Published:Updated:

மூன்றரை மில்லியன் டாலர் இசையின் விலை, பிளாட்பாரத்தில் 32 டாலர்! #FeelGoodStory

மூன்றரை மில்லியன் டாலர் இசையின் விலை, பிளாட்பாரத்தில் 32 டாலர்! #FeelGoodStory
மூன்றரை மில்லியன் டாலர் இசையின் விலை, பிளாட்பாரத்தில் 32 டாலர்! #FeelGoodStory

மூன்றரை மில்லியன் டாலர் இசையின் விலை, பிளாட்பாரத்தில் 32 டாலர்! #FeelGoodStory

ரபரப்பான மாலை நேரம். சாலையில் இருசக்கர வாகனத்தில் விரைந்துகொண்டிருக்கிறோம். பிளாட்பாரத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் `இறைவனிடம் கையேந்துங்கள்...’ பாடிக்கொண்டிருக்கிறார். அச்சு அசல் நாகூர் ஹனிபாவின் குரல். ஒரே விநாடி அதை உணர்ந்தாலும், நின்று கேட்க நேரமில்லாமல் போய்க்கொண்டேயிருக்கிறோம். ரயில் பயணம். எதிர் இருக்கையில், தாயின் மடியிலிருக்கும் குழந்தை நம்மைப் பார்த்து கைவீசிச் சிரிக்கிறது. அதைப் பார்த்து ரசிக்க நமக்கு ஏனோ தோன்றுவதில்லை. கைப்பேசியில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் முழுகிப் போய், வேலை மெனெக்கெட்டு பதிலளித்துக்கொண்டிருக்கிறோம். பௌர்ணமி நிலா, மாலை நேர வானம், நகர்ச் சந்தடியில் அரிதாகக் கூட்டமாகப் பறக்கும் பறவைகள்... என நாம் கவனிக்கத் தவறவிடுவது எத்தனையோ விஷயங்கள். இவையெல்லாம் நம் வாழ்வில் திரும்பவும் ஒருமுறை வரவே வராத தருணங்கள். அந்த மாற்றுத்திறனாளிப் பாடகரின் குரலை மறுபடியும் நாம் கேட்க வாய்ப்பு இல்லாமலேயே போகலாம். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அபூர்வ சிரிப்பு தரிசனம் திரும்ப நமக்கு வாய்க்காமலேயே போகலாம். சில தருணங்கள் எப்போதும் தவறவிடக் கூடாதவை. அதை அழுத்தமாக உணர்த்தும் கதை இது! 

அது 2007-ம் ஆண்டு. ஜனவரி, 12-ம் தேதி. குளிர்காலக் காலை நேரம். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் இருக்கும் எல்’என்ஃபேன்ட் பிளாஸா (L'Enfant Plaza) மெட்ரோ சப்வே ரயில் நிலையம். ஒருவர் தோளில் ஒரு பையுடன் வந்தார். வயது 40-க்குள் இருக்கலாம். அவர் ரயில்வே ஸ்டேஷனின் ஓரமாக இருக்கும் ஓர் இடத்தில் அமர்ந்தார். தோளில் இருக்கும் பையைப் பிரித்தார். அதிலிருந்த வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். 

அது, மனிதர்கள் தங்களின் வேலையின் பொருட்டு அலுவலகம், பணியிடங்கள், பள்ளி, கல்லூரி... என விரைந்துகொண்டிருக்கும் அவசரமான காலை நேரம். அந்த மனிதர் வயலின் வாசிப்பதை எவரும் கவனிக்கக்கூட இல்லை. அவரவர் தங்கள் வேலையில் மும்முரமாகயிருந்தார்கள். அவர் வாசிக்க ஆரம்பித்து, மூன்று நிமிடங்கள் கழிந்திருக்கும். கடந்துபோன ஒரு நடுத்தர வயது மனிதர் இவர் வாசிப்பதைப் பார்த்து நின்றார். ஓரிரு விநாடிகள்தான். தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டார். 

