2014 நவம்பர் மாதத்திலிருந்து மொத்த விலை பணவீக்க விகிதம் மைனஸிலும், சில்லறைப் பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்தும் வருகிறது. ஆனால், உள்ளூர் சந்தையில் தக்காளியில் தொடங்கி அனைத்து காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை குறையவே இல்லை என்று சலித்துக்கொள்கிறார்கள் மக்கள். அரசாங்கம் தரும் புள்ளிவிவரங் கள் நடைமுறைக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு என்பதை விசாரிக்க களத்தில் இறங்கினோம்.

நாம் முதலில் சந்தித்தது சென்னை ஆடிட்டர் எம்.சத்திய குமாரை. மொத்த பணவீக்க விகிதம், நுகர்வோர் பணவீக்க விகிதம் எப்படிக் கணக்கிடப் படுகிறது என்று விரிவான விளக்கம் தந்தார் அவர்.

“மொத்த பணவீக்க விகிதம் மற்றும் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டும் நாட்டின் மிகவும் முக்கியமான புள்ளிவிவரங்கள். இதில் மொத்த பணவீக்க விகிதமே அரசாங்கம் பட்ஜெட் போடுவதற்கும், மானியங்கள் ஒதுக்குவதற்கும் அடிப்படை. கடன்களுக்கான வட்டியை ஆர்பிஐ நிர்ணயிப் பதும் நுகர்வோர் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில்தான்.

இந்தப் புள்ளிவிவரங்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மொத்த விலைச் சந்தைகளிலிருந்து பொருட் களின் விலைகள் பெறப்படு கிறது. இப்படிப் பெறப் படும் பொருளுக்கான விலைகள் ஒவ்வொன்றுக் குமான பங்களிப்பு (Weightage) என்ன என்பதைப் பார்த்து அந்தப் பங்களிப்பின் அடிப்படையில் அந்தப் பொருளின் விலை உயர்ந்து உள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை அரசு வெளியிடும்.

ஆனால், நுகர்வோர் பணவீக்க விகிதத்துக்கான கணக்கெடுப்பு என்பது நேரடியாகச் சில்லறைச் சந்தையிலிருந்து பெறப்படுகிறது. முன்பு நான்கு வகையான தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இந்தப் புள்ளி விவரம், தற்போது மூன்று வகையான தொழிலாளர் களிடம் இருந்து பெறப்படுகிறது. அதாவது, தொழிற்துறை தொழிலாளர்கள் (Industrial workers), விவசாயம் சார்ந்த தொழி லாளர்கள் (Agricultural labourers), கிராமப்புற தொழிலாளர்கள் (Rural labourers) தரும் தகவல் களின் அடிப்படையில் நுகர்வோர் பணவீக்க விகிதம் கண்டுபிடிக்கப்படுகிறது.

மொத்த விலை பணவீக்க விகிதத்தில் அனைத்துப் பொருட் களின் விலை குறித்தும் தகவல்கள் பெறப்படும். ஆனால், நுகர்வோர் பணவீக்க விகிதத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள்தான் இருக்கும். இந்தப் புள்ளிவிவரங்கள் ஓரளவுக்குத் தான் உண்மையான விலையுடன் ஒத்துப்போகும்.

அரசின் அனைத்துக் கொள்கைகளுக்கும் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவது மொத்த விலை பணவீக்க விகிதம் தான். ஏனெனில், இந்தப் புள்ளி விவரம்தான் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பின்னர் மாதம் ஒருமுறையும் வெளியாகும்.

நுகர்வோர் பணவீக்க விகிதம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப் படுகிறது. இதில் வெளியிடப்படும் தகவலானது இரண்டு மாதங் களுக்கு முந்தையது. அதாவது, ஏப்ரல் புள்ளிவிவரம் ஜூன் மாதத்தில் வரும். எனவே, இதை வைத்து எடுக்கப்படும் முடிவு லேட்டஸ்ட்டாக இருக்காது. மேலும், இதில் குறிப்பிடப்படும் பணவீக்க விகிதமானது விலைவாசிக் குறைவின் விகித மல்ல. விலைவாசி உயர்வின் விகிதம்தான் குறிப்பிடப்படுகிறது. அதாவது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஒரு பொருளின் விலை உயர்வு 10 மடங்கு எனில், இப்போது 5 மடங்குக்கு விலை உயர்வு அடைந்து வருகிறது என்பதைக் குறிக்கும்” என்றார்.

மொத்த விலை பணவீக்க விகிதத்தில் உள்ள குறையைப் பற்றி மேலும் விளக்கினார் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் இயக்குநர், டாக்டர் கே.ஆர்.சண்முகம்.

