Published:Updated:

டிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே!

டிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே!

டிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே!

டிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே!

டிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே!

Published:Updated:
டிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே!

சில விஷயங்களை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. அவற்றில் டிரைவிங்கின்போது போன் அட்டெண்ட் பண்ணுவதும் ஒன்று. `வாகனத்தை நிறுத்திவிட்டு போனை அட்டெண்ட் செய்யலாம் அல்லது வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்’ என்ற ஐடியா, வாகனம் ஓட்டும்போது நமக்கு வருவதில்லை. சொல்லப்போனால், போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது.

சிலர் ஹெல்மெட்டுக்குள் போனைச் செருகிக்கொண்டோ அல்லது ப்ளூடூத் மூலம் போன் பேசிக்கொண்டோ வாகனம் ஓட்டுகிறார்கள். `அதான் ரெண்டு கைகளும் ஃப்ரீயாத்தானே இருக்கு!’ என்பது அவர்களது வாதம். இதுவும் சட்டமீறல்தான் நண்பர்களே! சொல்லப்போனால், வாகன விதிமுறை மீறல்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்குப் பிறகு போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

தேனாம்பேட்டை டு திருவல்லிக்கேணி வரை சும்மா ஒரு ரவுண்டு வந்ததற்கே கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட ஸ்பீக்கிங் டிரைவர்களைப் பார்க்க முடிந்தது. சிலர் தவற்றை உணர்ந்து, ``ஸாரி பாஸ்!’' என்றார்கள். பலர் கண்டுகொள்ளவேயில்லை. இதில் கால்டாக்ஸி டிரைவர்களின் நிலை ரெண்டும்கெட்டானாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``எங்க பொழப்பே போன்லதான் சார். கஸ்டமர்கள் ஆப் மூலமாத்தான் சவாரி புக் பண்ணுவாங்க! நாங்க போன் பேசாம வண்டியை எடுக்கவே முடியாது. பேசிக்கிட்டேதான் கஸ்டமர்களை பிக்கப் பண்ணணும். ஆனா, எங்களையும் சில போலீஸ்காரங்க பிடிக்கிறாங்க!’’ என்றார் டாக்ஸி டிரைவர் ஒருவர். அவர் சொல்வதும் சரியென்றாலும், வாகனம் ஓட்டும்போது பேசினால் கான்சென்ட்ரேஷன் டைவர்ட் ஆகும் என்பது நிதர்சனம்தான்.

``கால்டாக்ஸி டிரைவர்களாகவே இருந்தாலும், இந்தச் சட்டம் அவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் காரை நிறுத்திவிட்டுத்தான் போன் பேச வேண்டும். இதுவரை எக்கச்சக்க லைசென்ஸ்களை வாகன ஓட்டிகளிடமிருந்து பறிமுதல் செய்துள்ளோம். இதில் யாரும் விதிவிலக்கல்ல!’’ என்றார், சென்னை டிராஃபிக் கமிஷனர் வேலுச்சாமி.

ஆம்! அவர் சொன்னதுபோல், இந்த ஆகஸ்ட் மாதத்தில் நேற்று வரை அதாவது வெறும் நான்கு மாதங்களில் 27,974 ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்போனுக்கு அடுத்தபடியாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி லைசென்ஸ் இழந்தவர்களின் எண்ணிக்கை 17,203. சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி, ஆட்டோ ஓட்டுநரைக் கொன்ற கார் வழக்குக்குப் பிறகு, கெடுபிடி இன்னும் அதிகமாகியுள்ளது. நேற்று மட்டும் 250 பேருக்கும்மேல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி மாட்டியிருக்கிறார்கள்.

சாலைப் பாதுகாப்பு சம்பந்தமாக, ஏப்ரல் மாதத்தில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இதில் 2016-ம் ஆண்டில் மட்டும் 17,000 சாலை விபத்துகள் பதிவாகியிருந்ததைக் கண்ட சுப்ரீம் கோர்ட் கமிட்டி, `சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்’ எனச் சட்டம் இயற்றியதன் விளைவாகத்தான் இந்த லைசென்ஸ் பறிமுதல்கள்.

விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், 2017-ம் ஆண்டு ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதற்காக லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,974. டிரங்க் அண்ட் டிரைவிங் 17,203. சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றிச் சென்றதற்காக தண்டிக்கப்பட்டவர்கள் 10,121 பேர். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி லைசென்ஸ் இழந்தவர்களின் எண்ணிக்கை 9,200. இன்னும் சில வழக்குகள் என எல்லாமாகச் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட லைசென்ஸ்கள் 77,384.

“இனிமேல் யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்போவதில்லை. குடித்துவிட்டு, போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ், தயவுதாட்சண்யமின்றி கேன்சல் செய்யப்படும்’’ என்று கடுமையாகச் சொன்னார் வேலுச்சாமி.

எனவே மக்களே... பி கேர்ஃபுல்!,  குடிச்சிட்டு, போன் பேசிக்கிட்டே பைக் ஓட்டுறவங்களைச் சொன்னேன்!