Published:Updated:

ஆடை, அலங்காரம், அணிகலன்... ஏ டு இசட் கைடு !

ஆடை, அலங்காரம், அணிகலன்... ஏ டு இசட் கைடு !

திருமணத்தில் ஆடை, அலங்காரம், அணிகலன்கள் விஷயத்தில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், ஏதோ ஒன்றில், 'இதை இப்படிப் பண்ணியிருக்கலாமே?!’ என்று வருந்துவோம். ''அப்படி எந்த வருத்தமும் இல்லாமல், அனைத்தையும் பர்ஃபெக்டாக முடிக்க, இந்த முன் யோசனைகள் உதவும்!'' என்று, சென்னை, ஷெனாய் நகர் 'நியூ ஸ்டைல் டிரெண்ட்’ உரிமையாளர், பியூட்டிஷியன் ராதா வழங்கிய டிப்ஸ்கள் இங்கே! 

ஆடையில் கவரும் அழகிய திருமணம்..!

பட்டுப்புடவைகளில் இருக்கும் அட்டாச்டு பிளவுஸ்கள் அனைத்தையும் கல்யாணத்தின்போதே தைப்பதற்குப் பதிலாக, டிசைனர் பிளவுஸ்களை தைத்து வைத்துக்கொள்ளலாம். திருமணத்துக்குப் பின் உடல்வாகு மாற்றம் பெறும். பின் அதற்கேற்ற அளவில் பட்டுப்புடவை பிளவுஸ்களை ஒவ்வொன்றாகத் தைத்துக் கொள்ளலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடை, அலங்காரம், அணிகலன்... ஏ டு இசட் கைடு !

திருமண சீர்வரிசை உடைகளை நீண்ட நாட்களுக்கு அணியாமல் பீரோவுக்குள்ளேயே வைத்திருப்பதைத் தவிர்க்கவும். குறைந்தது ஆறு மாதத்துக் குள்ளாவது உடுத்திவிடுங்கள். அல்லது, ஃபேனில் அவ்வப்போது உலர்த்தி வையுங்கள்.

சேலையில் முன்பக்கம் மற்றும் முந்தானையை மடிப்பு எடுத்துவிட்டு, அதை ஹேர் அயர்னர் கொண்டு அயர்ன் செய்து, கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் சாரி ஸ்டேப்ளரைக் கொண்டு பின் செய்துவிட்டால், மடிப்பு அப்படியே இருக்கும்.

ஜுவல்லரி கேர்... சூப்பர் லுக்!

தங்க நகை வாங்கும்போது, கற்கள் வைத்த வளையலில் அதிக தங்கம் வீணாவதால் அதையும், கம்பி போல் நீட்டிக்கொண்டிருக்கும் டிசைன் ஆடையில் பட்டு இழுத்து சேதமடையும் என்பதால் அதையும் தவிர்க்கவும்.  

இமிட்டேஷனில் கிளிட்டர் வளை யல்கள் கை, முகம், கழுத்து என்று ஜிகுஜிகுவென ஒட்டி, மேக்கப்பை கெடுத்துவிடும் என்பதால், பிளெய்ன் அல்லது கல் வைத்த வளையல்கள் வாங்கவும்.  

அம்மி மிதிக்கும்போது, பாத பூஜையின்போதெல்லாம் அனைவரின் கண்ணிலும் படும் என்பதால், கிராண்ட் கொலுசு அணிந்துகொள்ளலாம்.

ஆடை, அலங்காரம், அணிகலன்... ஏ டு இசட் கைடு !

மேக்கப் மேஜிக்!

தினமும் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். அது அழகு குறையாமல் காக்கும். கண்ணுக்குக் கீழ் கருவளையங் கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக் கருவைத் தேய்த்து, உலர்ந் ததும் கஞ்சித் தண்ணீ­ர் கொண்டு கழுவவும்.

நலங்கு மாவுடன் மஞ்சள்தூள் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் என்று தெரியும். பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொண்டால், அழகு கூடும்.

ஹேர்ஸ்டைல் கலர்ஃபுல்... ஹேப்பி வெடிங்!

மாலை ரிசப்ஷனுக்கு ஃப்ரீஹேர் மற்றும் ஃப்ளவர் டிசைனிங், இப்போது டிரெண்ட். ஸ்டோன் வொர்க் கிளிப்ஸ், டிசைனிங் ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்தலாம்.

மணப்பெண்ணின் முகத்துக்கு மேற்புறம் செய்யும் சிகையலங்காரம், 'ஃப்ரன்ட் செட்’. அதற்கு ஏற்றாற்போல பின்புறக் கேசத்தை அலங்கரிக்க வேண்டும். பின்னல், பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் என பொருத்தமானதை செய்துகொள்ளலாம்.

எக்காரணம் கொண்டும் மேக்கப், அலங்காரம், ஆடை போன்ற விஷயங்களில் திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். இது தேவையில்லாத பதற்றத்தைக் கொடுக்கும்.

வே.கிருஷ்ணவேணி

படங்கள்: எம்.உசேன், அசோக் அர்ஸ்,

சந்துரு பாரதி, ஸ்ரீ நிவாஸ், முனிஷ்