‘‘மொத்த விலை பணவீக்க விகிதத்தில் சேவையைக் கணக்கிடமாட்டார்கள். அதாவது, மொத்த விலை பணவீக்க விகிதத்தில், பொருட்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல ஆகும் செலவைக் கணக்கிடுவதில்லை. இந்தச் செலவு உற்பத்திப் பொருளின் விலையைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்கும்.

சேவையைச் சேர்க்காமல் மொத்த விலை பணவீக்க விகிதம் கணக்கிடப்படுவதால், அதைச் சரிசெய்ய சில மாற்றங்கள் (adjustable non inclusive of service) செய்யப்பட்டு, புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகிறது. அதாவது, சேவைக்கு இவ்வளவுதான் செலவாகும் என உத்தேசமாகக் கணக்கெடுத்து, அறிவிப்பார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட ஆண்டை அடிப்படையாக வைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த ஆண்டு மிகவும் பின்னோக்கிய ஆண்டாக இருக்கும். அதாவது, 2012-13ம் ஆண்டுக்கு 2004-05 அடிப்படை ஆண்டாக (Base year) இருக்கும். இந்தப் பத்து வருடத்தில் பல பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்திருக்கும். மக்களின் நுகர்வுக் கலாசாரமே கூட மாறியிருக்கும். அதை யெல்லாம் அந்தக் கணக்கெடுப் பில் எடுத்துக்கொள்ள மாட் டார்கள். இந்த மாற்றங்களைப் பதிவு செய்யவே பல ஆண்டுகள் ஆகும்” என்றார்.

ஆக, மொத்தவிலை பணவீக்க விகிதத்தில் கூறப்படும் விலை யானது உடனடியாகத் தெரியாது. ஏனெனில், பொதுமக்கள் பெரும்பாலும் சில்லறைச் சந்தையில்தான் பொருட்களை வாங்குகிறார்கள். மொத்த சந்தையில் விலை குறைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் சில்லறைச் சந்தையில் விலை குறையும். அப்போதும் அதே அளவுக்குக் குறையும் என்று சொல்லிவிட முடியாது. காரணம், உற்பத்தி நிறுவனங்கள் மூலப் பொருட்களை எடுத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவு, உற்பத்தி செய்த பொருட்களை விளம்பரம் செய்வதற்கான செலவு, ஊழியர் களின் சம்பளம், நிறுவனத்தின் லாபம் என்கிற பல விஷயங்கள் சில்லறைச் சந்தையில் பொருட் களின் விலையை உயர்த்திவிடும்.

அரசு அளிக்கும் புள்ளிவிவரங் களின் அடிப்படையில் எடுக்கப் படும் முடிவுகள் சரியாக இருக்குமா என்பது குறித்து கிரேட்லேக்ஸ் மேலாண்மை கல்லூரியின் இணை பேராசிரியர் சி.ஆர்.ராஜனிடம் கேட்டோம்.

“அரசு வெளியிடும் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாகவே இருக்கும். ஏனெனில், இந்தப் புள்ளிவிவரங்கள் பல்வேறு படிநிலைகளைத் தாண்டி விவரங்கள் சேகரிக்கப் பட்டு, வெளியிடப்படுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் பொதுமக்களுக்கானதல்ல. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசுத் திட்டங்களை வகுக்கவும், முடிவுகள் எடுக்கவும் உதவியாக இருக்கும்.

மொத்த விலை பணவீக்க விகிதம் மற்றும் நுகர்வோர் பணவீக்க விகிதம் இரண்டின் அடிப்படையில் எதிர்கால வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். எனவே, இந்தப் புள்ளி விவரங்களைத் தற்போதுள்ள நிலையோடு அல்லது சாதாரண விலைவாசியுடன் ஒப்பிடக் கூடாது.
இந்தப் புள்ளிவிவரங்கள் விலைவாசி குறைந்துவிட்டது எனத் தெரிவிக்கவில்லை. விலைவாசி உயர்வு விகிதத்தைத் தான் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்த அளவில் ஏற்றம் அடைந்து வருகிறது. சில பொருட்களின் விலை வேகமாக ஏறிவருகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை அதிகமாக உயரும்போது அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கும்” என்று முடித்தார்.

சுருக்கமாக, விலைவாசி உயர்வு என்பது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற் காகவே இந்தப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பொதுவான விலைப்போக்கை பரந்துபட்ட அளவில் குறிப்பிடுவதைத்தான் மக்கள் கவனிக்க வேண்டுமே ஒழிய, இதன் ஏற்றத்தாழ்வுகள் அப்படியே சில்லறைச் சந்தையில் பிரதிபலிக்கும் என்று எதிர் பார்க்கக்கூடாது.

இனியாவது இந்தப் புள்ளிவரங்களையும், உண்மை நிலையையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் இருப்போமாக!

படங்கள்: ப.சரவணகுமார்,

இரா.யோகேஷ்வரன்.

இரா.ரூபாவதி