வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஷமில் அகமது என்கிற இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த விவகாரம் ஆம்பூரையே போர்க்களம் ஆக்கியிருக்கிறது. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்து, 100-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பின் தவறுகள், அதன் மீதான நடவடிக்கைகள் எல்லாம் தொடரும் நிலையில், தவறின் தொடக்கப்புள்ளி எது?

காவல் நிலைய விசாரணையில் மரணங்கள் நிகழ்வது இது முதன்முறை அல்ல. தேசிய அளவில் 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 1,413 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு குற்றத்தில் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டால், அவரை போலீஸ் விசாரணை செய்யவும், அடிப்படை முகாந்திரம் இருந்தால் கைதுசெய்யவும் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், விசாரணைக் கைதியை பயமுறுத்தி மிரட்ட, அடித்துத் துன்புறுத்த, கொடூரமாகச் சித்ரவதை செய்ய எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், காவல் துறை ஒன்றும் நீதிமன்றம் அல்ல; காவலர்கள், நீதிபதிகளும் அல்ல. காவல் நிலையம் என்பது ஒரு குற்றத்தை விசாரித்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்று தரும் ஓர் இடைநிலை அமைப்பு. ஆனால், நடைமுறை என்ன?

பணபலம், ஆள்பலம் உள்ளவர்களையும், ஆளும் கட்சியின் அதிகார வட்டங்களையும் காவல் துறை பகைத்துக்கொள்வது இல்லை. குற்றவாளிகளாகவே இருந்தாலும் அவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்கிறது. ஆனால் அதிகாரமற்ற ஏழைகள், தலித்கள், சிறுபான்மையினர், பெண்களை மிக மோசமாகக் கையாள்கிறது. சிதம்பரம் பத்மினி தொடங்கி நீலாங்கரை தமீம் அன்சாரி வரை இதற்கு எத்தனையோ உதாரணங்கள். கட்டப்பஞ்சாயத்துகள், பொய் வழக்குகள், புகார் தர வரும் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள், லஞ்சம் என்ற பெயரில் வழிப்பறி செய்தல்... என, காவல் துறையின் செயல்பாடுகள் அனைத்தும் அப்பட்டமான க்ரிமினல் நடவடிக்கைகளாக இருக்கின்றன. ஆனால் இந்த போலீஸ்தான், தங்கள் அடிப்படைப் பிரச்னைகளுக்காகப் போராடும் மக்களை, சமூகவிரோதிகளைப்போல நடத்துகிறது; சமூகவிரோதிகளை, நண்பர்களைப்போல நடத்துகிறது. இதனால்தான் சாதாரண மக்கள் காவல் நிலையத்துக்குச் செல்லவே அஞ்சி நடுங்குகின்றனர்.

காவல் துறையினர் நடத்தும் அத்துமீறல்கள் மீது அரிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், பொதுவாக இந்த அரசும் அதிகாரமும் அவர்களைக் காப்பாற்றவே செய்கிறது. என்கவுன்டர் என்ற பெயரில் வெளிப்படையாக நடத்தப்படும் போலி மோதல் கொலைகள் முதல், விசாரணைக் கைதிகளைச் சித்ரவதைசெய்து உயிரைப் பறிப்பது வரை, எது குறித்தும் காவல் துறைக்கு அச்சம் இல்லை. அதனால்தான் அவர்கள் மிகுந்த துணிவுடன் இத்தகைய இரக்கமற்ற குற்றங்களில் திரும்பத் திரும்ப ஈடுபடுகின்றனர்.

ஒரு ரம்ஜான் மாதத்தில், இஸ்லாமியர்கள் செறிவாக வாழும் ஓர் ஊரில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓர் இஸ்லாமிய இளைஞர் காவல் நிலையத்தில் கொல்லப்படுவதால், எத்தனை பெரிய பதற்றம் உருவாகும் என்பதைக்கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை.

போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை தொடர்ந்து அதிகரிப்பது, ஆரோக்கியமான சமூகத்துக்கு நல்லது அல்ல. அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதுதான் இப்போது காவல் துறையின் முன்பு உள்ள சவால். லத்திகளும் துப்பாக்கிகளும் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தமிழ்நாடு காவல் துறை, மனித உரிமை பயிலட்டும்!