உலகம் முழுக்க அந்தந்தப் பிராந்தியங்களில் அதிகம் பார்க்கப்பட்ட... பகிரப்பட்ட... இன்ஸ்டாகிராம் க்ளிக்களில் சில இங்கே...

கேன்சரால் பாதிக்கப்பட்ட இந்த மூன்று குழந்தைகளும், முன்னர் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்த புகைப்படம்தான் சென்ற வருட வைரல். தற்போது கீமோதெரபி சிகிச்சை முடித்து கேன்சரில் இருந்து மீண்டவர்கள் போஸ் கொடுக்க, 'சூப்பர்ப்பா... முடி வளர்ந்து இன்னும் ஆரோக்கிய மாகிட்டீங்க’ என நெகிழ்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள் இணையர்கள்!

ஓரினச்சேர்க்கை தம்பதி கேலிபும் கோர்டேலும், மூன்று பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார்கள். அவர்கள் மகள்களை பள்ளிக்கு தயார்செய்யும் இந்தப் படம் அப்ளாஸ் அள்ள, நிக்கான் கேமரா நிறுவனம், இந்தத் தம்பதியை வைத்து விளம்பரமே எடுத்துவிட்டது!

தந்தையர் தினம் அன்று மிஸ்டர் ஒபாமாவும் மிஸஸ் ஒபாமாவும் வெவ்வேறு நாட்டில் இருந்திருக் கிறார்கள். அதனால், 'இன்னைக்கும் என்னைக்கும் இந்த இரண்டு குழந்தைகளின் அப்பாவை நினைச்சுப்பேன்’ என இந்தப் படத்தை அப்லோடியிருக்கிறார் மிச்செல் ஒபாமா. 'அன்புள்ள அப்பா...’ என ஒரு பக்கம் கமென்ட்ஸ் கொட்ட, 'வாவ்... டாப்லெஸ் ஒபாமா செம செக்ஸி’ என ஜொள்ளு மழையும் பொழிந்திருக்கிறது!

மைக்கேல் ஜாக்சன் இறந்து ஆறு வருடங்கள் ஆகிறது. அவரது நினைவு நாளில் ரசிகர் ஒருவர் தற்செயலாக வானத்தில் பார்த்தது... இடி மின்னலுக்கு நடுவில் மைக்கேலின் 'மூன் வாக்’ ஸ்டெப்! அதை அப்படியே படம் பிடித்து அப்லோட வைரல் ஹிட்!

படத்தைப் பார்த்ததுமே, 'இப்படியா டைனோசரைக் கொடுமைப்படுத்துவீங்க?’ எனக் கொதி கொதித்திருக்கிறார்கள் பிராணிகள் நல ஆர்வலர்கள். ஆனால், பின்னர்தான் இந்தப் படம் உண்மை அல்ல.... சும்மாச்சுக்கு போட்டோஷாப் காமெடி எனத் தெரிந்து, 'ஆமால்ல, டைனோசர் இப்போ இல்லவே இல்லைல்ல...’ என அசடுவழிந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 104 மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்திருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். அந்தப் படம் வைரல் ட்ரெண்டிங் ஏற, அதன் மூலமே மூவரையும் கண்டுபிடித்துக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். 'கட்டி முடிக்காத கட்டடத்துல ஏறிக் குதிச்சது தப்பா... அதை போட்டோ எடுத்து நெட்ல போட்டது தப்பா?’ எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அந்த ஸ்டன்ட் பாய்ஸ்.

விலை உயர்ந்த காரின் மீது, செல்ல மகள் ஸ்க்ரூ டிரைவரால் கிறுக்கிவைத்தால் கெட்ட கோபம் வரும்தானே! ஆனால், இந்தக் குட்டிப் பெண், தந்தையர் தினத்துக்கு 'மி றீஷீஸ்மீ னீஹ் பீணீபீ’ என காரில் கிறுக்கிவைத்தது, பாச மழை பொழியச் செய்திருக்கிறது. அதோடு வைரல் புகழும்!