Published:Updated:

இது ஈசனுக்கான ஆட்டம்!

பெருமை மிகு பேரூர் கொண்டாட்டம்

##~##

கோவையின் தனிச் சிறப்புகளில் ஒன்று, பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்! மாலை வேளைகளில் பேரூர் ஆற்றுப் பாலத்தைக் கடக்கும்போதே 'துதிப்போர்க்கு வல்வினை போம்... துன்பம் போம்...’ என்று கந்தர் சஷ்டிக் கவசம் காற்றில் கமகமக்கும். அதிலும், கடந்த வாரம் முழுக்க, 'தாம் ததிகிட தீம் ததிகிட’தான். காரணம், நாட்டியாஞ்சலி விழா!

 நிகழ்ச்சியை நடத்தியது, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ். சென்னை      ஸ்ரீசரஸ்வதி  கலாலயாவின் பரத நாட்டியத்தோடு துவங்கியது விழா. 'திருவருட்பா’ பரதநாட்டியம், 'சிவயோகம்’ குச்சிப்புடி நடனம் என்று விழாவின் ஒவ்வொரு நிமிடமும் நளினம்!  

இரண்டாம் நாளில் 'துவக்கங்களின் துணைவனாம் ஆனை முகத்தோனுக்கு வணக்கம்’ என்று விநாயகருக்கு ஒரு பாட லையும் நடனத்தையும் அர்ப்பணித்தனர். யானை முகத்தோனுக்கு அடுத்து, அவன் தம்பி பாலமுருகனுக்கும் ஒரு நடன அரங் கேற்றம். அசுரர்களை வதம் செய்யும் மகிஷாசுரமர்த்தினியின் ருத்ரதாண்ட வத்தில் அனல் கோபத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகளுக்கு பார்வையாளர் கள் இடையே அசுர ஆரவாரம். அந்தக் குபீர் இரைச்சலுக்குக் கோயில் தூண்களில் குடி இருந்த வெளவால்களே சிதறிப் பறந்தன. 'தீராத விளையாட்டுப் பிள்ளை...’ என்று கோகுல கண்ணனின் குறும்புகள் நடன மாக அரங்கேறியபோது அரங்கில் கூடி இருந்த பெண்கள் இடையே வெட்கப் பரவசம்.

இது ஈசனுக்கான ஆட்டம்!

மூன்றாம் நாளில் நடத்தப்பட்ட 'மம்முதா’ நடன நிகழ்ச்சி பரதத்தின் தொன்மையான நடன முறைகளில் ஒன்றாம்!

நாட்டியாஞ்சலி விழாவில் இரண்டு பாடல்களுக்கு கலர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருந்தார் கோவை கிரியாஞ்சலி நாட்டியப் பள்ளியின் இயக்குநர் ஜலதீபா. ''ஒவ்வொரு வருடமும் என்னைப்போன்ற நடனக் கலைஞர்களை ஊக்குவிப்பது இந்த விழாதான். தவிர, எங்களுக்கு அடுத்த ஒரு வருஷத்துக்கான உத்வேகத்தை அளிக்கும் ஒரு சந்தோஷ நிகழ்வு. ஒரு கலை நிகழ்ச்சியை மேடையில் ஆடுவதைக் காட்டிலும் கடவுளின் ஆலயத்தில் ஆடும்போது நடனக் கலைஞர்களுக்கு ஏற்படும் திருப்தியை வர்ணிக்கவே முடியாது.  

இது ஈசனுக்கான ஆட்டம்!

அதிலும் நடனத்தின் நாயகன் ஈசனின் ஆலயத்தில் ஆடும்போது ஏற்படும் பூரிப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இது ஈசனுக்கான ஆட்டம். மேடை ஏறும்போதே, அந்தக் கோபுரத்தை வணங்கிவிட்டு அபிநயிக்க ஆரம்பித்தால், கடைசி வரைக்கும் நம்மை ஓர் அதிர்வு இயக்கிக்கொண்டே இருக்கும். பாதம் மேடையில் படுகிறதா என்பதுகூடத் தெரியாமல் ஆடி முடிப்போம்!'' என்று மெய்சிலிர்க்கிறார்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: செ.பாலநாக அபிஷேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு