Published:Updated:

ஹலோ விகடன்....

குழந்தைகளோடு கேளுங்கள் குழந்தைகளுக்காக கேளுங்கள்!

ஹலோ விகடன்....

குழந்தைகளோடு கேளுங்கள் குழந்தைகளுக்காக கேளுங்கள்!

Published:Updated:
ஹலோ விகடன்....
ஹலோ விகடன்....

‘‘உங்களில் எத்தனை பேர் குழந்தைகளுக்குத் தூங்கும் முன் கதை சொல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்? `ஆம்’ என்றால், உங்களுக்கு என் வாழ்த்துகள். இல்லையென்றாலும், இன்று முதலாகினும் தொடங்குங்கள். நல்ல கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை ஆரம்பத்திலேயே விதைக்க முடியும். அப்படியான தேர்ந்தெடுத்த கதைகளை உங்களுக்குச் சொல்லக் காத்திருக்கிறேன்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஆர்வத்துடன் சொல்கிறார்... தமிழ்ப் பேராசிரியரும், பேச்சாளருமான மஞ்சுளா.

• ``அரசாங்கப் பொருள்தானே, வீணாக்கினால் என்ன என்று உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையில்லாமல் வைத்திருப்பது தீயபழக்கமே. சாணக்கியரின் கதை ஒன்று, இப்படி வீணாக்குதல் தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

• எல்லா உயிர்களையும் சரிசமமாகவே நேசிக்க வேண்டும். உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் நாமதேவரின் கதை ஒன்றைச் சொல்கிறேன்.

• நாம் முன்னேற அடியெடுத்து வைக்கும்போதுதான் அடுத்தவர்கள் நம்மைத் தூற்ற நினைப்பார்கள். தூற்றுவார் தூற்றட்டும், அதையெல் லாம் கண்டுகொள்ளக் கூடாது எனச் சொல்லும் பட்டினத்தார் கதை ஒன்றும் என்னிடம் உண்டு.

• நம் எண்ணங்கள் நல்லனவாக இருக்கும்போது நம் செயல்களும் நல்லனவாகவே அமையும். ஜடபரதரின் கதையோடு இதை விளக்குகிறேன்.

• ஆசை அவசியம்தான். ஆனால் அந்த ஆசை எல்லை கடந்து போகலாமா? அரசன் - துறவி கதையைக் கேளுங்கள்.

• ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என முடிவு செய்தாகிவிட்டது. அதை ஏன் தள்ளிப்போட வேண்டும்? பீமன் - தருமன் கதை சொல்லும் நீதி இதுதான்.

• ஒரு மனிதன் புகழின் உச்சத்துக்குச் சென்றாலும் ஆணவம் அவனை தரைமட்டத்துக்கு கொண்டு சேர்க்கும் என்பதைத்தான் ராமரின் கதை ஒன்று நமக்குப் புரிய வைக்கிறது.

இந்த ஏழு நீதிக்கதைகளுடன் உங்களோடு பேசக் காத்திருக்கிறேன். அவசியம் குழந்தைகளோடு கேளுங்கள், குழந்தைகளுக்காக கேளுங்கள்.’’

பொன்.விமலா  படம்: ஆ.முத்துக்குமார்

மஞ்சுளா சொல்லும், குழந்தைகளை நல்வழிப்படுத்தும் கதைகளை, ‘கலங்காதிரு மனமே’ குரல் ஒலியில் மே 12 முதல் 18 வரை, 044 - 66802912* என்ற எண்ணை தொடர்புகொண்டு கேளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism