Published:Updated:

``ரிட்டையர்டு ஆனதும் ஊர் ஊரா போய் வேஷம் கட்டணும்!’’ - `ஏலேலங்கடியோ’ குழுவின் வங்கி அதிகாரி

``ரிட்டையர்டு ஆனதும் ஊர் ஊரா போய் வேஷம் கட்டணும்!’’ - `ஏலேலங்கடியோ’ குழுவின் வங்கி அதிகாரி

``ரிட்டையர்டு ஆனதும் ஊர் ஊரா போய் வேஷம் கட்டணும்!’’ - `ஏலேலங்கடியோ’ குழுவின் வங்கி அதிகாரி

``ரிட்டையர்டு ஆனதும் ஊர் ஊரா போய் வேஷம் கட்டணும்!’’ - `ஏலேலங்கடியோ’ குழுவின் வங்கி அதிகாரி

``ரிட்டையர்டு ஆனதும் ஊர் ஊரா போய் வேஷம் கட்டணும்!’’ - `ஏலேலங்கடியோ’ குழுவின் வங்கி அதிகாரி

Published:Updated:
``ரிட்டையர்டு ஆனதும் ஊர் ஊரா போய் வேஷம் கட்டணும்!’’ - `ஏலேலங்கடியோ’ குழுவின் வங்கி அதிகாரி

கிண்டி அருகில் உள்ள மிகப்பெரிய ஐந்து நட்சத்திர  ஹோட்டல் அது. சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள், மெல்லிய வயலின் இசையுடன் ஆங்கிலப் பாடல்களை இசைக்கும் மேற்கத்திய இசைக் குழுக்கள் மட்டுமே அலங்கரித்துவந்த அந்திப்பொழுதுகளை, கிராமியக் கலைஞர் ஒருவர் வசப்படுத்தினார். அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றின் 99-வது ஆண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில்தான் அரங்கேறியது அந்தக் கிராமிய நடனம்.

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த வங்கி அதிகாரிகளையும் தமிழக கிராமங்களின் திருவிழாவுக்கே அழைத்துச் சென்றது அவரின் நடனம். அம்மனாக, ஒளவையாக, முத்துமாரியாக,  பெண் தெய்வப் பாத்திரங்களாகவே மாறியிருந்தார் ஒரு கலைஞர். அவரின் பெயரைக் கேட்டபோது `ஆல்பர்ட் ராஜ்' என்றார்கள். கிராமத்துத் திருவிழாக்களில்கூட ஆபாச நடனங்கள்தான் தற்போதைய ட்ரெண்டாகியுள்ளன. இந்நிலையில்,  நாட்டுப்புறக்  கலைகளை திருவிழாக்களில், பள்ளி நிகழ்ச்சிகளில், திருமணங்களில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது ஆல்பர்ட் ராஜ் மற்றும் இளங்கோவின் `ஏலேலங்கடியோ!' கலைக்குழு. நாட்டுப்புறக் கலைகள்  குறித்தும்,  நாட்டுப்புறக் கலைஞர்கள் குறித்தும் அவரிடம் பேசினோம்...

``இன்னும் ஆறு மாசம்தான் சார் பேங்க் வேலை. அதுக்கு அப்புறம் ரிட்டையர்டு ஆகிருவேன். அப்புறம் எல்லா ஊர்களுக்கும் போய் வேஷம் கட்டுறதுதான் என் முழுநேர வேலையே" என்ற ஆல்பர்ட் ராஜ், `தொண்டி' அருகில் உள்ள வங்கி ஒன்றில் Deputy Branch Head-ஆக வேலைபார்க்கிறார். `பல வருஷங்களா நாட்டுப்புறக் கலைகள்ல இயங்கிட்டு வர்றேன். சின்னபுள்ளயா இருக்கிறப்பவே நாட்டுப்புறக் கலைகள்ல  ஆர்வம் அதிகம். பேங்க்ல வேலை கிடைச்சப்புறம் வேலை நேரம் போக, மற்ற நேரங்கள்ல என்னோட குழுவுல இருக்கிறவங்களோடு சேர்ந்து நாட்டுப்புறப் பாட்டு, கூத்துனு போயிருவேன். எனக்கு பெண் வேஷம் செட் ஆகுறதால அம்மன், ஒளவையார், மற்ற பெண் வேடங்கள்ல நடிச்சுட்டிருப்பேன். ஆரம்பத்துல சிலர் கிண்டல் பண்ணினாங்க. அதுக்கப்புறம், மக்கள் நிறைய வரவேற்பு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க அத்தனை பேரும் எந்தவொரு வருமானத்துக்காவும் இதைப் பண்றதில்லை. மக்களோட பாராட்டும், எங்களுக்குக் கிடைக்கும் மனநிறைவும்தான் எங்களோட சம்பளம்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நாட்டுப்புறக் கலைகளை, மக்கள் இன்னும் விரும்பிப் பார்க்கிறாங்களா?''

``உண்மையான கலைகளுக்கு மக்கள் மத்தியில் எப்பவும் வரவேற்பு இருக்கும். காலம்காலமா அவங்க நம்பிட்டுவர்ற விஷயங்கள்தான் நாட்டுப்புறக் கலைகள் முழுக்க நிறைஞ்சிருக்கு. அவங்க அதை ரசிக்கிறதால்தான் திருமண வீடுகள்லகூட இந்த மாதிரி கலைகளுக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கிறாங்க. ஆனா, அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டுபோறதுக்கான ஆள்கள்தான் குறைஞ்சுட்டாங்க'' என்றார் ஆதங்கத்துடன்.

வங்கியின் உயர் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரிக்குரிய எந்தவித அடையாளமும் அவரது பேச்சில் இல்லை. பேச்சு முழுக்கவே நாட்டுப்புறக் கலைகள் பற்றியே இருந்தது. எல்லா கலைகளுமே காலநிலைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து மக்களிடையே நிற்கும். ஆனால், நாட்டுப்புறக் கலைகள் இன்று கிராமங்களிலுல்கூட புறக்கணிக்கப்படுகிறது. பாரம்பர்யமாக நாட்டுப்புறக் கலைஞர்களாக இருந்தவர்கள் பலர், அதை கைவிட்டுவிட்டனர். கிராமங்கள் மெள்ள நகரங்களாக மாறிவரும் அதே வேளையில், கிராமத்துக்கே உரிய அடையாளங்கள் அழிந்துவருவது வேதனையளிக்கிறது.

மக்களுக்கு ஒவ்வாத பல மாற்றங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுவதும், வேறு வழியின்றி அதை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதும் அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஒன்றுதான். ஊர்த் திருவிழாக்களின்போது நாடக மேடை அருகில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து விடியவிடிய நாடகங்களைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்த பலரும், இன்று திருவிழாக்களுக்கே செல்ல முடியாத சூழலில்தான் வாழ்கிறோம்; நம் பாரம்பர்யத்தைப் பறைச்சாற்றும் கதைகளையும், கலாசாரப் பாடல்களையும் மெள்ள மெள்ள இழந்துவருகிறோம். அவற்றை மீட்டெடுக்கும் பணி, நம் அனைவருக்குமானது. ஆங்காங்கே எஞ்சி நிற்கும் இதுபோன்ற தன்னார்வலர்களையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு நம் கலையை எடுத்துச்செல்வது அவசியம்.