Published:Updated:

மெஹந்தியும் ரொமான்ஸும்..!

மெஹந்தியும் ரொமான்ஸும்..!

‘‘திருமண நாள் நெருங்க நெருங்க, உட்சபட்ச டென்ஷன் ஏறியிருக்கும் கல்யாண வீட்டினர், ரிலாக்ஸ் ஆகும் விதமாக, திருமணத்துக்கு முதல் நாள் இரவு நடத்தப்படுகின்றன மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள். சம்பிரதாயம், சாஸ்திரம் என்ற கட்டுப்பாடுகள் அற்ற விழாவாக, மொத்தக் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து, ஜாலியாக ஆடிப்பாடி மகிழ்வதற்கு வாய்ப்பளிப்பதுதான், இந்த நிகழ்ச்சிகளின் ப்ளஸ்!’’ - கைகைள் சிவக்க வைக்கும் மெஹந்தி ஃபங்ஷன் பற்றி, பூரிப்புடன் சொல்கிறார் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் ஷோரினி பானர்ஜி.

மெஹந்தியும் ரொமான்ஸும்..!

‘‘வட இந்தியத் திருமணங்களின் முக்கிய நிகழ்வு, மெஹந்தி ஃபங்ஷன். குறிப்பாக, ராஜஸ்தான், கொல்கத்தாவில் கல்யாணம் அளவுக்கு மெஹந்தி விழாவும் சிறப்பாக நடத்தப்படும். இந்த விழா,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மெஹந்தியும் ரொமான்ஸும்..!

சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் தமிழ்நாட்டுத் திருமணங்களிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தது. இன்றைய இளம் பெண்கள் பலரும் தங்களின் திருமணத்திலும் மெஹந்தி விழா இடம்பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

திருமணத்துக்கு முதல் நாள் மண்டபத்திலோ, பெண் வீட்டிலோ பெண் வீட்டினர்தான் மெஹந்தி விழாவை நடத்துவார்கள். பையன் வீட்டுக்கும் அழைப்பு உண்டு. விரும்பினால் கலந்துகொள்ளலாம். எப்படியும் மாப்பிள்ளை நிச்சயம் வந்துவிடுவார். பெண்ணுடன் ரொமான்ஸ் செய்ய இது ஒரு சூப்பர் சந்தர்ப்பம் ஆயிற்றே!

மெஹந்தி விழாவில் பெண்ணின் அக்கா, தங்கைகள், தோழிகள், உறவுப் பெண்கள் என அனைவரும் குழும, அந்த இடமே பெண்களின் சந்தோஷத்தால், சிரிப்பால், குதூகலத்தால் நிரம்பி வழியும். ஒரு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட், கல்யாணப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், அங்கு வந்திருக்கும் எல்லா பெண்களின் கைகளையும் மெஹந்தியால் அழகாக்குவார். மணப்பெண் கையில் போடும் மெஹந்தியில், சில சர்ப்ரைஸ்கள் உண்டு. மெஹந்தி ஆர்ட்டிஸ்ட், மாப்பிள்ளையின் பெயரைக் கேட்டறிந்து, அவர் பெயரின் எழுத்துக்களை மணப்பெண் கையில் அவர் வரையும் மெஹந்தி டிசைனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதுவார். அவற்றை மணப்பெண் கண்டுபிடிக்க வேண்டும்.

மெஹந்தியும் ரொமான்ஸும்..!
மெஹந்தியும் ரொமான்ஸும்..!

அதேபோல, பெண்ணின் கையில் மெஹந்தி எந்தளவுக்கு சிவக்கிறதோ, அந்தளவுக்கு மாப்பிள்ளையுடன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் என்பதும் நம்பிக்கை. கொஞ்சம் குறைவாகச் சிவந்தாலும், தோழிகள் கலாய்த்து, அந்தப் பெண்ணை பாடாய்ப் படுத்திவிடுவார்கள் என்பதற்காகவே, மணப்பெண் மெஹந்தியை நன்கு சிவக்க வைக்க, விளக்கின் மேலே கையை வைப்பது, மெஹந்தி அழிந்துவிடாமல் கையை பாதுகாத்துக்கொண்டே இருப்பது என... ஒரே குறும்பும், குஷியும்தான்!

மெஹந்தியும் ரொமான்ஸும்..!
மெஹந்தியும் ரொமான்ஸும்..!

இந்த மெஹந்தி வைப்பதற்கு பின் மருத்துவக் காரணமும் உண்டு. திருமண டென்ஷனால் பெண்ணின் உடம்பில் சூடு ஏறியிருக்கும். மெஹந்தியில சேர்க்கக் கூடிய ஆலிவ் ஆயில், யூகலிப்டஸ் ஆயில், எலுமிச்சை எல்லாமே உடலுக்குக் குளிர்ச்சியளிக்கக் கூடியவை. மேலும், மெஹந்திக்கு ஆன்டிபயாட்டிக் குணமும் உண்டு!’’ என்ற ஷோரினி பானர்ஜி இறுதியாகச் சொன்ன விஷயம், ஹைலைட்...

‘‘இந்த மெஹந்தியின் வாசனை, ரொமான்ஸ் உணர்வை இன்னும் தூண்டிவிடும்!’’

- க.தனலட்சுமி

படங்கள்: ஸ்ரீநிவாஸ், அமர் ரமேஷ்