Election bannerElection banner
Published:Updated:

தட்புட்...தட்புட்... மாதவனின் 40 லட்ச ரூபாய் இரும்புக் குதிரையில் என்ன விசேஷம்? #IndianMotorcycle

தட்புட்...தட்புட்... மாதவனின் 40 லட்ச ரூபாய் இரும்புக் குதிரையில் என்ன விசேஷம்? #IndianMotorcycle
தட்புட்...தட்புட்... மாதவனின் 40 லட்ச ரூபாய் இரும்புக் குதிரையில் என்ன விசேஷம்? #IndianMotorcycle

தட்புட்...தட்புட்... மாதவனின் 40 லட்ச ரூபாய் இரும்புக் குதிரையில் என்ன விசேஷம்? #IndianMotorcycle

ஒரு கதை சொல்ட்டா சார்! பிரதமர் மோடிக்கும் நடிகர் மேடிக்கும் (Madhavan) ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டு பேருக்குமே ஊர் சுற்றுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், மேடிக்கு தன் சொந்த பைக்கை தானே ஓட்டி ஊர் சுற்றுவதுதான் கொள்ளை இஷ்டம். அதற்காக உலகில் உள்ள காஸ்ட்லி பைக்குகளாகத் தேர்ந்தெடுத்து, ஆண்டுக்கு ஒரு பைக்கை டெலிவரி எடுத்து விடுவார் மாதவன்.

இந்த தீபாவளிக்கு 40 லட்ச ரூபாய்க்கு செமையான ஒரு பைக்கை வாங்கி ரைடிங் கிளம்பி விட்டார் மேடி.

‘அலைபாயுதே’வில் நடிப்பதற்கு முன்பிலிருந்தே மாதவனுக்கு பைக்குகள் மேல் செம ஆர்வம். பைக் ரைடிங் என்றால் ரொம்ப இஷ்டம். படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறாரோ இல்லையோ, பைக்குகளை டெலிவரி எடுத்துக் கொண்டே இருப்பது மாதவனின் ஸ்டைல். அதிலும் ‘பாகுபலி’போல் பிரமாண்ட பைக்ஸ்தான் மாதவனுக்கு உயிர். சென்ற ஆண்டு பிரமாண்டமான பிஎம்டபிள்யூ K1600 பைக்கை வாங்கி, அதிலேயே மாநிலம் மாநிலமாக ரவுண்டு அடித்து வந்தார் மாதவன். அதற்கு முன்பு யமஹா V-MAX பைக், பிஎம்டபிள்யூ கார் என்று ஏகப்பட்ட கலெக்ஷன்கள் மேடியிடம் உண்டு.

இந்த ஆண்டு மீண்டும் ஒரு பல்க் பைக் மாதவனின் வீட்டு வாசலுக்கு வந்து இறங்கியிருக்கிறது. முந்தைய ஆண்டு ஜப்பான் பைக், அதற்கு முன்பு ஜெர்மன் பைக், இந்த ஆண்டு அமெரிக்கன் பைக். அமெரிக்க நிறுவனமான இந்தியன் மோட்டார் சைக்கிளின் ரோடுமாஸ்டர் எனும் மாடலைத்தான் மாதவன் புக் பண்ணியிருக்கிறார்.

அமெரிக்க நிறுவனமான இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் இருந்து வரும் இந்த ரோடு மாஸ்டர், ஒரு டூரிங் பைக். அதாவது, டூர் அடிக்க சிறந்த பைக். எத்தனை தூரம் வேண்டுமானாலும் அலுங்காமல் குலுங்காமல் இதில் டூர் அடிக்கலாம். அதற்கேற்றவாறு கச்சிதமாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுதான் இதன் ஸ்பெஷல். பில்லியன் ரைடர்கூட சாய்ந்து கொண்டே பயணிக்கலாம். அதாவது, பின் பக்கம் கார் போல முதுகு சப்போர்ட்டுக்கான சொகுசு சீட்கூட உண்டு.

டூரிங் என்றால், டிரைவிங் அசத்தலாக இருக்க வேண்டும்தானே? இன்ஜினும் பட்டையைக் கிளப்பக் கூடிய இன்ஜின்தான். 1,811 சிசி கொண்ட இந்த இன்ஜினின் பெயர் தண்டர்ஸ்ட்ரோக் 111, V-ட்வின். 110 குதிரை சக்திகள். இந்த பைக்கில் டூரிங் போக எத்தனை ECR இருந்தாலும் போதாது. இதன் டார்க் 15 kgm. அதாவது ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற கார்களில் இருக்கும் டார்க். மொத்தம் 6 கியர்கள். சிக்னலில் இருந்து விருட்டெனக் கிளம்பி, சட்டென மறையலாம்.

ஹெட்லைட்டைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க LED மயம். இருட்டில் கண் கூசிவிடும். கார்களில் இருப்பதுபோல், காற்று முகத்தில் அறையாமல் இருக்க விண்ட்ஷீல்டு வசதியெல்லாம் உண்டு. இந்த விண்ட்ஷீல்டுக்கு பட்டன் அட்ஜஸ்ட்டெல்லாம் உண்டு.

புல்லட்டிலேயே இமயமலை செல்லும் வெறியர்கள் இருக்கிறார்கள். மாதவனுக்குப் பிடித்த ரோடு, ஜெர்மனியில் இருக்கிறது. இங்கே இமயமலைக்கு நிகராக குளிர் வெளுத்து வாங்கும். அப்படிப்பட்ட நேரங்களில், க்ளவ்ஸ் போட்டு பைக் ஓட்டினாலும் அதையும் மீறி கைகள் விறைத்துவிடும். அதற்காகவே இந்த பைக்கில், குளிர்காலத்தில் கைகளை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் கிளைமேட் கன்ட்ரோல் கைப்பிடிகள் உள்ளன. இந்த பைக்கை எடுத்துக் கொண்டு போய் ஜெர்மனியில் ஓட்டுவாரா என்பது மாதவனுக்குத்தான் வெளிச்சம்.

மேலும், நீண்ட தூரப் பயணங்களில் நம்மை டயர்டு ஆக்காதவண்ணம், கார்களில் இருப்பதுபோல் ஹைடெக்கான மியூசிக் சிஸ்டம், டிக்கி இடவசதியும் உண்டு. இதற்குப் பெயர் சேடில் பேக். 64.5 லிட்டர் கொண்ட இதில் லக்கேஜ்களை பேக் செய்து கொள்ளலாம். இது தவிர, கீலெஸ் இக்னீஷன் ஸ்டார்ட், ரைடு கமாண்ட் சிஸ்டம் என்று ஏகப்பட்ட வசதிகள்.

ரைடு கமாண்ட் சிஸ்டம்தான் இந்த பைக்கின் அதிமுக்கிய ஸ்பெஷல். ஹோட்டல்களில் காம்போ ஆஃபர் தருவதுபோன்ற ஒரு சிஸ்டம்தான் இது. ஆளே இல்லாத, பாதையே இல்லாத மிரட்டலான ஒரு சாலையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். இந்த சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டால் போதும். ரேடியோ, பவரை அள்ளித் தெளிக்கும் இடியட் லைட்ஸ், சாலைக்கு ஏற்ப இறுக்கமாகும் சஸ்பென்ஷன் செட்-அப், பைக்கின் டச் ஸ்க்ரீனில் உங்களுக்கு வழிகாட்டும் மேப் சிஸ்டம் என்று எல்லாமே ஓப்பன் ஆகி, உங்கள் சோலோ ரைடிங்குக்குத் தன்னம்பிக்கை கொடுக்கும். உங்கள் போனை கைகளில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டு டச் செய்தால்கூட ஆபரேட் ஆகாதுதானே! இதில் உள்ள டச் ஸ்க்ரீன், க்ளோவ்ஸ் மாட்டிக் கொண்டு ஆப்பரேட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஏகப்பட்ட கூல் விஷயங்கள் கொண்ட இதன் விலை, வெறும் 45 லட்ச ரூபாய். ஏற்கெனவே பிஎம்டபிள்யூ, யமஹா என்று உலகின் காஸ்ட்லி பைக்குகளின் உரிமையாளர் மேடி, எப்படியும் அடுத்த வருஷமும் ஒரு பைக் வாங்கலாம். அவருக்கு நாம் பரிந்துரைக்கும் மற்ற மெர்சல் பைக்ஸ் லிஸ்ட் இதோ! (விலைகள் தோராயமாக)

1. டுகாட்டி பனிகாலே 1299 லிமிட்டெட் எடிஷன் - ரூ.1 கோடி 12 லட்சம்

2. ஹார்லி டேவிட்சன் CVO லிமிட்டெட் எடிஷன் - ரூ.43 லட்சம்

3. எம்வி அகுஸ்டா F4 RC - ரூ.35 லட்சம்

4. கவாஸாகி H2 R - 47 லட்சம்

5. யமஹா YZF R1 - ரூ.40 லட்சம்

6. ஏப்ரிலியா RSV4 - ரூ.40 லட்சம்

பட்ஜெட் இடிக்கலேனா இந்த செக் லிஸ்ட்டை மேடி டிக் அடிக்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு