Published:Updated:

உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி.. உதவுவாரா நடிகர் விஜய்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி.. உதவுவாரா நடிகர் விஜய்?
உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி.. உதவுவாரா நடிகர் விஜய்?

உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி.. உதவுவாரா நடிகர் விஜய்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி.. உதவுவாரா நடிகர் விஜய்?

நெல்லை மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழந்த நிலையில், வறுமையில் வாடும் ரசிகரது குடும்பத்துக்கு நடிகர் விஜய் உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர், தேவதாஸ். நடிகர் விஜய் மீது தீவிர பற்றுக் கொண்டவர். இவர் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க இளைஞரணியின் களக்காடு ஒன்றிய துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார். கட்டடப் பணி செய்துவந்த நிலையிலும் விஜய்மீது கொண்ட பற்றின் காரணமாக இயக்கப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அந்தப் பகுதியில் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை இவர் ஒருங்கிணைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, கடந்த மாதம் 25-ம் தேதி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நடிகர் விஜய் மற்றும் மக்கள் இயக்கத் தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவதாஸ் குடும்ப நிலையைக் கேட்டறிந்த அவர்கள், மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை உடனடியாக அனுப்பி வைத்து அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க உத்தரவிட்டனர். 

உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி.. உதவுவாரா நடிகர் விஜய்?

உயிரிழந்த தேவதாஸ் தம்பிகள் இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். அவரது தங்கை சென்னையில் தனியார் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தின் வறுமையான நிலையைக் கவனத்தில் கொண்ட நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க  இளைஞரணித் தலைவா் ராஜகோபால், வள்ளியூா் ஒன்றியத் தலைவா் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக 40,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகளான சஜி, ஜெயராம், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய தேவதாஸ் உறவினர்கள், ’தளபதி விஜய் ரசிகரான தேவதாஸ் உயிருடன் இருந்தபோது தனது அபிமான நடிகருக்காக தொடர்ச்சியாக செயல்பட்டார். தற்போது அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அதனால் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவி செய்ய முன்வர வேண்டும். அதன் மூலமாகவே அவருக்காக பாடுபடும் இளைஞர்களுக்கு அவர் மீது நம்பிக்கை பிறக்கும்’ என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு