Published:Updated:

ஹலோ விகடன்....

ஹலோ விகடன்....

ஹலோ விகடன்....

ஹலோ விகடன்....

Published:Updated:
ஹலோ விகடன்....

சின்னத்திரையில் `ஸ்டாண்ட் அப்’ காமெடி டிரெண்டை உருவாக்கிய முதல் ஸ்டாண்ட் அப் காமெடியனான மதுரை முத்து, ஸ்க்ரீனில் மட்டுமல்ல; நேரிலும் காமெடி ரகளைதான் கொளுத்துகிறார்! அவருடன் சிரித்தது போக, பேசியதில் இருந்து...

“இந்தக் காமெடி ஞானமெல்லாம் எனக்கு எங்க தாத்தா, அப்பாகிட்ட இருந்து வந்தது... ஏதோ பரம்பரை வியாதி மாதிரி! பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை, திருமங்கலத்துல. அதனாலதான் முத்து இருளப்பாண்டிங்குற என்னோட பேரு ‘மதுரை’ முத்துவாயிருச்சு. மதுரையோட வட்டார மொழியே கொஞ்சம் காமெடி, நக்கல், நையாண்டியோடதானே இருக்கும்?! அதுவே நமக்கும் கைகொடுத்திருச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம கொஞ்சம் அறிவாளி. அதனால் பி.காம் முடிச்சதும் பிரேக் போடாம எம்.காம் சேர்ந்தேன். காலேஜ்ல மரத்தடியில இருந்து மேடை வரைக்கும் நாம அடிக்குற காமெடிக்கு ரசிகர் கூட்டம் அலைமோதும். அதனால நம்ம நட்பு வட்டத்தோட வேண்டுகோளுக்கு இணங்க, ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில கலந்துகிட்டு கலக்கி, இப்போ உள்ளூர் திருவிழா தொடங்கி வெளிநாட்டு மேடைகள் வரைக்கும் காமெடி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கேன்!’’

ஹலோ விகடன்....

“வேற என்னவெல்லாம் பண்றீங்க?’’

“பட்டிமன்ற நடுவர் போஸ்ட்டையும் நாம எடுத்துக்கிட்டோம்ல! இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் பட்டி மன்றங்கள் பாத்திருப்பேன். அப்புறம் சன் டி.வி-யில தேவதர்ஷினி மேடத்தோட ‘சன்டே கலாட்டா’, கேப்டன் டி.வி-யில ‘மெரசலாயிட்டேன்’ நிகழ்ச்சிக்கு நடுவர்னு ஓடிட்டிருக்கு!’’

‘‘உங்களுக்குப் பிடிச்ச காமெடியன்?’’

“நம்ம கவுண்டர் சாருதான். சினிமாவுல பார்த்தது போக அவரு டைமிங்கா பேசுறதைப் பத்தி நெறய கேள்விப்பட்டிருக்கேன். ஒருநாள் கவுண்டரோட ஃப்ரெண்டு ஒருத்தர் அவருகிட்ட போய், ‘இன் னிக்கு ஒரு ஸ்கூல் ஃபங் ஷன்ல பேசறதுக்கு கூப் பிட்டாங்கன்னு போனேன். எல்லாரும், ‘நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க, ஹீரோவா நடிக்கலாமே’ன்னு சொன்னாங்க’ன்னு சொல்லியிருக்காரு, அடுத்த செகண்டே கவுண்டர், ‘டேய்... ஓடற தண்ணியில மொகத்த பார்க்குற மாதிரி மூஞ்சிய வெச்சிருக்க உன்ன எவன்டா ஹீரோன்னு சொன்னது? நீ போனது பிளைண்டு ஸ்கூலா?!’ன்னு கேட்டு கலாய்ச்சிருக்கார். அவர் இப்போ நடிக்கலைன்னாலும், என்ன மாதிரி எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் அவரு எப்ப திரும்ப வந்து கலக்குவாருன்னு எதிர்பார்த்துட்டு இருக்கோம்!’’

“ரீல்ல காமெடி... ரியல்ல எப்படி?’’

“ஒருநாள் என் பொண்டாட்டி உப்பே இல்லாம சமைச்சு வெச்சதும் இல்லாம, ‘என்னங்க எப்படி இருக்கு இன்னிக்கு சமையல்? கைக்கு தங்க வளையல் எதாச்சும் தேறுமா?’னு கேட்டா. நான் உடனே, ‘அட, தங்க வளையல் என்ன..? என்னோட எல்.ஐ.சி பாலிசி பணமே வந்து சேந்துடும் கவலைப்படாதே!’ன்னு சொல்லிட்டேன்!’’

மதுரை முத்துவின் கலக்கல் காமெடிகளை ‘கலங்காதிரு மனமே’ பகுதியில் கேட்டு ரசிக்க, ஜூன் 9 முதல் 15 வரை வரை 044 - 66802912  என்ற எண்ணை டயல் செய்யுங்கள். அளவில்லாமல் சிரியுங்கள்!

இந்துலேகா.சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism