Published:Updated:

’சதுரங்க வேட்டை’ புகழ் இரிடியம்... இனி அத்தியாவசிய சிகிச்சைக்கும் பயன்படும்!

’சதுரங்க வேட்டை’ புகழ் இரிடியம்... இனி அத்தியாவசிய சிகிச்சைக்கும் பயன்படும்!

’சதுரங்க வேட்டை’ புகழ் இரிடியம்... இனி அத்தியாவசிய சிகிச்சைக்கும் பயன்படும்!

’சதுரங்க வேட்டை’ புகழ் இரிடியம்... இனி அத்தியாவசிய சிகிச்சைக்கும் பயன்படும்!

’சதுரங்க வேட்டை’ புகழ் இரிடியம்... இனி அத்தியாவசிய சிகிச்சைக்கும் பயன்படும்!

Published:Updated:
’சதுரங்க வேட்டை’ புகழ் இரிடியம்... இனி அத்தியாவசிய சிகிச்சைக்கும் பயன்படும்!

இரிடியம்...இந்தப் பெயரைக் கேள்விப்படாதவர்கள் தமிழ்நாட்டில் வெகு சிலரே இருக்கக்கூடும். இரிடியத்திற்கு சக்திகள் இருப்பதும் இல்லாததும் ஒரு புறம் இருந்தாலும் இந்தப் பெயர் பரவலாக அறியப்படுவதற்கான காரணம் இதன் பெயரால் நடக்கும் மோசடிகள்தான். இரிடியத்திற்கு அபூர்வ சக்திகள் இருப்பதாக நம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். இல்லை இதுவும் மற்ற உலோகத்தை போன்று சாதாரணமானதுதான் என்றும் பலர் கூறுகின்றனர்.


இரிடியம் என்ற பெயர் பரவலாக இருக்கும் அளவிற்கு அது பூமியில் காணப்படுவதில்லை. அரிதான உலோகம்; குறைவான அளவே கிடைக்கிறது; விலையும் சற்று அதிகம். அறிவியலின்படி பார்த்தால் இரிடியத்திற்கு இருக்கும் சக்திகளில் ஒன்று அதன் வெப்பம் தாங்கும் திறன். இதன் உருகுநிலை 2466 °C. எனவே அதிகம் வெப்பம் உருவாகும் இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட இரிடியம் இனிமேல் உயிர்காக்கும் மருந்தாகவும் பயன்படப்போகிறது.

இரிடியம் பூமிக்கு வந்த கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இரிடியத்திற்கு பல கட்டுக்கதைகள் இருக்கலாம். ஆனால், இது பூமிக்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பதற்கு ஆரய்ச்சியாளர்களிடம் பதில் இருக்கிறது. பூமியின் உட்பகுதியில் இரிடியம் இருந்தாலும் அது எப்படி மேற்பரப்புக்கு வந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போதுதான் அவர்களுக்குப் பல பதில்கள் கிடைத்தன. ஒரு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியதுதான் டைனோசர்களின் அழிவுக்குக் காரணமாய் இருந்திருக்கிறது. அந்த விண்கல்லின் பெரும்பகுதி இரிடியம்தான் என்பதும் அது பூமியில் மோதியதுதான் டைனோசர்கள் அழிவுக்குக் காரணம் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

புற்றுநோயைக் குணப்படுத்துமா இரிடியம்?

புற்றுநோய் ஏற்பட்ட பகுதிகளைக் குணப்படுத்துவதற்கு கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. அதே வேளையில் புற்றுநோயைச் சரி செய்வதற்கான இன்னும் பல ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன.
அப்படி இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகமும் சீனாவின் சன் யாட் சென் பல்கலைக்கழகமும் இணைந்து இரிடியத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறையைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

இவர்களின் ஆராய்ச்சியில் இரிடியம் உலோகம் மற்றும் இயற்கையான மருந்துகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு கலவை உருவாக்கப்படுகிறது. அந்தக் கலவை புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தப்படுகிறது. பின்பு லேசர் மூலம் அந்த இடம் தூண்டப்படுகிறது. அப்பொழுது உருவாகும் செறிவுமிக்க ஆக்ஸிஜன் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. அதே வேளையில் அருகில் இருக்கும் பாதிப்படையாத செல்கள் இந்தச் செயல்பாட்டால் பாதிப்படைவதில்லை. பேராசிரியர் பீட்டர் சேட்லர் தலைமையில் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனையில் இந்தப் புதிய முறை வெற்றிகரமாகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பேராசியர் பீட்டர் சேட்லர் இந்த ஆய்வு முறை பற்றி கூறும்போது ”புற்றுநோய்க்கு இரிடியத்தை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதே வேளையில் இந்தப் புதிய முறையில் பக்கவிளைவுகள் எதுமின்றி புற்றுநோய் செல்கள் அழிகின்றன. பாதிக்கப்பட்டவரும் சிரமத்திற்கு ஆளாவது குறைகிறது. இந்த ஆராய்ச்சியின் வெற்றி  விரைவாக புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு உதவுவது மட்டுமன்றி புற்றுநோய் சிகிச்சையை வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பதற்கும் முதல் படியாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் 

உலகம் முழுவதும் ஒரு நோயைக் குணப்படுத்த உலோகங்களைப் பயன்படுத்துவது என்பது பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. பழங்காலத்தின் மருத்துவ முறைகளை நவீன மருத்துவ முறைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தால் அவை சிறந்த பலனை தரும் என்பதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலகுக்கு உணர்த்தியிருக்கின்றன. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism