Published:Updated:

ஆஃப் ஷோல்டர் முதல் கோட் மாடல் வரை... 2017-ல் வந்த லெஹெங்கா சோலி கலெக்ஷன்!

ஆஃப் ஷோல்டர் முதல் கோட் மாடல் வரை... 2017-ல் வந்த லெஹெங்கா சோலி கலெக்ஷன்!
ஆஃப் ஷோல்டர் முதல் கோட் மாடல் வரை... 2017-ல் வந்த லெஹெங்கா சோலி கலெக்ஷன்!

கூட்டத்தில் எப்போதும் தனித்துத் தெரியவேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்கான மெனக்கெடல் ஏராளம். ட்ரெண்ட், கலர், டிசைன், பேட்டர்ன் என யோசிக்கவே ஒரு நாள் ஆகும். முன்பைவிட இப்போது டிசைன்களிலும் சரி, விலைகளிலும் சரி அத்தனை  ஆப்ஷன்ஸ். அதனால்தான், 2017-ல் இணையத்தில் ட்ரெண்டான  சில சூப்பர் டூப்பர் லெஹெங்கா கலெக்‌ஷன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 

பண்டிகைக் காலம் என்றாலே சிவப்பு, மஞ்சள் என பிரைட் கலர்களையே தேர்ந்தெடுக்கும் நாம், லைட் கலர்களை ஏனோ விட்டுவிடுகிறோம். லைட் கலர்களும் உங்களை அழகாகவே காட்டும். தற்போது ட்ரெண்டில் இருக்கும்  ஆஃ ப் ஷோல்டர் (off shoulder) நெக் பேட்டர்ன், லெஹெங்கா சோலியிலும் வந்துவிட்டது. பேஸ்ட்டல் பீச் (pastel peach) மற்றும் லெமன் எல்லோ காம்பினேஷனில் இந்த லெஹெங்கா செட் ஃபேஷன் விரும்பிகளுக்கு நல்ல ஆப்ஷன். சீரற்ற விளிம்புகளைக்கொண்ட சோலி, அதில் அமைந்திருக்கும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செம க்யூட். சோக்கர் (choker) மற்றும் சாந்த்பாலி (chandbali) இந்த உடைக்கு பெர்ஃபெக்ட் ஜோடி.

`பிங்க்' என்றாலே `மை சாய்ஸ்' என பெண்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்குவார்கள். அந்த பிங்க் கலரிலேயே லைட், டார்க் என எத்தனை ஷேட்ஸ்! இறுதியில் அதிலும் குழப்பம்தான். `லைட்டும் வேண்டாம், டார்க்கும் வேண்டாம். பேஸ்ட்டல்தான் பெஸ்ட் சாய்ஸ்' என்று பேஸ்ட்டல் ஷேட்ஸுக்கு ஓ.கே சொல்லிவிட்டு அப்படியே ட்ரெண்டில் இருக்கும் ஃப்ளோரல் பிரின்ட்ஸை நோக்கி கண்கள் போகும்பொது தென்பட்டதுதான் இந்த அழகிய லெஹெங்கா செட். அதிக வேலைப்பாடுகள் ஏதுமின்றி மிகவும் எளிமையான அவுட்லுக். `டிக்கி' (tikki) எனப்படும் போலியான கண்ணாடிகளை விளிம்புகளிலும் ஸ்லீவ்களிலும் பொருத்தி மெருகேற்றச் செய்திருக்கிறது. டிக்கி, வேலைப்பாடுகளுடன்கூடிய துப்பட்டா இருக்கும்போது சோக்கர், நெக்லஸ்களுக்கு வேலை இல்லை. நெற்றி நிரம்பச் சுட்டி, கைநிறைய வளையல்கள், ஜிமிக்கி கம்மல் எனப் புதுத் தோற்றத்தைப் பெற்றிடுங்கள்.

`எப்போதும் இருக்கும் லெஹெங்கா ஸ்டைல் போர் அடிக்குதுப்பா! புதுசா கான்டெம்ப்ரரி ஸ்டைல்தான் வேணும்'னு நினைப்பவர்களுக்கு இந்த லெஹெங்கா பிளவுஸ் சரியான தேர்வு. ரிதமிக் பேட்டர்னில் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இந்த லெஹெங்காவுக்கு சாலிட் முழு நீள கை பிளவுஸ் ப்ளஸ். லெஹெங்காவின் நிறம் என்னவாக இருந்தாலும் இந்த பிளைன் பிளவுஸ் எடுப்பாகத்தான் இருக்கும். கோல்டன் சோக்கர், சான்ட்பாலி ஆகியவை பெர்ஃபெக்ட் பார்ட்னர்ஸ்.

‘ஷார்ட் சோலி போட வீட்டுல தடா'னு ஃபீல் பண்றதை விட்ருங்க. உங்களுக்காகவே இப்போ ஏகப்பட்ட டிசைன்ல லாங் சோலி லெஹெங்கா செட் வந்துவிட்டது. கண்ணாடி மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன்கூடிய இந்த லாங் சோலி செட் நம்ம தீபிகா படுகோனுக்கு ரொம்பவே அழகா இருக்கும். ஹய்... நெக் என்பதால் சோக்கர் போன்ற நெக்லஸ் வகைகளுக்கு லீவ். டேங்க்லர்ஸ், மொத்தமான வளையல், ஹை ஹீல்ஸ் அணிந்து இந்த சூப்பர் லாங் சோலி  லெஹெங்காவுக்கு கம்பெனி கொடுக்கலாம்.

ஷார்ட், லாங் லெஹெங்கா ஒரு பக்கம் விற்பனையில் சூடுபிடிக்க, அதற்கும் போட்டி வந்துவிட்டது `கோட் மாடல்'. உங்கள் தனித்தன்மையைக் காண்பிக்க இது ரைட் டிரெஸ். குறைந்தபட்ச எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளைக்கொண்ட இந்தக் கறுப்பு நிற லெஹெங்காவுக்கு ஏற்ற ஹாட் பிங்க் ஃபாயில் பிரின்டட் (foil printed) கோட், பார்ப்பவர்களை மறுமுறைத் திரும்பிப் பார்க்கவைக்கும். `பிளாக் அண்ட் பிங்க்' காம்பினேஷன் எப்போதுமே கிளாசிக் டச். பிளைன் சோலியைகொண்ட இந்த காஸ்ட்யூமுக்கு டேங்க்லர்ஸ், சோக்கர், வளையல், சுட்டி ஆகியவை கிரேட் மேட்ச்.

`ஆஃப் ஷோல்டர் லெஹெங்கா வாங்கியாச்சு, அந்த வகையில் கோல்ட் ஷோல்டர் லெஹெங்காவையும் வாங்கியே ஆகணும்ல. அதுவும் நம்ம ஷ்ரத்தா  கபூர் அணிந்திருக்கும் காம்போ செம கலக்கலா இருக்கே' என்பது பல பெண்களின் மைண்ட் வாய்ஸ். பிங்க் ஃப்ளோரல் எம்ப்ராய்டரி லெஹெங்காவுக்கு ஏற்ற வெள்ளை நிற கோல்டு ஷோல்டர் கிராப் டாப். கழுத்தில் கான்டெம்ப்ரரி சோக்கர், கையில் கஃப்ஸ் (cuffs) என கூல் லுக் கொடுக்கும் இந்த காஸ்ட்யூம்தான் இப்போ காலேஜ் பெண்களின் சாய்ஸ்.

இனி ஷாப்பிங் போறதுக்கு முன்னாடி ட்ரெண்ட்ல இருக்கிற டிரெஸ் மற்றும் அணிகலன்களை லிஸ்ட் போட்டு போங்க. ஷாப்பிங்க ஈஸியா முடிக்கலாம்!