Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''எல்லா நல்லவனுக்கு உள்ளேயும் ஒரு கெட்டவன் இருக்கிறான். இந்த டிவைடிங் மெஷின் அந்த நல்லவனையும் கெட்டவனையும் தனித்தனியா பிரிச்சுக் கொடுத்திடும். அப்புறம் அந்தக் கெட்டவனை அழிச்சுடலாம். நீ தைரியமா உள்ளே போ' என்றார் இன்வென்டர் கிருஷ். 

அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.

கிருஷ் ஸ்விட்ச் ஆன் பண்ணினார். பீப்... பீப்... பீப். திட்டம் வெற்றி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அஞ்ஞானச் சிறுகதைகள்

இரண்டு அர்ஜுன்கள் வெளியே வந்தனர்.

கிருஷ் துப்பாக்கியைக் கையில் எடுத்து, 'இப்போ நல்லவன், கெட்டவனைச் சுட்டுவிடலாம். இதோ துப்பாக்கியை வாங்கிக்கோ' என்றார்.

இரண்டு பேருமே துப்பாக்கியை வாங்க கை நீட்டினார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள்

கேள்வியின் காலண்டர்!

போர், எப்போதுமே மனிதர்களுக்கும் சமூகத்தின் ஆழ் மனதுக்கும் ஆறாத வடுக்களை அளித்துவிடுகிறது. அடுத்த தளத்தை நோக்கி நகரும் மனித சமூகம், போரை ஒருபோதும் கொண்டாடக் கூடாது. அது மனிதகுலத்தால் கைவிடப்படவேண்டிய ஒன்றுதானே?

கடந்த பல வருடங்களாக அமெரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதியின் பெயரால் பல போர்களைத் தொடுத்து வருவது முரண். அதன் இழப்பு அந்த நாடுகளுக்கு மட்டும் அல்ல, அமெரிக்க மக்களுக்கும்தான். அமெரிக்க ராணுவத்தில், தங்கள் உறவுகளை இழந்த எத்தனையோ அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அமெரிக்காவுக்கு உள்ளேயே போருக்கு எதிரான மனநிலையே இருக்கிறது.

அஞ்ஞானச் சிறுகதைகள்

போரில் உடல் உறுப்புகளையும் தன்னம்பிக்கையும் இழந்து, மூலையில் ஒடுங்கிப்போன முன்னாள் ராணுவ வீரர்கள் பலரை வைத்து, ஒரு ஃபேஷன் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்டாக்ஸ்.

'சிலர் என்னிடம் சொல்வார்கள், நான் அவர்களின் தன்னம்பிகையையும் சுயமரியாதையையும் மீட்டு எடுக்கிறேன் என்று. உண்மையில் அவை அவர்களுக்கு உள்ளேயே இருக்கின்றன. அவற்றை நான் பதிவு மட்டுமே செய்கிறேன்'' என்கிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள்

சாதாரணமாகப் பார்ப்பதற்கு வழக்கமான ஃபேஷன் படங்கள் போலவே தோன்றும் இந்தப் புகைப்படங்கள், சற்று கவனித்துப் பார்க்கும்போது நம்மைத் திடுக்கிட செய்கின்றன. மாடல்கள்போல போஸ் கொடுத்தாலும், அவர்களின் வலி நம் மனதின் எங்கோ ஒரு மூலையில் கேள்விகளை எழுப்புகிறது. இந்தப் புகைப்படங்களை, ‘Always Loyal’  என்ற தலைப்பில் ஒரு காலண்டராகவும் போட்டு மக்களிடம் கொண்டுசென்றார் ஸ்டாக்ஸ். இந்தத் தலைப்பில் இருக்கும் முரண், என்னைக் கவர்கிறது. ‘ Loyal’  என்றால் விசுவாசம். விசுவாசத்தின் பரிசு இதுதானா?

அஞ்ஞானச் சிறுகதைகள்

இந்தப் புகைப்படங்களை மொத்தமாகப் பார்க்கும்போது தோன்றும் வாசகம், 'யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்’!

அஞ்ஞானச் சிறுகதைகள்

'கனவு காணுங்கள்’ என அப்துல் கலாம் சொன்னது, இதை எழுதும்போது ஞாபகம் வருகிறது. அவர் சொன்னது 'லட்சியக் கனவு’. நாம் தூங்கும்போது காணும் கனவுகளுக்கு உண்மையில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சி, சிக்மண்ட் ஃப்ராய்டு காலத்தில் இருந்து நடந்துவருகிறது.

சமகாலத்தின் சில உளவியல் வல்லுநர்கள், பல ஆய்வுகளுக்குப் பின் கனவுகளுக்குக் கொடுக்கும் அர்த்தங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

எங்கிருந்தோ விழுவதுபோல கனவு கண்டால், அதன் அர்த்தம், உங்களுக்கு வேலையிலோ, உறவுகளிலோ சிக்கல் இருக்கிறது.

கனவில் அம்மணமாகத் தோன்றி, 'அச்சச்சோ...’ எனப் பதறினால், நீங்கள் சமீபத்தில் புரமோஷன் வாங்கியவராகவோ, புது வேலைக்குப் போக இருப்பவராகவோ அல்லது ஏதாவது மேடையில் பேசுபவராகவோ இருக்கலாம். இதற்கான காரணம், உங்களின் தன்னம்பிக்கை மீது உங்களுக்குத் தோன்றும் சந்தேகம் என்கிறார்கள்.

ஏதாவது பரீட்சை எழுதி நாக்கு தள்ளுகிற மாதிரி கனவு வந்தால், படிப்பை முடித்து புதிய வேலைக்குப் போகத் தயாராக இருப்பவராக இருக்கலாம்.

கனவில் ஏதாவது மரணம் வந்தால், பயப்படத் தேவை இல்லை. அதாவது வாழ்க்கையில் அதுவரை இருந்த சில பிரச்னைகள் முடிவுக்கு வந்து, நல்ல விஷயங்கள்  நடக்கப் போவதற்கான பாசிட்டிவ் சிக்னல் அது என்கிறார்கள்.

கனவில் நீங்கள் ஏதாவது பிரபலத்துடன் பேசிக்கொண்டிருந்தால், உங்கள் மனம் ஏதோ ஒரு வகையில் சமூக அங்கீகாரத்துக்காக ஏங்குகிறது என அர்த்தமாம்.

கனவில் யாராவது துரத்த, நீங்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவதாகக் கனவு கண்டால், கவலை வேண்டாம். பிரச்னைகளை எதிர்கொள்ள மனம் தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறி அது.

பறப்பதுபோல கனவு வந்தால், தற்போதைய பிரச்னைகளில் இருந்து தப்பிக்க மனம் ஏங்குகிறது என அர்த்தமாம்.

சிலருக்கு, பல் விழுவதுபோல கனவு வருமாம். கனவைப் பொறுத்தவரை, பல் என்பது அதிகாரத்தின் குறியீடு. தங்களின் அதிகாரம் பறிபோய்விடுமோ என்கிற பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கனவு என்கிறார்கள். நம் ஊரில் எத்தனை அரசியல்வாதிகள்

அஞ்ஞானச் சிறுகதைகள்

நடுராத்திரியில் இந்த மாதிரி 'பல் விழும்’ கனவு கண்டு பதறி எழுந்து நடுநடுங்கிக்கொண்டிருக்கிறார்களோ!

'' 'ஆடிக் காத்துல அம்மியும் நகரும்’பாங்க, இப்ப ஆடித் தள்ளுபடியால டிராஃபிக் இம்மியும் நகர மாட்டேங்குதே!' எனச் சலித்துக்கொண்டான் கார்ப்பரேட் சித்தன்!