Published:Updated:

பயணிகள் தகராறு: விமானியின் கோபத்தால் கடத்தல் பரபரப்பு!

பயணிகள் தகராறு: விமானியின் கோபத்தால் கடத்தல் பரபரப்பு!
பயணிகள் தகராறு: விமானியின் கோபத்தால் கடத்தல் பரபரப்பு!
பயணிகள் தகராறு: விமானியின் கோபத்தால் கடத்தல் பரபரப்பு!

திருவனhந்தபுரம்: விமானி அறை அருகே பயணிகள் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர சமிக்ஞை அனுப்பியதால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அபுதாபியில் இருந்து கொச்சிக்கு இன்று வந்த ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோதே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விமானம் கடத்தப்பட்டதாக உணர்ந்து விமானப்பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் விமானத்தை முற்றுகையிட்டு சோதனை இட்டனர். விமானியிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது, பயணிகளில் சிலர் தனது அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாக தெரிவித்த விமானி, அதன் காரணமாகவே அவசர சமிக்ஞை அனுப்பியதாகத் தெரிவித்தார்.

##~~##
எனினும் பயணிகள் இதனை மறுத்துள்ளனர்.கொச்சிக்கு செல்ல வேண்டிய விமானத்தை திருவனந்தபுரத்தில் தரையிறக்கியதை அடுத்தே தாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
விமானியின் அறைக்குள் நுழைய யாரும் முயலவில்லை எனவும் அவர்கள் கூறினர். இதனையடுத்து விமானம் கடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.