Published:Updated:

எதுக்கு என்ன மேக்கப்..?

பெண் பார்க்கும் சடங்கு, நிச்சயதார்தம், திருமணம், ரிசப்ஷன்...

திருமணத்தின் ஆரம்பமான பெண் பார்க்கும் சடங்கு, நிச்சய தார்த்தம், திருமணம், ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் மேக்கப், ஹேர்ஸ்டைல், ஆடைக்கான ஆலோசனைகள் தருகிறார்கள், சென்னை, ‘பிங்க்ஸ் டிரெண்ட்ஸ்’ பார்லர் நிர்வாகிகள் லாவண்யா மற்றும் பாபி!

எதுக்கு என்ன மேக்கப்..?

பெண் பார்க்கும்போது..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எதுக்கு என்ன மேக்கப்..?
எதுக்கு என்ன மேக்கப்..?

பெண் பார்க்கும் சடங்கு... பெரும்பாலும் வீடு, கோயில்களில் நடைபெறும். அங்கு நார்மலான வெளிச்சம் இருப்பதுடன், பக்கத்தில் இருந்து பெண்ணைப் பார்ப்பார்கள் என்பதால் ஹெவி மேக்கப், ஹேர் ஸ்டைல் வேண்டாம். “ஸ்கின் டோன்”-ஐ கொஞ்சம் ஹைலைட் செய்து காட்டும் லைட் மேக்கப், கண்களுக்கு ஐலைனர், லிப் கிளாஸ் போதும். ஹேர் ஸ்டைலில் புதிதாக எதுவும் முயற்சிக்க வேண்டாம். எப்போதும் சூட் ஆகக்கூடிய ஹேர் டூ செய்துகொள்ளலாம். நிகழ்ச்சி காலை நேரம் என்றால்... லைட் ஷேட் நிற ஆடைகளையும், மாலை என்றால்... டார்க் கலர் ஆடைகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஹெவி வொர்க் ஆடைகள் தவிர்த்து, சிம்பிளாக நகை அணிந்துகொள்ளலாம்.

நிச்சயதார்த்தம்..!

எதுக்கு என்ன மேக்கப்..?
எதுக்கு என்ன மேக்கப்..?

நிச்சயதார்த்தத்துக்கு‘கொஞ்சம் கிராண்ட் லுக்’கில் மணப்பெண் தன்னை பிரசன்ட் செய்துகொள்ளலாம்... படத்தில் உள்ள மாடலைப் போல. பெரும்பாலும் இந்நிகழ்ச்சி மாலை நேரங்களில்தான் நடக்கும் என்பதால், டார்க் கலர் ஆடை சூட் ஆகும். சின்னக் கண்கள் உள்ள பெண்களுக்கு, விழிகளைப் பெரிதாகக் காட்ட லைட் கலர் ஐ-ஷேடோ பயன்படுத்தலாம். மேக்கப் எல்லாம் முடித்த பிறகு ஐ-ப்ரோவை டச்அப் செய்ய வேண்டும். மாடலுக்கு செய்துள்ள ஹைபன் ஹேர் ஸ்டைலை, நீளமான முக அமைப்பைக் கொண்ட பெண்களும், நெற்றி பெரிதாக இருப்பவர்களும், பருக்கள் இருப்பவர்களும் தவிர்க்கவும். இது சின்ன நெற்றியுள்ளவர்களுக்கு சூப்பராக சூட் ஆகும். மாலை நேர நிகழ்ச்சிக்கு கல் நகைகள் அட்ராக்‌ஷன் கூட்டும்.

திருமணம்..!   

எதுக்கு என்ன மேக்கப்..?

மாடலுக்கு போட்டிருப்பது, முகூர்த்தத்துக்கான ஹெவி மேக்கப். அவர் முக அமைப்புக்கு ஏற்றவாறு பின்பக்கமுள்ள பாதி முடியை ஹைபன் மாதிரி செய்து முன்னால் இருக்கும் முடியை நேர் வகிடு எடுத்து பெரிய நெத்திச்சூடி வைத்திருக்கிறோம். நெற்றி பெரிதாக இருப்பவர்களும்

இதே ஹேர் ஸ்டைல் செய்யலாம், பெரிய நெற்றிக்கு பெரிய நெத்திச்சூடி அழகாகத் தெரியும். முகூர்த்தத்துக்கு லைட் கலர் புடவையுடன், பாரம்பர்யமான டெம்பிள் ஜுவல்லரி அணியும்போது, பொருத்தமாக இருக்கும். மேலும், டார்க் கலர்ஸ் பயன்படுத்தி செய்திருக்கும் ஹெவி மேக்கப், லைட் கலர் புடவைக்கு பொருந்திப் போகும். மாடலின் கண்களுக்கு பிரவுன் கோல்ட், யெல்லோ கோல்ட், ஆரஞ்ச், பிங்க் என நான்கு கலர் ஐஷேடோ பயன்படுத்தியிருக்கிறோம். எல்லாமே மேக் புராடக்ட்ஸ். மாடலுக்கு மெலிதான ஐ-லாஷஸ் என்பதால், வால்யூமைஸிங் மஸ்கரா பயன்படுத்தியிருக்கிறோம்.

அவரவர் முக அமைப்பு ஏற்றவாறு, முடியை அங்கங்கே எடுத்துவிடுவது மேக்கப்பை மிக அழகாக்கிக் காட்டும். வட்ட முகம் எனில் காதோரங்களிலும், நீளமான முகம் எனில் நெற்றிப்பொட்டில் இருந்தும் முடியை எடுத்துவிடலாம். ஹெவி மேக்கப் போட்டுவிட்டு, சின்னப் பொட்டு வைக்கக் கூடாது. பெரிய பொட்டாக வைக்க வேண்டும். பார்க்க வித்தியாசமாகத் தெரிந்தாலும், போட்டோவுக்கு அழகாக இருக்கும். வட்ட முகத்துக்கு திலக வடிவப் பொட்டும், நீள முகத்துக்கு வட்டப் பொட்டும் சூட் ஆகும். பொட்டை ஹைலைட் செய்ய அதைச் சுற்றி வொயிட் கலர் அல்லது கல் வைக்கலாம்.

ரிசப்ஷன்..!

எதுக்கு என்ன மேக்கப்..?
எதுக்கு என்ன மேக்கப்..?

ரிசப்ஷன் என்பது டிரெண்டி ஃபங்ஷன் என்பதால், மேக்கப்பிலும் அதைப் பிரதிபலிக்க வேண்டும். நீளமான நெற்றி எனில், பாதி முடியைப் பிரித்து பின்னால் இருக்கும் முடியை ஹைபன் செய்துவிட்டு முன்னால் இருக்கும் முடியை சைட் பார்டிஷன் எடுத்து நெற்றியை எவ்வளவு தூரம் கவர் செய்ய முடியுமோ கவர் செய்யலாம். வட்ட முகம் உள்ளவர்கள் தூக்கி வாரினால் அழகாகத் தெரியும். மாடலுக்கு ஸ்ரீலங்கன் டைப்பில் ஆடை கொடுக்கப்பட்டுள்ளது. இவரின் ஓவல் வடிவ முகத்தை ரவுண்டாகவும், சற்றே தட்டையான மூக்கை ஹைலைட் மூலம் நீளமாகவும் காட்டியிருக்கிறோம். இப்படி மேக்கப்பின் மூலம் நெகட்டிவான முக அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்!

- ந.ஆஷிகா, படங்கள்: ப.சரவணகுமார், மாடல்: சரண்யா