மேலும் ஒரு நிமிடம் கழிந்தது. வயலின் வாசிப்பவர் விரித்திருந்த துணியில் ஒரு டாலர் பணம் விழுந்தது. ஒரு பெண்மணி பணத்தைப் போட்டுவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். 

மேலும் சில நிமிடங்கள்... ஒருவர் இவரருகே வந்தார். நின்றார். குனிந்து ஒரு தடவை வயலின் இசையைக் கேட்டார். திடீரென்று நினைவு வந்தவராக, தன் மணிக்கட்டில் இருந்த வாட்சைப் பார்த்தார். `ஐய்யய்யோ... லேட்டாகிடுச்சே...’ என்று ஓடாத குறையாக, வேகமாக நடந்து போனார். அதற்கடுத்து அவர் இசையைக் கேட்கக் காத்திருந்தது ஒரு குட்டிப் பையன். அவனுக்கு மூன்று வயதிருக்கும். அவனின் அம்மா, அவனை அங்கே நிற்கவிடாமல் பிடித்து இழுத்தபடியிருந்தார். அவன் பிடிவாதமாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான். ஒருவழியாக அம்மா அவனை இழுத்துப் போக, அவன் திரும்பித் திரும்பி இவர் வயலின் வாசிப்பதைப் பார்த்தபடியே சென்றான். 

இந்தக் காட்சிகள் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருந்தன. பல குழந்தைகள் அவர் வயலின் ஓசையைக் கேட்டு நின்றார்களே தவிர, பெரியவர்கள் யாரும் அவரை சட்டைகூடச் செய்யவில்லை. 

அவர் மொத்தம் 45 நிமிடங்கள் வயலின் வாசித்தார். அந்த நேரத்தில் குறைந்தது 1,000 பேராவது அவரைக் கடந்து போயிருப்பார்கள். அவர்களில் ஆறே ஆறு பேர் மட்டுமே நின்று அவர் இசையைக் கேட்டார்கள். அதுவும் முழுமையாக அல்ல, சில நிமிடங்கள்தான். 20 பேர் இவருக்குப் பணம் போட்டிருந்தார்கள். ஆனா, ஒருவர்கூட நின்று கேட்கவில்லை. அந்த இசைக்கலைஞரின் அன்றைய மொத்த வசூல் 32 டாலர். அவ்வளவு நேரம் அவர் வாசித்து முடித்துவிட்டுக் கண்ணைத் திறந்தார்... கைதட்டவோ, அவர் இசையை அங்கீகரித்துப் பாராட்டவோ அங்கு யாரும் இல்லை. 

PC - joshuabell.com

அன்றைக்கு அவரைக் கடந்துபோனவர்கள் யாருக்கும் அவர் எவ்வளவு பெரிய மேதை என்று தெரியாது. அவர் பெயர் ஜோஷுவா பெல் (Joshua Bell). புகழ்பெற்ற வயலின் கலைஞர். உலகின் மிக முக்கியமான வயலின் கலைஞர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர். அன்றைய தினம் அவர் வாசித்த இசையை மூன்று நாள்களுக்கு முன்னால் தான் ஒரு பெரிய அரங்கத்தில் வாசித்திருந்தார். அன்றை தினத்தில் வசூலான தொகை, மூன்றரை மில்லியன் டாலர்.  

இந்த நிகழ்வு அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான `வாஷிங்டன் போஸ்ட்’-டில் ஒரு கட்டுரையாக வெளியானது. பிரபல பத்திரிகையாளர் ஜீன் வீய்ன்கார்ட்டென் (Gene Weingarten) இந்த நிகழ்வை எழுதியிருந்தார். இப்படி எத்தனையோ அரிய விஷயங்களை நாம் கவனிக்காமல், கண்டுகொள்ளாமல் தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம் என்பது உண்மைதானே!

அடுத்த கட்டுரைக்கு