##~##

ரிக்கமேடு - பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சுக்காரர்களின் வணிகத் தலமாக இருந்த பகுதி. காலப்போக்கில் இயற்கைச் சீற்றங்களால் அழிந்து, இன்று புதுச்சேரியில் ஆரவாரமற்ற பகுதியாக மாறி உள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிப் பணிகளும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற பல அரிய பொருட்களும் ஏராளம். அரிக்கமேட்டின் வரலாற்றை  'வரலாற்றில் அரிக்கமேடு’  என்ற புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார் வில்லியனூரைச் சேர்ந்த புலவர் ந.வேங்கடேசன். அவரைச் சந்தித்தபோது, அரிக்கமேடு குறித்த பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 ''1938-ல் அரிக்கமேட்டில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது மழை நீரினால் அடித்து வரப்பட்டு பூமியில் இருந்து வெளிவந்த மணிகளையும், பழங்காலக் காசுகளையும், இன்னும் சில விலைஉயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தனர். அதுதான் இங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற அடித்தளம் அமைத்தது. அதன் பின் போஷோ பாதிரி யார், பிரெஞ்சுக் கணிதப் பேராசியர்ழூவோ துப்ராய் ஆகியோர் அரிக்கமேட்டின் மீது கவனம் செலுத்தினர். துப்ராய், பல்லவர் களின் வரலாற்றைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். தொல்பொருள் ஆய்வில் ஆர்வம்கொண்ட அவர் போஷோ பாதிரியாருடன் இணைந்து அரிக்கமேட்டில் ஆராய்ச்சியில் ஈடுபட் டார். இது இந்திய அரசின் கவனத்தை ஈர்த்தது.

வேர்களைத் தேடி....

பின், 1940-களில் மார்ட்டிமர் வீலர் என்பவரை அகழ்வாராய்ச்சிக்காக இந்திய அரசு நியமித்தது. அவர் ஆய்வுசெய்து இந்திய அரசாங்கத்துக்கு ஆண்டறிக்கையும் அனுப்பினார். அதன் பின் 1986-ல் விமலா பெக்லீன் என்ற ஆராய்ச்சியாளர் நடுவண் அரசின் துணையோடு அரிக்கமேட்டில் அகழ்வாராய்ச்சி செய்து, அதன் கண்டு பிடிப்புகளைப் புத்தகங்களாக வெளியிட் டார். புதுச்சேரி பிரெஞ்சு நூலகத்தில் இன்றும் அந்தப் புத்தகங்கள் உள்ளன.

வேர்களைத் தேடி....

அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடித்ததில்முக்கியமானது, கண்ணாடி மணிகளை அறுத்து ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலை அரிக்கமேட்டில் இருந்தது என்ற தகவல். சோழர் காலத்து நாணயங்களும், ரோம் பேரரசன் அகஸ்டஸின் உருவம் பொறித்த நாணயங் களும், புதுச்சேரி என்று பொறிக்கப்பெற்ற பூவராகன் நாணயங்களும், நட்சத்திரச் சின்னம் பொறிக்கப் பெற்ற பகோடாக் களும் இங்கே கிடைத்துள்ளன. இவை எல்லாம் நமக்கு ரோம் நகருடன் மட்டும் இல்லாமல், பிற நாடுகளுடன் இருந்த வணிகத் தொடர்புகளுக்கான ஆதாரங்கள். நாணயங்கள் மட்டும் இல்லாமல், மதுபானங்களையும் எண் ணெய் முதலிய திரவப் பொருட்களையும் ஊற்றிவைக்கும் கூர்முனை மது ஜாடி களும் அப்போது கிடைக்கப்பெற்றன.

புதுவையிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் நெசவுத் தொழில் செய்வோர் அதிக அளவில் இருந்து உள்ளனர். அதற்குச் சான்று 1945-ல் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பந்தர் எனப்படும் பண்டசாலைக் கிடங்கும் பட்டுத் துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் தொட்டிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் ஓடு களும் தமிழ் வரலாற்றில் மிக முக்கிய மானவை.

வேர்களைத் தேடி....

சுடுமண் ஓடுகளில் பழந்தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன. அந்தச் சுடுமண் ஓடுகளை ஆராய்ந்தபோது இந்தப் பகுதியில் ஒருகாலத்தில் சமண மதம் செல்வாக்கோடு இருந்துள்ளது புலப்படுகிறது. ப்ராகிருத மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் சமண மதம் செல்வாக்கோடு இருந்ததற்கான சான்றுகள். கி.பி 11-ம் நூற்றாண்டில் பௌத்த மதம் இந்தப் பகுதியில் பரவி இருந்ததற்குச் சான்றாக இங்கு கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளைச் சொல்லலாம். ழூவோ துப்ராய் புதுச்சேரியில் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல பகுதிகளை அப்போதே குறிப்பிட்டு உள்ளார். தொடர்ச்சியாக ஆய்வு செய்வதன் மூலம், நம் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள முடியும்'' என்கிறார் வெங்கடேசன்.

நம் வேர்கள் விசாலமானவைதான்!

- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு