாய்மொழியாகவோ உடல்ரீதியிலாகவோ.. என்னுடன் படித்த 75 மாணவர்களில் 45 பேராவது என்னை பாலியல் ரீதியிலாக சீண்டினார்கள். மூன்று மாதங்கள் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தேன். ஆனால், அதன் பிறகு ஒரு நாள் என்னை பாலியல் ரீதியிலாக சீண்டிய அத்தனை பேரின் பெயரையும் எழுதி நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டேன். நோட்டீஸ் போர்டின் சாவியையும் மறைத்து வைத்துவிட்டேன். அவர்கள் அதை நோட்டீஸ் போர்டில் இருந்து நீக்கும் முன்பு, அந்தத் தகவல் எல்லோருக்கும் சென்றடைந்துவிட்டது. அவர்களுடைய பெயர்கள் அனைவருக்கும் தெரிந்து, அவர்கள் அசிங்கப்பட்டார்கள். இதற்காக நான் வெட்கப்படவில்லை. அவர்கள் தானே வெட்கப்படவேண்டும். அதன் பிறகு கல்லூரியில் என்னிடம் நெருங்கவே பயந்தனர். இன்றைக்கு ’மீ டூ’  ஹேஷ்டேக்கின் மூலம் பெண்கள் பலரும் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்பங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். பெண்களை விட திருநங்கைகள் இன்னும் எளிமையான இலக்காக, பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்குக் கட்டாயம் யாருமே அவர்கள் வாழ்க்கையில் பாலியல் சீண்டலை அனுபவிக்காமல், கடந்திருக்க முடியாது. பேசாமல் இருப்பதால்தான் நாங்கள் எளிமையான இலக்காக மாறுகிறோம். பெண்கள் பேச வேண்டும். அவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களைக் குறித்துப் பகிர வேண்டும்.” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு