Published:Updated:

அழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்!

அழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்!

அழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்!

அழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்!

Published:Updated:

‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் பிறந்தவர். பல கனவுகளுடன் 16 வயதில் திரையுலகில் நுழைந்த ஆர்த்தியின் முதல் படம், ‘பாகல்பன்’ என்ற இந்திப் படம். தொடர்ந்து, தெலுங்கில் பரபரப்பான நடிகையானார். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

அழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்!

இடையில், ‘புன்னகை தேசம்’, ‘எனக்கு 20 உனக்கு 18’ படங்களின் நாயகனான, தெலுங்கு நடிகர் தருணைக் காதலிக்க... விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார்கள் இருவரும். சில மாதங்களிலேயே தருணுடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தார். தருணுக்கு, வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆன தகவல் அறிந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆர்த்தி, மருத்துவ சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அமெரிக்காவுக்கே திரும்பியவர், தூரத்து உறவினர் உஜ்வாலை மணந்தார். ஆனால், பரபரப்பான வாழ்க்கை முறை, ஷூட்டிங், ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டு என்று லைம்லைட்டில் இருந்துவிட்டு சும்மா இருக்க நேரும் பெரும் அவஸ்தை, ஆர்த்திக்கும் நிகழவே, சில ஆண்டுகளில் கணவரைப் பிரிந்தவர், சினிமா வாய்ப்புகளைத் தேடி ஹைதராபாத் திரும்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகரித்த உடல் எடையைக் குறைக்க, டயட்டிங் போன்ற விஷயங்களில் தீவிரமானார். ‘உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்’ என்று சிலர் கூறவே, அமெரிக்காவில் ‘லிப்போசக்‌ஷன்’ எனும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் உடல் எடை அதிகரிக்க... நான்காவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மூச்சுத் திணறலால் அடிக்கடி அவதிப் பட்டவர், மருத்துவ சிகிச்சையின் போது மாரடைப்பால் இறந்துவிட்டார். ‘லிப்போசக்‌ஷன் அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகளால்தான் ஆர்த்தி இறந்திருக்கக் கூடும்’ என்று காரணம் சொல்லப்படுகிறது.

ஆர்த்தியின் திடீர் மரணத்துக்கான காரணங்களை ஆராயும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ‘லிப்போசக்‌ஷன்’ சிகிச்சை பற்றிய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.

இது, அழகு சிகிச்சையின் அமெரிக்க அதிர்ச்சி. உள்ளூர் அதிர்ச்சி..?

60-ம் பக்கத்துக்கு வாருங்கள்!

சா.வடிவரசு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism