Published:Updated:

உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!

உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!

உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!

உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!

Published:Updated:

வணக்கம் நண்பர்களே...

பள்ளிக்கு ஓய்வு, பாடப் புத்தகங்களுக்கு ஓய்வு என உற்சாகமாக இருப்பீர்கள். ஓய்வுக்கும் சும்மா இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சும்மா இருப்பது என்பது, எதையுமே செய்யாமல் இருப்பது. “கண் முழிச்சுக்கிட்டே தூங்குறியா?” என்பார்களே அப்படி. ஓய்வு என்பது, வழக்கமாகச் செய்யும் செயலில் இருந்து விடுபட்டு, நம்மைப் புதுப்பித்துக்கொள்வது.

சுற்றுலா செல்வது, உறவினர்களைச் சந்திப்பது, வியர்க்க வியர்க்க விளையாடுவது, புதிய பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது, வீட்டு வேலையில் உதவுவது எல்லாமே அப்படியான ஓய்வுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!

இத்தனை நாட்களாக, நீங்கள் பள்ளிக்குச் செல்லும் பரபரப்பில் இருந்தீர்கள். காலை நேரத்தில், அம்மாவுக்கு சமையல் அறையில் உதவ நினைத்தாலும் முடியாமல் போயிருக்கும். இப்போது உதவுங்கள். காய்கறிகளை நீரில் நனைத்துக் கழுவிப்பாருங்கள். அதைத் தொடும்போது, உண்டாகும் ஸ்பரிசமே புதிய அனுபவமாக இருக்கும். சமையல் அறையை நிதானமாகப் பாருங்கள். “அட, பொருட்களை எல்லாம் அம்மா எவ்வளவு நேர்த்தியாக அடுக்கிவெச்சிருக்காங்க’’ என வியப்பு ஏற்படும். இத்தனை நாட்களாக பல முறை சமையல் அறைக்குள் வந்தபோது கவனிக்காத விஷயங்கள், கண்களுக்குத் தெரியும். அதுபோல மற்ற அறைகள், தெரு என எல்லா இடங்களிலும் புதிய புதிய விஷயங்கள் கண்களில் தென்படும்.

இந்த இதழ் சுட்டி விகடனும் வழக்கமான பகுதிகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, புதிய விஷயங்களுடன் உங்கள் கைகளில் தவழ்கிறது. சுட்டிகளின் விடுமுறை உலா, 16 பக்கங்களில் புதிர்கள், விளையாட்டு, அழகான கதைகள், உங்கள் கைகளால் தயாராகக் காத்திருக்கும் அட்டகாசமான ‘ஸ்பேஸ் ஜெட்’ க்ரியேஷன்ஸ் என எல்லாமே உங்கள் விடுமுறை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். அடுத்த இதழிலும் கோடைக் கொண்டாட்டம் புதிய விஷயங்களுடன் தொடரும்.

வாங்க... உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!

     
அன்புடன்,

ஆசிரியர்.      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism