Election bannerElection banner
Published:Updated:

பைபாஸ் ரோட்டில் சுக்கோய் ஓட்டி அசத்திய இந்திய ராணுவம்! #IAF #sukhoi

பைபாஸ் ரோட்டில் சுக்கோய் ஓட்டி அசத்திய இந்திய ராணுவம்! #IAF #sukhoi
பைபாஸ் ரோட்டில் சுக்கோய் ஓட்டி அசத்திய இந்திய ராணுவம்! #IAF #sukhoi

பைபாஸ் ரோட்டில் சுக்கோய் ஓட்டி அசத்திய இந்திய ராணுவம்! #IAF #sukhoi

நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளியே கசிய விட்டால், அது பெரிய தேசக்குற்றம். ஆனால், ராணுவமே அதை வெளிப்படையாகச் செய்தால்.. அது தைரியம்! இந்த விஷயத்தில் சொல்லி அடித்திருக்கிறது நம் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் (IAF). நேற்று திடீரென மதியம் 11 மணியிலிருந்து மாலை வரை, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் திடீரென பஸ், கார்கள் எதுவும் ஓடவில்லை. ஏதும் பந்த்தோ என்று பதறிவிட்டார்கள் மக்கள்.

ஆனால், வாகனங்களுக்குப் பதில் ‘வ்வ்ர்ர்ரூம்’ என விமானங்கள் வந்திறங்கியதில் மெய் சிலிர்த்தனர். மொத்தம் 20 விமானங்கள்; எல்லாமே இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான போர் விமானங்கள். ஒரு விமானம் ‘சர்’ரெனக் காற்றில் ஏறிக் கிளம்ப... ஊர்களிலிருந்து பணிமனைக்கு வந்து சேரும் பேருந்துபோல் அடுத்த விமானம் தரையிறங்க... என்று அதகளம் பண்ணிவிட்டது ராணுவம். 

‘பஸ்கள் ஓடும் சாலையில் என்னாத்துக்கு ஃப்ளைட்’ என்று கேள்வி எழாமல் இல்லை. ஏதேனும் விமான சாகச நிகழ்ச்சியா என்றால், அதுதான் இல்லை. இது முழுக்க முழுக்க ராணுவத்தின் ஏற்பாடு. அதாவது ரகசியம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அதை வெட்டவெளிச்சமாக நடத்தியதில் தெரிகிறது நம் ராணுவத்தின் தில்!

இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் பட்சத்தில், எதிரி நாட்டு ராணுவத்தின் முதல் ஐடியா இதுவாகத்தான் இருக்கும். அதாவது, முதலில் எதிரிகளின் ராணுவத் தளவாடங்களைக் குண்டு வைத்து  சோலியை முடிப்பதுதான். அதுவும் விமான ஓடுதளத்தைக் காலி செய்துவிட்டால்... வெற்றி பெறுவது செம ஈஸி. அதற்கப்புறம் விமானங்கள் மிஞ்சினாலும்... லாஞ்ச் செய்வதற்கு ஓடுதளங்கள் இருக்காது. இப்படி ரன்வே இல்லாமலே தோற்றுப் போன நாடுகள் சில உண்டு. அந்த மாதிரி ஒரு சிக்கல் இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஐடியா. அதனால், பொதுப் போக்குவரத்து நடக்கும் சாலைகளையும் ரன்வே ஆக்கிவிட்டால்...? விமானங்களை இங்கிருந்தே லாஞ்ச் செய்து கொள்ளலாமே! இதற்கான ஒத்திகையைத்தான் நேற்று இந்திய ராணுவம் நடத்திப் பார்த்தது.

இதற்காக மொத்த விமானப் படை வீரர்களும் உ.பி.யில் குவிந்து விட்டார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்பதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், 10 மணிக்கே கூடிவிட்டார்கள். காலை 10.40 மணிக்கு இந்திய ராணுவத்தின் செல்லப் பிள்ளையான ‘மிரேஜ் 2000’ எனும் ஏர் கிராஃப்ட், அந்த ஹைவேயில் ஜர்ரெனக் காதைக் கிழித்தபடி வானத்தை நோக்கிப் பறந்து, மறுபடியும் கீழிறங்கி.. லேசாகச் சாலையை உரசியபடி என்று சாகத்தை நிகழ்த்த ஆரம்பித்து விட்டது. பொதுமக்கள் பார்க்கும்படி இது எல்லாமே நடந்தது என்பது கூடுதல் ஹைலைட். சினிமாவில் பார்ப்பதுபோல், சில விமானங்கள் ஓவர்டேக் பண்ணுவதெல்லாம் நடந்ததில் சிலிர்ப்பானார்கள் ஆடியன்ஸ். ஆனால், எல்லாமே பாதுகாப்பாக நடந்தது. இதற்காக சில மணி நேரங்களுக்கு முன்பே எல்லா விமானங்களையும் ரகசியமாகக் கொண்டு வந்ததில் இருக்கிறது ராணுவ ரகசியம்.

ஒரு திரைப்பட புரொமோஷனின்போது, அந்த டெக்னீஷியன்கள் எல்லோரையும் மேடை ஏற்றுவதுபோல், போரின்போது நம்மைக் காப்பாற்றிய, காப்பாற்றப் போகும் பெரும்பான்மையான விமானங்களை வானம் ஏற்றியிருந்தார்கள். C-130J, சூப்பர் ஹெர்குலிஸ், SU-30 MKI, ஜாகுவார், சுக்கோய் 30 - இந்த ஜெட் விமானங்கள்தான் நிகழ்ச்சியின் ஸ்டார் அட்ராக்ஷன். ஒவ்வொரு ஜெட்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருந்தன. C-130J விமானம் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுவது என்றால், ரஷ்யாவில் தயாராகி வரும் SU-30 MKI-வுக்குப் பெரிய வரலாறு உண்டு. 

முதன் முதலில் 1997-ல் இந்தியாவின் புனே லோஹேகான் விமான தளத்துக்குப் புது வரவாக வந்திறங்கிய SU-30 MKI,  ஒரு பயங்கரமான டெர்மினேட்டர் ஃப்ளைட். ராணுவச் சண்டைகளின்போது இதன் பீட் கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்களாம். 7 SU-30 MKI ஜெட் விமானங்கள், 2009-ல் க்ராஷ் ஆகி வெடித்ததைச் சொன்னார்கள். அதில் ஒன்று தொலைந்துபோய், இன்னும் கண்டுபிடிக்கவே முடியாதது ராணுவத்துக்கு விடுக்கப்பட்ட சவால். ரஷ்யாவுக்கு மொத்தம் 272 'SU-30 MKI' விமானங்கள் ஆர்டர் கொடுத்துள்ளது இந்திய ராணுவம். அதில் 240 மட்டும்தான் டெலிவரி கிடைத்திருக்கிறதாம். மீதமுள்ள 32 விமானங்களும் அடுத்த 3 வருடங்களுக்குள் நம் தடவாளங்களில் ‘வ்வ்ர்ரூம்ம்’மலாம்.

C-130J விமானத்தின் இன்ஜின், நம் தனவான்களின் காஸ்ட்லி செல்லமான ரோல்ஸ்ராய்ஸ்  நிறுவனம் தயாரித்தது. இந்த விமானங்கள் - சண்டைக்குப் போகாது. மற்றபடி போரின்போது வீரர்களை மீட்டு வருவது, ஆயுதங்களை டெலிவரி கொடுப்பது, தொலைந்து போனவர்களைத் தேடுவது போன்ற ரெஸ்க்யூ பணிகளுக்குத்தான் இந்த C-130J. 

Mirage 2000 ஜெட்டின் வேகம், பயங்கர த்ரில்லிங்கானது. குவாலியரிலிருந்து டெல்லிக்கு, அதாவது 375 கி.மீ தூரத்தை வெறும் 12 நிமிடங்களில் பறந்து கடக்கும் பயங்கரவாதி. ஜாகுவார் ஜெட்கள், வயிற்றில் எக்கச்சக்க ஆயுதங்களைச் சேகரித்து, சொல்லியடிப்பதில் கில்லி. 

போரில் பறக்கும் விமானங்களை, சாதாரண சாலையில் வைத்து ரிகர்சல் பார்த்த இந்திய ராணுவத்துக்கு லைக்ஸ். மொத்தம் 40 விமானங்கள்... ‘ஜர் புர்’ என இறங்கி ஏறிப் பறக்க வேண்டும் என்றால், அந்தச் சாலையின் தரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்!! 

ராணுவத்துக்கு ஒரு வேண்டுகோள் - மவுன்ட் ரோடு பக்கம் உங்கள் ரிகர்சலை வெச்சுடாதீங்க!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு