Published:Updated:

சொர்க்கலோகம்...!

சொர்க்கலோகம்...!

சொர்க்கலோகம்...!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால், இப்போது செய்யப்படும் திருமண மேடை அலங்காரங்கள், சொர்க்கத்திலேயே திருமணம் நடப்பது போன்ற பிரமாண்ட அழகை நிகழ்த்திக் காட்டுகின்றன. குறிப்பாக, மலர்களால் அலங்கரிக்கப்படும் மேடையின் அழகைச் சொல்ல, வார்த்தைகள் போதாது! சென்னை ‘ஜீவிதா டெகரேட்டர்ஸ்’ன் உரிமையாளர் தாமோதரன், அதைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.

சொர்க்கலோகம்...!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘பொதுவாக, வெடிங் ஹால் டெகரேஷன் என்பது, பாரம்பர்யம், சமகாலம், மாடர்ன் என மூன்று வகைகளில் செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் முகூர்த்தங்களுக்கு பாரம்பர்ய வகை அலங்காரங்களும், ரிசப்ஷனுக்கு மாடர்ன் அலங்காரங்களுமே தேர்வு செய்யப்படுகின்றன. மாடர்ன் மற்றும் சமகால அலங்கார அமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் விளக்குகள் மற்றும் மலர்கள் உயர்தரமானவையாக தேவைப்படும். பாரம்பர்ய மலர்களான சம்பங்கி போன்றவை பயன்படுத்தப்படும் மேடைகளில், வார்ம் கலர் டெகரேஷன் விளக்குகள் பயன்படுத்தப்படும். மாலை வேளை நிகழ்ச்சி மேடைகளுக்கு, வண்ண வண்ண பூந்தொட்டிகள் மற்றும் அலங்கார மலர்கள் பயன்படுத்தப்படும்!’’ என்றவர், திருமணத்தை எங்கு நடத்துகிறீர்கள் என்பதன் அடிப்படையில், வெடிங் ஹால் அலங்காரத்துக்குத் தேவையான மலர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்கிறார்.

சொர்க்கலோகம்...!

‘‘பொதுவாகவே, மேடை அலங்காரத்துக்கு ஒரே நாளில் வாடிவிடும் தன்மை கொண்ட சாதாரண, விலை குறைந்த மலர்களை விட, நடுத்தர விலை மற்றும் விலை உயர்ந்த மலர்களே பயன்படுத்தப்படுகின்றன. நீடித்து மலர்ந்திருக்கும் இந்த மலர்களே, குளிர் சாதனக்கிடங்கில் வைக்கப்பட்டு, மேடை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மண்டபத்துக்குள் மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்வதற்கும், திறந்த வெளியில் அலங்கார மேடை அமைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மண்டபத்துக்குள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதி இருப்பதனால் நடுத்தர விலை பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. திறந்தவெளியில் திருமண அலங்கார மேடை அமைக்க, விலை உயர்ந்த வண்ண மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, திருமண நாளுக்கு முதல் நாளே மண்டபத்துக்கு வந்து இறங்கிவிடும் அலங்கார மலர்கள். அதுவே, ரிசப்ஷன் போன்ற திறந்தவெளி மேடை என்றால், நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே கொண்டு வரப்படும்!’’ என்ற தாமோதரன், வெடிங் ஹால் டெகரேஷனின் விலைப் பட்டியல் பற்றியும் பேசினார்.

‘‘தீம் மற்றும் டிசைனைப் பொறுத்தும், திருமணம் நடக்கும் இடம், தேதி, நேரம் மற்றும் மண்டபத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலும் விலை நிர்ணயிக்கப்படும். ஏனெனில், அலங்காரப்பொருட்கள் மற்றும் பூக்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் வேலையாட்களின் எண்ணிக்கையும் விலையை நிர்ணயிக்கும். ஆரம்ப விலையாக, 30,000 ரூபாய் முதல் திருமண ஹால் மற்றும் ரிஷப்சன் ஹால் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன!’’ எனும் தாமோதரன், சமீபத்தில் திரைப்பட இயக்குநர் அட்லி - பிரியா திருமணத்தில் 4.5 லட்ச ரூபாய் செலவில் வெடிங் ஹால் அலங்கரிக்கப்பட்டதைக் குறிப்பிட, பெர்சனல் குறிப்பு கொஞ்சம் கேட்டோம்.

சொர்க்கலோகம்...!

‘‘பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் அம்மா, மாமா அனைவரும் சவுண்ட் அண்ட் லைட்ஸ் துறையில் இருப்பவர்கள். ‘நாம ஸ்டேஜ் டெகரேஷன் பண்ணலாமே’ என்று வேலையை விட்டுடுவிட்டு, 10 வருடங்களுக்கு முன் நான் இந்தத் துறைக்கு வந்தபோது, மக்கள் எங்களை வெகு சாதாரணமாகத்தான் பார்த்தார்கள். வருந்தாமல், படித்தவர் களும் இந்தத் துறைக்கு வரலாம் என்று நிரூபிக்க கடுமையாக உழைத்தேன். ஒரே வருடத்தில் தொழில் பிக் அப் ஆனது. சின்ன பட்ஜெட்டிலும் மெனக்கெடலுடன் அழகு சேர்ப்பதும், ‘இது ‘ஜீவிதா’ டெகரேட்டர்ஸ் டிசைன் ஆச்சே!’ என்று மக்கள் பார்த்தவுடன் கண்டுபிடிக்கிற அளவுக்கு பிரத்யேகத்தன்மையோடு இயங்குவதும்தான் எங்கள் சிறப்பு!’’ என்று பெருமிதத்துடன் சொல்லும் தாமோதரன், இப்போது பல வி.ஐ.பி வீட்டுத் திருமணங்களில் பிஸி!

- ர.நந்தகுமார்