Published:Updated:

ட்விட்டர்: கேள்வி பதில் நேரம்!

ட்விட்டர்: கேள்வி பதில் நேரம்!

ட்விட்டர்: கேள்வி பதில் நேரம்!

ட்விட்டர்: கேள்வி பதில் நேரம்!

Published:Updated:

ங்கத்தில் முதலீடு செய்வது தொடர்பான கேள்விகளுக்கு நாணயம் விகடன் - ட்விட்டர் கேள்வி பதில் நேரத்தில் ஜெம் அண்டு ஜுவல்லரி ட்ரையினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன் அளித்த பதில்கள்:

? ஹால்மார்க், கேடிஎம் என்று நகைகளில் என்னென்ன தரச் சான்றிதழ்கள் உள்ளன? இவற்றுள் எது சிறந்தது?

‘‘ஹால்மார்க் என்பது தரத்தை குறிப்பது; கேடிஎம் என்பது தங்கத்துடன் இணைப்பானாக பயன்படுத்துவது. கேடிஎம் என்பதற்கும் தங்கத்தின் தரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தரத்தை அறிய ஹால்மார்க் குறியீடு உள்ளதா என்பதைப் பாருங்கள். அது சரியாக இருந்தால், அந்தத் தங்க நகையை நம்பிக்கையோடு வாங்கலாம்.’’

ட்விட்டர்: கேள்வி பதில் நேரம்!

?தங்க நகைக்கான செய்கூலி, சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் ஏன் மாறுபடுகிறது. கூலி, சேதாரத்தில் ஏமாறாமல் இருக்கக் கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

‘‘கூலி, சேதாரம் என்பது ஒரு நகையில் உள்ள வேலையைப்  பொறுத்து மாறும். ஒரு நகையைச் செய்யும்போது அதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துதான் சேதாரம் அமையும். சில நகைகளுக்குக் குறைவாகவும்  சில நகைகளுக்கு அதிகமாகவும் இழப்பு ஏற்படலாம். அதிகச் சேதாரத்தைத் தவிர்க்க நான்கு, ஐந்து கடைகளில் விசாரியுங்கள். உங்களுக்கு எது குறைவாகவும், சரியாகவும் தோன்றுகிறதோ, அந்தக் கடையைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். நகைகளை வாங்கும் போது கூடியவரைக்கும் கல் நகைகளைத் தவிர்க்க பாருங்கள்.’’

? தங்க நகையின் தரத்தை சோதிக்கும் இயந்திரங்கள் சரியாகத் தான் சோதிக்கின்றனவா அல்லது அப்ரைஸர்கள் சோதிப்பது சரியா?

‘‘பல இடங்களில் தங்கத்தின் தரத்தை அறிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை ஓரளவுக்குத்தான் சரியான முடிவுகளைக் கூறும். இந்த இயந்திரங்களின் முடிவுகள் 40% சரியானதாக இருக்கும். அதே சமயம், அப்ரைஸர்கள் சோதிப்பது 90% சரியான முடிவுகளைத் தரும். இயந்திரங்களைவிட அப்ரைஸர்கள் சோதிப்பது சரியாக இருக்கும்.’’

? போலி நகைகளைக் கண்டறிய என்ன வழிமுறைகள் உள்ளன?

‘‘ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்று பாருங்கள். அதில் ஐந்து சீல்கள் இடம் பெற்றிருக்கிறதா என்று பாருங்கள்.  அது இருந்தால், முறையான வரி செலுத்தி பில்லை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அது போலி நகை எனில், அந்த நிறுவனத்திடம் முறையிட பில் இருப்பது அவசியம். பில் தரத் தயங்கும் தனிநபர்களிடம்  நகை களை வாங்காதீர்கள். பெரும்பாலான போலி நகைகள் இப்படித்தான் விற்கப்படுகின்றன. முறையான அப்ரைஸரிடம் சென்று நகையை வாங்கும்முன் சரிபார்த்து வாங்குவது சிறந்தது.’’

ட்விட்டர்: கேள்வி பதில் நேரம்!

? தங்க நாணயங்களை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்க முடியுமா?

‘‘வாங்க முடியாது, தங்க நாணயத்துக்கு கடன் தரக் கூடாது என்று ரிசர்வ் வங்கி  சொல்கிறது. நடைமுறையில் தங்க நாணயங்களில் செம்பிலோ, வெள்ளி யிலோ தங்கத்திலோ, ஒரு ஹூக் வைத்தால் டாலராகக் கருதப்படும். எனவே, அந்த டாலரின் மூலம் கடன் வாங்கலாம். வங்கி ஒரு கிராமுக்கு நிர்ணயித்துள்ள கடன் தொகையை முழுமையாக வாங்கலாம்’’.

? அண்மையில் நகை வாங்கினேன், 22 காரட்டுக்கு பதில் 18 காரட்தான் இருந்தது. இது குறித்து யாரிடம் புகார் செய்வது?

‘‘முதலில் உங்களிடம் இருக்கும் நகை ஹால்மார்க் நகைதானா என்று பாருங்கள். ஹால்மார்க் நகையாக இருந்தால், இந்திய தர நிர்ணய அமைவனத்திடம் (பிஐஎஸ்) புகார் தெரிவிக்கலாம். ஹால்மார்க் இல்லாதபோது நகை வாங்கிய கடை, பில்லை வைத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிடலாம்.’’