Published:Updated:

தூத்துக்குடிக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்!

தூத்துக்குடிக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்!

##~##

தூத்துக்குடி தெப்பக்குளம் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் அன்று கலகல கலர்ஃபுல் கூட்டம்! காரணம், மாப்பிள்ளை தூத்துக்குடிக்காரர். மணப்பெண் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்.  ''முகூர்த்தத்துக்கு நேரமாச்சு... பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ!'' என்று புரோகிதர் சொன்னதும் ''ஸ்வேதா ப்ளீஸ் கம்!'' என்று அழைக்கிறார் மாப்பிள்ளை செந்தில்குமார். கெட்டிமேளம் கொட்ட, ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார் செந்தில்.  

காதல் டு கல்யாணக் கதை சொல்லத் துவங்கினார் செந்தில். ''கேட்டரிங்ல டிப்ளமோ படிச்சிட்டு பஹ்ரைனில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்கே பயிற்சிக்காக பிலிப்பைன்ஸ் நாட்டுல இருந்து கிறிஸ்டினா மைல்ஸ் வந்து இருந்தாங்க. ஒரு நாள் என் வேலையையும் சேர்த்து முடிச்சுக் கொடுத்தாங்க. அப்படி அப்படியே எனக்கு நிறைய உதவி பண்ண ஆரம்பிச்சாங்க. ஒண்ணாதான் சாப்பிடுவோம். ஒரு நாள் 'ஐ லைக் யூ... ஐ வான்ட் டு மேரி யூ’ன்னு பேப்பரில் எழுதிக் கொடுத்தாங்க. நான் உடனே 'நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது’னு சொல்லிட்டேன். ஆனா, அப்பப்போ லெட்டர் மூலமா என்கிட்டே அவங்க காதலை வெளிப்படுத்திட்டே இருந் தாங்க. எனக்கும் ஒருகட்டத்தில் அவங்களைப் பிடிச்சுப்போய் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். எங்க வீட்டுல சம்மதிச்சுட்டாங்க. ஆனா, அவங்க வீட்ல சம்மதிக்கலை.

தூத்துக்குடிக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்!

நானே பிலிப்பைன்ஸ் போய் அவங்க வீட்ல 10 நாட்கள் தங்கினேன். என் பழக்கவழக்கம், பேச்சு, அணுகுமுறை எல்லாத்தையும் நேரடியாப் பார்த்துப் பிடிச்சுப்போய் அவங்க பெற்றோர் சம்மதம் சொல்லிட்டாங்க!'' - என்று சிரிக்கிறார் புது மாப்பிள்ளை.

தூத்துக்குடிக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்!
தூத்துக்குடிக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்!

தமிழ்நாட்டு முறைப்படி இரண்டு கைகளையும் கூப்பியபடி தமிழில் 'வணக்கம்’ சொல்லி, ஆங்கிலத்தில் தொடர்ந்தார் கிறிஸ்டினா மைல்ஸ் என்கிற ஸ்வேதா. ''சின்ன வயசுல இந்தியாவை சுத்திப்பார்க்க ஆசைப்பட்டேன். இப்போ தமிழ்நாட்டுக்கு மருமகளாவே வந்துட்டேன். தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்யணும்னு ஆசை. அதான் கல்யாணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே தூத்துக்குடி வந்துட்டேன். இங்கே எல்லாரும் கூப்பிடுறதுக்கு சுலபமா இருக்கட்டு மேன்னு என் பேரை ஸ்வேதான்னு மாத்திக்கிட் டேன். கல்யாணத்துக்கு முன்னாடி திருச் செந்தூர் கோயில் போனோம். கல் சிற்பங்கள், கோபுரம், கடற்கரைக் கோயில், குதிரை சவாரி, கோயில் பிரசாதம்னு எல்லாமே பிரமாதம். பஸ், டிரெயின், ஃப்ளைட்ல போயிருக்கேன். குதிரை வண்டில போனது இப்பத்தான். இந்த ஊர் கலாசாரம், மக்கள், இடங்கள் எல்லாமே ரொம்பப் பிடிச்சிருக்கு.     ஐ லவ் தூத்துக்குடி!'' என்று சொல்லி செந்தில்குமாரின் கையை இறுக்கமாகப் பற்றிப் பிடிக்கிறார் ஸ்வேதா!

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு